ஸ்கோடா ஆக்டேவியாவில் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட்!! புதுமையான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டது...
2021 ஸ்கோடா ஆக்டேவியா ஸ்போர்ட்லைன் காரை பற்றிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆக்டேவியாவில் ஸ்போர்ட்லைன் ட்ரிம்-ஐ ஸ்கோடா நிறுவனம் கொண்டுவருவது இதுவே முதல்முறையாகும். ஆக்டேவியாவின் ஸ்டைல் & ஆர்எஸ் வேரியண்ட்களுக்கு மத்தியில் இந்த புதிய ட்ரிம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நான்காம் தலைமுறை ஆக்டேவியாவின் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட் சுற்றிலும் கருப்பு நிற பாகங்களை பெற்றுள்ளது. பளபளப்பான கருப்பு நிறம் காரின் முன்பக்க ரேடியேட்டர் க்ரில், முன்பக்க ஸ்பிளிட்டர் மற்றும் பின்பக்க கதவில் ஸ்கோடா லோகோ உள்ளிட்டவற்றில் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் டிஃப்யூஸரையும் 2021 ஆக்டேவியா ஸ்போர்ட்லைன் கார் கருப்பு நிறத்தில் பெற்றுள்ளது. ஆனால் டிஃப்யூஸரில் க்ரோம் பாகங்களும் உள்ளன. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள கருப்பு நிற அலாய் சக்கரங்களின் அளவு 17 இன்ச் ஆகும்.
இதற்கு தேர்வாக கருப்பு மெட்டாலிக் நிறத்தில் 18 இன்ச் வெகா சக்கரங்களும், கருப்பு நிற 19 இன்ச் அலாய் சக்கரங்களும் 2021 ஆக்டேவியா ஸ்போர்ட்லைனை வாங்கும் வாடிக்கையாளர்களும் கொடுக்கப்பட உள்ளன.

ஆக்டேவியாவின் இந்த புதிய ட்ரிம்-இன் உட்புற கேபின் 3-ஸ்போக் பல-செயல்பாட்டு ஸ்போர்ட்ஸ் ஸ்டேரிங் சக்கரம், துணியால் அலங்கரிக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ஒருங்கிணைக்கப்பட்ட தலையணை உடன் ஸ்போர்ட்ஸ் இருக்கைகளை கருப்பு பியானோ நிற அலங்கரிப்பில் ஏற்றுள்ளது.

ஹேட்ச்பேக் & எஸ்டேட் வேரியண்ட்களில் வெளிநாட்டு சந்தைகளில் கிடைக்கும் ஸ்கோடா ஆக்டேவியாவின் புதிய ஸ்போர்ட்லைன் வேரியண்ட் பெட்ரோல், டீசல், மைல்ட்-ஹைப்ரீட், ப்ளக்-இன் ஹைப்ரீட் மற்றும் சிஎன்ஜி வெர்சன்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த வகையில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் உடன் இந்த ஸ்போர்ட் வெர்சன் காரை வாங்கலாம். அதிகப்பட்சமாக 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி மற்றும் மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்தையும் பெறலாம்.

190 பிஎஸ் பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் உடன் டிஎஸ்ஜி மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. ஆக்டேவியா ஸ்போர்ட்லைன் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் வரையிலான ஆற்றலை பெற முடியும்.

ஆனால் ஜி-டெக் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள ஸ்போர்ட்லைன் சிஎன்ஜி மாடலை அதிகப்பட்சமாக 130 பிஎஸ் வரையிலான ஆற்றலில் தான் இயக்க முடியும். டீசல் மாடல்கள் 115 பிஎஸ், 150 பிஎஸ் மற்றும் 200 பிஎஸ் என்ற மூன்று விதமான ஆற்றல் தேர்வுகளில் வழங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








