விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

புதிய டாடா எச்பிஎக்ஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டின் உட்புற ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

டாடா மோட்டார்ஸின் அடுத்த அறிமுக மாடலாக எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி கார் விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த கார் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

அப்போது ஒவ்வொரு முறையும் நமக்கு இந்த மைக்ரோ-எஸ்யூவி காரை பற்றி புதிய புதிய விபரங்கள் தெரிய வந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில் தற்போது டீம் பிஎச்பி செய்திதளம் மூலமாக கிடைத்துள்ள ஸ்பை படங்களின் மூலம் எச்பிஎக்ஸ்-இன் விலை குறைவான வேரியண்ட் எவ்வாறு இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

குறிப்பாக காரின் உட்புறத்தில் வழங்கப்படவுள்ள அம்சங்களை இந்த ஸ்பை படங்களில் தெளிவாக பார்க்க முடிகிறது. எச்பிஎக்ஸ்-இன் கேபினில் டேஸ்போர்டின் மையத்தில் மியுசிக் சிஸ்டம் சிறிய அளவில் வழங்கப்பட்டுள்ளது.

விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

இந்த மியுசிக் சிஸ்டத்திற்கான கண்ட்ரோல்கள் மைய கன்சோலின் கீழ்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. உட்புறத்திலும் டேஸ்போர்ட் கண்ணாடி கவரின் மூலமாக மறைக்கப்பட்டு உள்ளது.

விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

கண்ணாடி கவரினால் மறைக்கப்பட்டுள்ளதால் பியானோ கருப்பு நிறத்தில் சதுர வடிவில் ஏசி துளைகள், A-பில்லரில் பொருத்தப்பட்ட ட்விட்டர்கள், கியர் லிவரின் பின்புறத்தில் கருப்பு நிற உள்ளீடுகள் மற்றும் பல-செயல்பாட்டு 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை தெளிவாக பார்க்க முடிகிறது.

விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

உட்புற கதவு ஹேண்டில்கள் பவர் ஜன்னல்களுடன் பியானோ கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் பொருட்களை வைப்பதற்கான பார்சல் அலமாரியையும் கொண்டுள்ள டாடாவின் இந்த மைக்ரோ-எஸ்யூவி காரில் பின் இருக்கைக்கான ஹெட்-ரெஸ்ட் அட்ஜெஸ்ட் செய்ய முடியாத வகையில் வழங்கப்பட்டுள்ளது.

விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

ஹார்ன்பில் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த டாடா காரின் வெளிப்புறத்தில் ஹைலைட்களாக மூன்று-அம்பு டிசைனில் முன்பக்க க்ரில், பிளவுப்பட்ட வடிவில் ஹெட்லேம்ப், இரட்டை நிறத்தில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை பொருத்தப்படவுள்ளன.

விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

சக்கரத்தின் மேற்புறத்தில் பிளாஸ்டிக் வளைவுகள் அருமையான தோற்றத்திலும், பின்பக்கத்தில் டெயில்லைட் எல்இடி தரத்திலும், ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் பின்பக்க பம்பரில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டும் வழங்கப்பட உள்ளன.

விலை குறைவான டாடா எச்பிஎக்ஸ் காரிலேயே இவ்வளவு வசதிகளா!! ஸ்பை படங்கள் வெளிவந்தன...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு டாடா எச்பிஎக்ஸ்-இல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுடன் கொடுக்கப்பட உள்ளது. டாடா எச்பிஎக்ஸ் காருக்கு போட்டியாக மஹிந்திரா கேயுவி100 நெக்ஸ்ட் மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளன.

Most Read Articles

English summary
New Tata HBX lower variant interiors leaked. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X