செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

2021 மாருதி செலிரியோ காரின் டாப் வேரியண்ட்டை பற்றிய விபரங்கள் புதிய வீடியோ ஒன்றின் மூலமாக வெளியாகியுள்ளன. இதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

அப்டேட்கள்/ ஸ்பெஷல் எடிசன்கள் மற்றும் ஆயுட்காலத்தை அதிகப்படுத்தும் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை தவிர்த்து மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 2 வருடங்கள் உருண்டோடிவிட்டன. கடைசியாக 2019இல் எஸ்-பிரெஸ்ஸோ அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

இடையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகியது. இருப்பினும் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் போன்ற அப்டேட்களை தயாரிப்புகளில் கொண்டுவர இந்த இந்திய-ஜப்பானிய நிறுவனம் மறக்கவில்லை. மாருதி சுஸுகி பிராண்டில் இருந்து அடுத்ததாக 2021 செலிரியோ வெளிவரவுள்ளது.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

இதற்கிடையில் சமீபத்தில் புதிய செலிரியோ காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன. அதன்பின் மாருதி சுஸுகி நிறுவனமே 2021 செலிரியோவின் டீசர் படங்களை வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள செலிரியோ காரின் டாப் வேரியண்ட்டை பற்றிய விபரங்கள் வீடியோ ஒன்றின் மூலமாக வெளியாகியுள்ளன.

மேலும், தி கார் ஷோ என்கிற யுடியூப் சேனலில் இந்த வீடியோவின் மூலம் 2021 செலிரியோ கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டன என்பதையும் அறிய முடிகிறது. இந்த காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக மாருதி சுஸுகியின் அரேனா டீலர்ஷிப்களிலும் இணையத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

வருகிற நவ.10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள 2021 செலிரியோவிற்கான முன்பதிவுகள் ரூ.11 ஆயிரம் என்ற டோக்கன் தொகையுடன் ஏற்று கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குமுன் வெளியாகி இருந்த ஸ்பை படங்களின் மூலமாக 2021 செலிரியோ வழக்கத்தை காட்டிலும் அளவில் பெரியது என்பதை அறிந்திருந்தோம். இதனை இந்த வீடியோ மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

செலிரியோவின் இந்த டாப் வேரியண்ட்டின் முன்பக்கத்தில் க்ரோம் ஸ்லாட்களுடன் புதிய டிசைனில் கருப்பு நிற க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. பொனெட் முன்பை காட்டிலும் பருமனானதாக உள்ளது. இவற்றுடன் காரின் உடல் நிறத்திலேயே பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், ஃபாக் விளக்குகள், ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லர், பல-ஸ்போக் அலாய் சக்கரங்கள், வ்ராப்-ஆல் மூடப்பட்ட டெயில்லேம்ப்கள், சாய்வான மேற்கூரை மற்றும் புதிய ரியர் பம்பர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

இவற்றின் மூலம் செலிரியோ கார் முன்பை காட்டிலும் ஸ்போர்டியானதாக மாறியுள்ளது. உட்புறத்தில் 2021 செலிரியோ முன்பை காட்டிலும் கூடுதல் விசாலமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயமாக உட்புற கேபினின் அலங்கரிப்பு மற்றும் மைய கன்சோல் அப்டேட் செய்யப்பட்டிருக்கும். அத்துடன் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கு இணக்கமான ஸ்மார்ட்ப்ளே தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

மேலும் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள் மற்றும் சாவியில்லா நுழைவு உள்ளிட்ட வசதிகளையும் 2021 செலிரியோவில் எதிர்பார்க்கிறோம். மொத்தம் 7 வேரியண்ட்களில், 6 நிறத்தேர்வுகளில் விற்பனை செய்யப்பட உள்ள புதிய தலைமுறை செலிரியோவில் என்ஜின் அமைப்பும் புதியதாக வழங்கப்பட உள்ளது.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

இதனால் தற்போதைய கே10பி என்ஜின் தேர்வு நிறுத்தி கொள்ளப்பட உள்ளது. இதற்கு மாற்றாக புதியதாக வழங்கப்பட உள்ள 1 லிட்டர் 3-சிலிண்டர் கே10சி நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் சுஸுகியின் பெரும்பாலான மாடல்களில் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு சமயத்தில் விற்பனையில் இருந்த பலேனோ ஆர்எஸ் மாடலில் வழங்கப்பட்டது.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

ஆனால் பலேனோ ஆர்எஸ்-இல் கூடுதல் செயல்திறனிற்காக டர்போசார்ஜர் உடன் இந்த என்ஜின் வழங்கப்பட்டது. இந்த என்ஜின் அமைப்பில் இரட்டை-ஜெட் தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு சிலிண்டருக்கு ஒரு இன்ஜெக்டர் வழங்கப்படும். ஆனால் இதில் சிலிண்டருக்கு இரு இன்ஜெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செம்ம ஸ்டைலிஷாக 2021 மாருதி செலிரியோவின் டாப் வேரியண்ட்!! முதன்முறையாக வீடியோ வெளியானது!

இது என்ஜினின் ஒட்டுமொத்த எரிபொருள் எரிக்கும் திறனை மேம்படுத்துவது மட்டுமின்றி, சிறந்த எரிபொருள் திறனை வழங்கும் என கூறப்படுகிறது. ஆற்றல்/ டார்க் அமைப்புகள் பற்றிய விபரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். இந்திய சந்தையில் செலிரியோ நன்கு மைலேஜ் தரக்கூடிய காராக விளங்குகிறது. இந்த பெயரில் எந்த கலங்கத்தையும் ஏற்படுத்த மாருதி சுஸுகி விரும்பாது.

Most Read Articles
English summary
2021 Maruti Celerio Top Variant Detailed In First Look Walkaround.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X