புதிய ஹூண்டாய் வெர்னா கார் வருகை குறித்து வெளியான தகவல்!

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் வருகை குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் வருகை குறித்து வெளியான தகவல்!

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் டாப்-3 மாடல்களில் ஹூண்டாய் வெர்னா கார் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்தநிலையில், புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட் உள்ளிட்ட மாடல்களால் கடுமையான சந்தைப் போட்டி இருந்து வருகிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் வருகை குறித்து வெளியான தகவல்!

இதனை மனதில் வைத்து வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறப்பாக மேம்படுத்தப்பட்ட புதிய வெர்னா காரை ஹூண்டாய் களமிறக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் வருகை குறித்து வெளியான தகவல்!

அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2023ம் ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய மாடலை எதிர்பார்க்கலாம். புதிய தலைமுறை வெர்னா கார் முற்றிலும் புதிய கட்டமைப்புக் கொள்கையில் வடிவமைக்கப்படும்.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் வருகை குறித்து வெளியான தகவல்!

சென்சுவல் ஸ்போர்ட்டினெஸ் பிலாஸபி என்ற அந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட எலான்ட்ரா காரின் டிசைன் அம்சங்கள் புதிய வெர்னா காரிலும் எதிர்பார்க்கலாம். மேலும், பரிமாணத்தில் பெரிய மாடலாக இருக்கும் என்பதால், அதிக இடவசதியை பெற்றிருக்கும்.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் வருகை குறித்து வெளியான தகவல்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். தவிரவும், சிவிடி மற்றும் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வரும் என நம்பலாம்.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் வருகை குறித்து வெளியான தகவல்!

புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ கார்கள் வர இருப்பதால், வெர்னாவை மேம்படுத்தப்பட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு பிற்பாதியில் புதிய வெர்னாவை ஹூண்டாய் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Via- காடிவாடி

Most Read Articles

English summary
According to report, Hyundai motors is likely to bring new gen Verna car by second half next year.
Story first published: Saturday, May 29, 2021, 12:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X