4x4 தேர்விலும் தயாராகும் 2021 ஸ்கார்பியோ!! மொத்த வசதிகளையும் இறக்கும் மஹிந்திரா...

2021 மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்று புழுதி மிகுந்த மணல் பரப்பில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நமக்கு கிடைத்துள்ள ஸ்பை வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

4x4 தேர்விலும் தயாராகும் 2021 ஸ்கார்பியோ!! மொத்த வசதிகளையும் இறக்கும் மஹிந்திரா...

மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோவை நடப்பு 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாக சமீபத்தில் தான் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்து இருந்தன.

4x4 தேர்விலும் தயாராகும் 2021 ஸ்கார்பியோ!! மொத்த வசதிகளையும் இறக்கும் மஹிந்திரா...

இதனால் மூன்றாம் தலைமுறை ஸ்கார்பியோவின் அறிமுகம் இந்த ஆண்டு இறுதிக்குள், வரும் தீபாவளி உள்ளிட்ட பண்டிக்கை நாட்களில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் புதிய ஸ்கார்பியோ கடந்த பல மாதங்களாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு இருந்தே சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது.

4x4 தேர்விலும் தயாராகும் 2021 ஸ்கார்பியோ!! மொத்த வசதிகளையும் இறக்கும் மஹிந்திரா...

அப்போது கிடைக்கும் ஸ்பை படங்களினால் 2021 ஸ்கார்பியோவிற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும் புதிய ஸ்கார்பியோவை பற்றிய சில விபரங்கள் இன்னமும் நமக்கு தெரியாமல் தான் உள்ளன. அவற்றை மஹிந்திரா நிறுவனம் பத்திரமாக பாதுகாத்து வருகிறது.

4x4 தேர்விலும் தயாராகும் 2021 ஸ்கார்பியோ!! மொத்த வசதிகளையும் இறக்கும் மஹிந்திரா...

இப்படியிருக்க, புதிய தலைமுறை ஸ்கார்பியோ கார் ஒன்று ராஜஸ்தானில் உள்ள பாலைவன பகுதியில் மணல் புழுதிகளுக்கு மத்தியில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவினை தான் கீழே பார்க்கிறீர்கள்.

இந்த சோதனை ஸ்கார்பியோ 4x4/ அனைத்து-சக்கர ட்ரைவ் வேரியண்ட்டாக இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையில் இருக்கும் தார் வாகனத்துடன் இயக்குத்தளத்தை 2021 ஸ்கார்பியோ பகிர்ந்து கொண்டுள்ளது.

4x4 தேர்விலும் தயாராகும் 2021 ஸ்கார்பியோ!! மொத்த வசதிகளையும் இறக்கும் மஹிந்திரா...

இதன் காரணமாக தோற்றத்தில் கூடுதல் பெரியதாகவும், கம்பீரமானதாகவும் 2021 ஸ்கார்பியோ உருவாக்கப்பட்டு வருகிறது. முக்கியமான மாற்றங்களை பெற்ற காரின் முன்பக்கம் இன்னமும் மறைப்பால் மறைக்கப்பட்டே சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்படுகிறது.

4x4 தேர்விலும் தயாராகும் 2021 ஸ்கார்பியோ!! மொத்த வசதிகளையும் இறக்கும் மஹிந்திரா...

புதிய ஸ்கார்பியோவின் பின்பக்கம் தற்போதைய மாடலை காட்டிலும் மிகவும் நிமிர்ந்த தோற்றத்தில் காட்சி தருகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த 2021 மஹிந்திரா எஸ்யூவி கார் டர்போ டீசல் மற்றும் டர்போ பெட்ரோல் என்ற இரு விதமான என்ஜின் தேர்வுகளை பெற்றுவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

4x4 தேர்விலும் தயாராகும் 2021 ஸ்கார்பியோ!! மொத்த வசதிகளையும் இறக்கும் மஹிந்திரா...

இவற்றுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளும் கொடுக்கப்படலாம். அதேநேரம் புதிய ஸ்கார்பியோவின் சில குறிப்பிட்ட ட்ரிம்களில் 4-சக்கர ட்ரைவ் செயல்பாடும் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பது தற்போதைய சோதனை ஓட்டத்தின் மூலம் அறிய முடிகிறது.

4x4 தேர்விலும் தயாராகும் 2021 ஸ்கார்பியோ!! மொத்த வசதிகளையும் இறக்கும் மஹிந்திரா...

இவை எல்லாவற்றையும் விட முக்கிய சிறப்பம்சமாக சன்ரூஃப் ஸ்கார்பியோவில் முதன்முறையாக அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதனை முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பார்த்திருந்தோம். இத்தகைய அப்கிரேட்களை பெற்றுவரும் புதிய ஸ்கார்பியோவின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.12- 18 லட்சத்தில் நிர்ணயிக்கப்படலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 17, 2021, 22:06 [IST]
English summary
2021 Mahindra Scorpio Spied Testing. Read In Tamil.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+