பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 Hyundai i20 N Line!!

2021 Hyundai i20 N Line மாடல் இந்திய டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

Hyundai India நிறுவனம் அதன் முதல் N Line மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. நாளை (ஆகஸ்ட் 24) இந்த புதிய Hyundai கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

i20 N Line என்பது ஏற்கனவே விற்பனையில் இருக்கும் Hyundai i20 ஹேட்ச்பேக் காரின் செயல்திறன்மிக்க வெர்சன் ஆகும். இந்த செயல்திறன்மிக்க i20 கார் தொடர்பான டீசர் வீடியோக்களை Hyundai நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வந்தது. அவற்றின் மூலம் இந்த புதிய காரை பற்றிய விபரங்களை ஓரளவிற்கு அறிந்திருந்தோம்.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் எடுக்கப்பட்ட Hyundai i20 N Line கார் ஒன்றின் ஸ்பை படங்கள் டுஷார் பவார் என்பவர் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. இந்த படங்களில் சிறிது மறைப்புகளால் மறைக்கப்பட்ட i20 N Line கார் ஒன்று கண்டெய்னர் லாரியில் ஏற்றப்படுகிறது.

நமக்கு தெரிந்தவரையில் தொழிற்சாலையில் இருந்து டீலர்ஷிப் ஷோரூமிற்கு கொண்டு செல்லும்போது இந்த ஸ்பை படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம். மேலும் இந்த ஸ்பை படங்களில் புதிய தொகுப்பில் அலாய் சக்கரங்களை இந்த செயல்திறன்மிக்க i20 கார் கொண்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

கிட்டத்தட்ட இதே டிசைனிலான அலாய் சக்கரங்கள் தான் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள i20 N Line மாடலிலும் வழங்கப்படுகின்றன. அதேபோல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ள i20 N Line காரும் இரட்டை முனைகளை கொண்ட எக்ஸாஸ்ட் அமைப்பை கொண்டுள்ளதையும் இந்த படங்களில் காண முடிகிறது.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

இவற்றுடன் இந்த செயல்திறன்மிக்க காரின் தோற்றத்தில் கொண்டுவரப்பட உள்ள மாற்றங்கள் யாவும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளவை எவை எவை என்பதை நம்மால் ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது. அதாவது காரின் பின்பக்க அடிப்பகுதி மறைக்கப்பட்டுள்ளதால், பின் பம்பரில் faux diffuser வழங்கப்படலாம்.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

அதேபோல் மறைக்கப்பட்டுள்ள பக்கவாட்டின் கீழ்பகுதியில் கூடுதல் அடிப்பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த படங்களில் காரின் முன்பக்கத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் டீசர்களின் மூலமாக புதிய i20 N Line காரின் முன்பக்கத்தை காண நேர்ந்தது.

முன்பக்கத்தில் இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் புதிய க்ரில் பகுதியை பெற்று வரவுள்ளது. முன்பக்க பம்பரின் வடிவம் சற்று மாற்றியமைக்கப்பட உள்ளது. மேலும், புதிய வடிவில் ஃபாக் விளக்குகளையும் i20 N Line காரில் எதிர்பார்க்கிறோம். வெளிப்பக்கத்தை போல் இந்த புதிய i20 காரின் உட்புறத்திலும் சில கவனிக்கத்தக்க அப்டேட்கள் வழங்கப்படலாம்.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

அதாவது புதிய ஸ்டேரிங் சக்கரம் மற்றும் புதிய பெடல்கள் உடன் அப்டேட் செய்யப்பட்ட உள்ளமைவில் i20 N Line காரின் உட்புற கேபின் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். இவற்றுடன் முன் வரிசையில் பக்கெட் இருக்கைகளையும், கேபினை சுற்றிலும் அப்கிரேட் செய்யப்பட்ட விளக்கு அமைப்பையும் i20 N Line பெற்றிருக்கலாம்.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

இருப்பினும் டேஸ்போர்டின் வடிவத்தில் மாற்றம் இருக்காது. அதேபோல் டேஸ்போர்டின் மீது வழங்கப்படும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்ற தொழிற்நுட்ப அம்சங்களிலும் கூட எந்த அப்கிரேடும் இருக்காது.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

புதிய i20 N Line காரில் ஒரே ஒரு 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மட்டுமே தேர்வாக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிகப்பட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படலாம்.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

செயல்திறன்மிக்க வெர்சன் என்பதால், காரின் சஸ்பென்ஷன் அமைப்பிலும், ஸ்டேரிங் சக்கரத்திலும் மேம்பட்ட ஹேண்ட்லிங்கிற்காக சில மாற்றங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். Hyundai i20 N Line என்6 ஐஎம்டி, என்8 ஐஎம்டி & என்8 டிசிடி என்ற மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பக்கா ஸ்டைலிஷான தோற்றத்தில், ஷோரூமிற்கு கொண்டுவரப்படும் 2021 2021 Hyundai i20 N Line!!

வழக்கமான i20 மாடலின் செயல்திறன் வெர்சனாக கொண்டுவரப்படும் இதன் எக்ஸ்-ஷோரூம் விலையினை ரூ.12 லட்சத்தில் இருந்து எதிர்பார்க்கிறோம். விற்பனையில் இந்த Hyundai காருக்கு போட்டியளிக்கும் விதத்தில் Volkswagen Polo GT TSI மற்றும் Tata Altroz i-Turbo உள்ளிட்ட கார்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன.

Most Read Articles

English summary
2021 Hyundai i20 N Line Starts Arriving At Dealerships Ahead Of Debut.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X