ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ்லாம் என்ன ஆகப்போகுதோ? டெக்னாலஜியில் எம்ஜி அஸ்டர் கார் வேற லெவல்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று எம்ஜி அஸ்டர் (MG Astor). தொழில்நுட்ப வசதிகள் நிரம்பிய இந்த புத்தம் புதிய காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்தோம். அப்போது எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும், இந்த கார் பற்றிய தகவல்களையும் கீழே உள்ள வீடியோவில் வழங்கியுள்ளோம்.
எம்ஜி அஸ்டர் கார், அக்டோபர் மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்தை குறி வைத்து இந்த புதிய காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த கார் விற்பனையில் பெரிய அளவில் சாதிக்கும் எனவும் எம்ஜி மோட்டார் நிறுவனம் நம்புகிறது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு, எம்ஜி அஸ்டர் கடும் சவாலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. அக்டோபர் மாத மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது, அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications








