இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார்... புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் என்ற பெருமையுடன் புதிய தலைமுறை மாருதி செலிரியோ கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறை கார் வாங்குவோரின் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வரும் இந்த கார் தற்போது வசதிகளிலும், வடிவமைப்பிலும் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த நிலையில், இந்த காரை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு ஏதுவாக இந்த காரின் வேரியண்ட்டுகள், அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

வேரியண்ட்டுகள் விபரம்

புதிய மாருதி செலிரியோ கார் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வந்துள்ளது. இந்த காரில் விலை, வசதிகள் அடிப்படையில் எல்எக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ, இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். பேஸ் வேரியண்ட்டில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

 புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

எல்எக்ஸ்ஐ வேரியண்ட்

எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில் க்ரோம் அக்ஸென்ட் கொண்ட முகப்பு க்ரில், பாடி கலர் பம்பர், மேனுவல் ஏசி சிஸ்டம், 12V பவர் சாக்கெட் ஆகியவை உள்ளன. இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக எரிபொருள் செலவை காட்டும் வசதி, இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் போன்ற தகவல்களை பெற முடியும். ஓட்டுனருக்கான சைன் வைசர், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி, பிரேக் அசிஸ்ட் மற்றும் எஞ்சின் இம்மொபைலைசர் ஆகிய வசதிகளும் உள்ளன. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

 புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

விஎக்ஸ்ஐ வேரியண்ட்

நடுத்தர விலை கொண்ட இந்த விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், கதவு கைப்பிடிகள், ஃபுல் வீல் கவர்கள், பகலிரவு உட்புற ரியர் வியூ மிரர், 60:40 முறையில் மடக்கும் வசதி கொண்ட பின்புற இருக்கைகள், ரியர் பார்சல் டிரே, சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், வேகத்தை கணித்து கதவுகள் தானாக மூடிக் கொள்ளும் வசதிகள் உள்ளன.

 புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஏஎம்டி வேரியண்ட்டில் வெளிப்புற வெப்பநிலையை காட்டும் வசதி, கியர் பொசிஷன் இண்டிகேட்டர் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் வசதிகளும் உள்ளன. செலிரியோ விஎக்ஸ்ஐ மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.5.63 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், ஏஎம்டி விஎக்ஸ்ஐ வேரியண்ட்டிற்கு ரூ.6.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இசட்எக்ஸ்ஐ வேரியண்ட்

விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் ஸ்மார்ட் ப்ளே dock ஸ்டேஷன் வசதி, யுஎஸ்பி, புளூடூத் மற்றும் ஆக்ஸ்போர்ட் இணைப்பு வசதிகள் உள்ளன. 4 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பட்டன்கள், கீ லெஸ் என்ட்ரி, டர்ன் இண்டிகேட்டர்களுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், டில்ட் ஸ்டீயரிங், ரியர் டீஃபாகர், பின்புற விண்ட்ஷீல்டிற்கு வைப்பர் மற்றும் வாஷர் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.5.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், ஏஎம்டி வேரியண்ட்டிற்கு ரூ.6.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

இசட்எக்ஸ்ஐ ப்ளஸ் வேரியண்ட்

புதிய மாருதி செலிரியோ காரின் மிகவும் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் எலெக்ட்ரிக் ஃபோல்டிங் வசதி கொண்ட ரியர் வியூ மிரர்கள், 15 அங்குல கருப்பு வண்ண அலாய் வீல்கள், புஷ் பட்டன் எஞ்சின் ஸ்டார்ட் / ஸ்டாப் வசதி, ஸ்மார்ட் கீ, ஸ்மார்ட் ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

 புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, முன்புற பனி விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.6.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், ஏஎம்டி வேரியண்ட்டிற்கு ரூ.6.94 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

எஞ்சின் விபரம்

புதிய மாருதி செலிரியோ காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 66 எச்பி பவரையும், 89 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

 புதிய மாருதி செலிரியோ காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகச் சிறந்ததாக கருதப்படும் இந்த கார் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் பெட்ரோல் கார் என்ற பெருமையுடன் வந்துள்ளது. இதனால், வழக்கம்போல் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக தக்க வைக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles

English summary
New Maruti Suzuki Celerio Variant Wise Features Explained.
Story first published: Wednesday, November 10, 2021, 17:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X