அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

2021 ஜீப் க்ராண்ட் செரோக்கியின் அப்டேட் செய்யப்பட்ட டிசைன் மற்றும் கூடுதல் தொழிற்நுட்ப அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

அமெரிக்கன் ஆட்டோமொபைல் பிராண்ட்டான ஜீப் 1992ல் இருந்து க்ராண்ட் செரோக்கி நடுத்தர அளவு எஸ்யூவி மாடலை உலகளவில் விற்பனை செய்து வருகிறது. இதன் ஐந்தாம் தலைமுறையைதான் தற்போது ஜீப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

தற்போது வெளியிடப்பட்டிருப்பது க்ராண்ட் செரோக்கி எல் என்ற பெயரில் விற்பனைக்கு வரவுள்ள புதிய தலைமுறை க்ராண்ட் செரோக்கியின் 3-இருக்கை வரிசை வெர்சனாகும். இந்த எஸ்யூவி மாடலின் இரு-இருக்கை வரிசை வெர்சனை இன்னும் ஜீப் வெளியிடவில்லை.

அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

ப்ளக்-இன் ஹைப்ரீட் 4xe ட்ரிம் உடன் 2-இருக்கை க்ராண்ட் செரோக்கியின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கப்படவுள்ளன. இது அறிமுகமாகும் வரையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மூன்று-இருக்கை க்ராண்ட் செரோக்கி தற்போதைய இரு-இருக்கை செரோக்கியுடன் விற்பனை செய்யப்படவுள்ளது.

அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

க்ராண்ட் செரோக்கி எல் எஸ்யூவி மாடலை பற்றி கூற வேண்டுமென்றால், இது தற்போதைய மாடலின் பரிணாம வளர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முன்பக்கம் 2021 க்ராண்ட் வாகோனீரை பெரிதும் ஒத்து காணப்படுகிறது. 7 ஸ்லாட்களுடன் க்ரில் அமைப்பு சிறியதாகவும், முன்பக்க பம்பர் ரீடிசைனிலும் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

காரின் பக்கவாட்டு பகுதி முன்பை விட கூர்மையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. க்ராண்ட் செரோக்கியில் முதன்முறையாக 21 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கூரை கூடுதல் சாய்வானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

பின்பக்கத்தில் இந்த எஸ்யூவி வாகனம் மெல்லிய எல்இடி டெயில்லேம்ப் மற்றும் இரு எக்ஸாஸ்ட் அவுட்லெட்களை கொண்டுள்ளது. வெளிப்புறத்திற்கு ஏற்றவாறு காரின் உட்பகுதியும் முற்றிலும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

மூன்று இருக்கை வரிசையை கொண்டுள்ள இதன் கேபின் புதிய மைய கன்சோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், புதிய பல செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், கவர்ச்சிகரமான லெதர் மற்றும் உயர்த்தரத்திலான பாகங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

தொழிற்நுட்ப அம்சங்களாக வயர் இல்லா ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் 4ஜி வை-பை ஹாட்ஸ்பாட் உடன் 10.1 இன்ச்சில் யுகனெக்ட்5 இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12 யுஎஸ்பி-ஏ & யுஎஸ்பி-சி துளைகள், 19 ஸ்பீக்கர்களுடன் கூடுதல் தேர்வாக அதிக செயல்திறன் கொண்ட ஆடியோ சிஸ்டம் மற்றும் ட்யுல்-பேன் சன்ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்கர்களின் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது 2021 ஜீப் க்ராண்ட் செரோக்கி!!

ஆட்டோ, ஸ்போர்ட், ராக், பனி மற்றும் சகதி என்ற ஐந்து விதமான சாலை மோட்களை பெற்றுள்ள 2021 க்ராண்ட் செரோக்கி எல்-இன் விலை தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை. நமக்கு தெரிந்தவரை இதன் விலை 40,000 அமெரிக்க டாலர்களாக (ரூ.29.26 லட்சம்) நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
2021 Jeep Grand Cherokee Unveiled With Updated Design & More Tech
Story first published: Friday, January 8, 2021, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X