ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகம்!

தோற்றத்திலும், செயல்திறனிலும் உயர் தொழில்நுட்ப சிறப்பு வாய்ந்த புதிய ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் பல முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகம்!

ஸ்கோடா என்யாக் iV ஸ்போர்ட்லைன் என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண என்யான்க் iV மாடலில் இருந்து இந்த கார் பல்வேறு கூடுதல் சிறப்பு கொண்டதாக வந்துள்ளது. புதிய ஸ்கோடா என்யாக் iV ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டில் முன்புற தோற்றத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூஃப் ரெயில்கள் மற்றும் விண்டோ ஃப்ரேம் மூலமாக கூடுதல் வசீகரத்தை பெற்றுள்ளது.

ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகம்!

முன்புற ஃபென்டரில் ஸ்போர்ட்லைன் பேட்ஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், 20 அங்குல வேகா சக்கரங்கள் மற்றும் 21 அங்குல பேட்ரியா அலாய் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலமாக, சாதாரண மாடலில் இருந்து இந்த ஸ்போர்ட்லைன் மாடல் தனித்துவமாக தெரிகிறது.

ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகம்!

உட்புறத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கருப்பு வண்ண லெதர்இருக்கைகளில் சாம்பல் வண்ண நூலில் தையல் வேலைப்பாடுகள் கவரும் வகையில் உள்ளன. இநத் காரின் டேஷ்போர்டு உள்ளிட்ட பாகங்களில் கார்பனை ஒத்திருக்கும் வேலைப்பாடுகளுடன் மிகவும் பிரிமீயமாக உள்ளது.

ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகம்!

முன்புறத்தில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் ஹெட்ரெஸ்ட் இணைந்தாற்போல் கொடுக்க்பட்டுள்ளன. மேலும், அலுமினியம் பெடல்கள், விசேஷ மிதியடிகள், மல்டி ஃபங்ஷனல் ஸ்டீயரிங் வீல், ஸ்போர்ட்லைன் பேட்ஜ் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகம்!

இந்த புதிய ஸ்போர்ட்லைன் மாடலின் iV 80 என்ற ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்டில் 82kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து அதிகபட்சமாக 201 எச்பி பவரையும், 310 என்எம் டார்க் திறனையும் வழங்கும். ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 520 கிமீ வரை பயணிக்கும்.

ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகம்!

விலை உயர்ந்த iV80எக்ஸ் வேரியண்ட்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இரண்டு மின் மோட்டார்கள் மூலமாக கார் அதிகபட்சமான செயல்திறனையும், அதிக பயண தூரத்தை பெறுவதற்கும் உதவுகின்றன. இந்த வேரியண்ட் 261 எச்பி பவரையும், 425 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகம்!

ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த ஸ்போர்ட்லைன் வேரியண்ட்டுகளில் அதிகபட்ச வேகம் 160 கிமீ என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has unveiled Enyaq iV sportline model globally with unique design and performance enhancements.
Story first published: Friday, February 19, 2021, 17:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X