புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

செடான் கார் பிரியர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தி உள்ள புத்தம் புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரின் இன்டீரியர் படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. ரேபிட் காருக்கு மாற்றாக எதிர்பார்க்கப்படும் இந்த புத்தம் புதிய காரின் இன்டீரியர் படம் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் முற்றிலும் புதிய காரை ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விரைவில் களமிறக்க உள்ளது. ஸ்லாவியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

இந்த நிலையில், இந்த கார் குறித்து வாடிக்கையாளர் மத்தியில் ஆவலை ஏற்படுத்தவும், பிரபலப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளில் ஸ்கோடா ஆட்டோ இறங்கி உள்ளது. அதன்படி, அண்மையில் அடையாளங்கள் மறைக்கப்பட்ட நிலையில், இந்த காரை பொது பார்வைக்கு வெளியிட்டது ஸ்கோடா நிறுவனம். கூடவே சில ஸ்கெட்ச் படங்களையும் வெளியிட்டது.

புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

தற்போது இந்த காரின் இன்டீரியர் எப்படி இருக்கும் என்பதை காட்டும் விதமாக புதிய உருவரை படத்தை ஸ்கோடா ஆட்டோ வெளியிட்டுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா காரின் இன்டீரியர் மிகவும் பிரிமீயமாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

டேஷ்போர்டு அமைப்பு பல அடுக்குகள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. நடுவில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்கோடா கார்களில் கொடுக்கப்படும் இரண்டு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டீயரிங் வீல் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், அழகு சேர்க்கும் விதமாக டேஷ்போர்டு நடுவில் வண்ணப் பட்டை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

ஸ்கோடா ஸ்லாவியா காரில் 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் என நம்பலாம். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு கீழாக கன்ட்ரோல் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருப்பதும் தெரிகிறது. வயர்லெஸ் சார்ஜரும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

தற்போது இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. அதேநேரத்தில், புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார் பரிமாணத்தில் ரேபிட் காரைவிட பெரிதாகவும், அதிக பிரிமீயமாகவும் இருக்கும். ஹோண்டா சிட்டி காருக்கு நேரடி போட்டியை தரும் அம்சங்களுடன் வர இருக்கிறது.

புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

புதிய ஸ்கோடா ஸ்லாவியா காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.

புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார் 4,541 மிமீ நீளமும், 1,752 மிமீ அகலமும், 1,487 மிமீ உயரமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 2,651 மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டது. அதாவது, இதன் ரகத்தில் மிக அதிக வீல்பேஸ் நீளம் கொண்டதாக வர இருக்கிறது. எனவே, உட்புறத்தில் பயணிகளுக்கு சிறப்பான இடவசதியை அளிக்கும் என்று நம்பலாம்.

புதிய ஸ்லாவியா காரின் இன்டீரியர் டிசைன் எப்படி இருக்கும்... படத்தை வெளியிட்டது ஸ்கோடா!

புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார் மிட்சைஸ் சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா கார்களுடன் போட்டி போடும். வரும் 18ந் தேதி புதிய ஸ்கோடா ஸ்லாவியா கார் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has revealed the interior of the Slavia sedan officially.
Story first published: Tuesday, November 9, 2021, 17:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X