புதிய ஹூண்டாய் ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் புதிய ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 புதிய ஹூண்டாய் ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

ஹூண்டாய் நிறுவனம் ஸ்டாரெக்ஸ் என்ற எம்பிவி காரை வெளிநாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த கார் சில நாடுகளில் ஹூண்டாய் H1 என்ற பெயரில் விற்பனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்களுடன் புதிய எம்பிவி கார் மாடலை ஸ்டாரெக்ஸ் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்துள்ளது ஹூண்டாய்.

 புதிய ஹூண்டாய் ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

ஹூண்டாய் ஸ்டாரியா என்ற பெயரில் இந்த புதிய மாடல் வர இருக்கிறது. அண்மையில் டீசர்களை வெளியிட்ட ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்த மாடலை அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

 புதிய ஹூண்டாய் ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

புதிய ஹூண்டாய் ஸ்டாரியா எம்பிவி கார் 9 சீட்டர் முதல் 11 சீட்டர் வரையிலான இருக்கை வசதி கொண்ட மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. பழமையான டிசைன் அம்சங்களுடன் நவீன தொழில்நுட்பங்களை கலந்து கட்டி புதிய ஸ்டாரியா எம்பிவி கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய ஹூண்டாய் ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

புதிய ஹூண்டாய் ஸ்டாரியா எம்பிவி காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், பானட்டில் மெல்லிய கோடு போன்று ஒளிரும் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகளுடன் மிக பிரம்மாண்டத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது ஸ்டாரியா.

 புதிய ஹூண்டாய் ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

இந்த காரில் சொகுசு அம்சங்களுக்கும், வசதிகளுக்கும் பஞ்சமில்லை. இரட்டை வண்ணத்தில் இன்டீரியர் பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்டர் கன்சோலில் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிக நேர்த்தியான டேஷ்போர்டு அமைப்பு ஆகியவை கவர்கிறது.

 புதிய ஹூண்டாய் ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

எலெக்ட்ரிக் ஸ்லைடிங் டோர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் சாய்மான வசதியுடன் கேப்டன் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

 புதிய ஹூண்டாய் ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

இந்த காரில் இடம்பெர இருக்கும் எஞ்சின் விபரங்கள் குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகளில் புதிய ஹூண்டாய் ஸ்டாரியா கார் வரும் வாய்ப்புகள் உள்ளன. இந்த காரில் 290 பிஎஸ் பவரையும், 338 என்எம் டார்க்கையும் வழங்கும் 3.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

 புதிய ஹூண்டாய் ஸ்டாரியா 11 சீட்டர் எம்பிவி கார் வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை

டொயோட்டா ஹை ஏஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு ஹூண்டாய் ஸ்டாரியா நேரடி போட்டியாக இருக்கும். ஆனால், இந்தியாவில் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. எனினும், ஸ்டாரியா என்ற பெயரை ஹூண்டாய் பதிவு செய்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

Most Read Articles

English summary
Hyundai has revealed all new Staria MPV car globally and it will come with 9 to 11 seater options.
Story first published: Friday, March 19, 2021, 14:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X