ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

இந்திய சந்தையில் பிரபலமான கார் பிராண்ட்களுள் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது. வருடந்தோறும் புதிய புதிய கார் மாடல்கள் இந்த பிராண்ட்டில் இருந்து தொடர்ச்சியாக அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. அதேநேரம் சந்தையில் நிலவும் போட்டியினை சமாளிக்க விற்பனையில் இருக்கும் கார்களை அப்டேட் செய்வதையும் டாடா நிறுவனம் மறப்பதில்லை.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

இந்த வகையில் சமீபத்தில் டாடா நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோ-எஸ்யூவி கார் தான் டாடா பஞ்ச் ஆகும். இந்திய சந்தை மைக்ரோ-எஸ்யூவி கார்களுக்கு ஏற்றதாக மாறிவிட்டதா என்பது தற்போது வரையில் சந்தேகமாகவே இருக்கும் சூழலில் மஹிந்திரா கேயூவி100, மாருதி எஸ்-பிரெஸ்ஸோ போன்ற மைக்ரோ-எஸ்யூவி கார்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

தோற்றத்தில் இந்த மாடல்களுக்கு போட்டியாகவே டாடா பஞ்ச் களமிறக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விலையில் பஞ்ச் மைக்ரோ எஸ்யூவிக்கு ஏகப்பட்ட போட்டிகள் உள்ளன. இதில் ஒன்று சொந்த டாடா மோட்டார்ஸின் டியாகோ என்ஆர்ஜி. இந்த இரு மலிவான டாடா கார்களுக்கு இடையேயான ஒற்றுமை, வேற்றுமைகளை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

டாடா பஞ்ச்சிற்கு டியாகோ ஹேட்ச்பேக் கூட போட்டியாகவே உள்ளது. இருப்பினும் குறிப்பிட்டு டியாகோ என்ஆர்ஜி உடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு காரணம், புதிய பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவி மாடலுடன் டியாகோ என்ஆர்ஜி காரின் பரிமாண அளவுகள் தான் ஒத்து போகின்றன. காற்று இயக்கவியலுக்கு இணக்கமானதாக கொண்டுவர இவை இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக பருமனாக்கப்பட்டுள்ளன.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

அதேபோல் இவை இரண்டிலும் ஒரே மாதிரியான பவர்ட்ரெயின் & ட்ரைவ்ட்ரெயின் தேர்வுகள் தான் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்களில் வழங்கப்படும் வசதிகள் தான் சற்று வேறுப்படுகின்றன. இருப்பினும் விலை ஏறக்குறைய ஒரே மாதிரியாக இரண்டிலும் உள்ளதால், டியாகோவிற்கு மாற்று காரை தேடுவோரின் கவனம் நிச்சயம் பஞ்ச் மைக்ரோ-எஸ்யூவியின் பக்கம் செல்லும்.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

உட்புற கேபின் இடவசதியில் சிறந்தது எது?

தோற்றத்தில் இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், பரிமாண அளவுகளை மிமீ-இல் பார்க்கும்போது டாடா பஞ்ச் நீளம், அகலம், உயரம், வீல்பேஸ், க்ரவுண்ட் க்ளியரென்ஸ் மற்றும் பூட் ஸ்பேஸ் என அனைத்திலும் டியாகோவை காட்டிலும் சற்று பெரியதாக உள்ளது. பஞ்ச் காரை சுற்றிலும் வழங்கப்படும் பிளாஸ்டிக் பேனல்களினால் இவ்வாறு அளவில் பெரியதாக இந்த மைக்ரோ-எஸ்யூவி கார் காட்சியளிக்கலாம்.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

மைக்ரோ-எஸ்யூவி காராக இருப்பினும், குறிப்பாக பஞ்ச் மாடலில் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி நன்கு பெரியதாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிப்புற பரிமாண அளவுகள் அதிகமாக இருப்பதால், அதன் விளைவாக டாடா பஞ்ச்சில் டியாகோ என்ஆர்ஜி காரை காட்டிலும் கூடுதல் இடவசதி உடன் உட்புற கேபின் கிடைக்கும்.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

என்ஜின் & டிரான்ஸ்மிஷனில் உள்ள வித்தியாசம்

ஒரே ஆல்ஃபா கட்டமைப்பில் உருவாக்கப்படுவதால், ஏற்கனவே கூறியதுபோல் இவை இரண்டிலும் ஒரே மாதிரியான 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. ஆற்றலை வாகனத்தின் முன் சக்கரங்களுக்கு வழங்கும் இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி தேர்வு வழங்கப்படுகிறது.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 84.4 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இயக்க ஆற்றலில் டாடா பஞ்ச், டியாகோ கார்களுக்கு இடையே வித்தியாசமில்லை. இதனால் பயண அனுபவமும் இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும்.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

வசதிகள் எதில் அதிகம், பஞ்ச்சா? (அ) டியாகோவா?

பஞ்ச் காரில் வழங்கப்பட உள்ள விரிவான வசதிகள் விபரங்களை இன்னும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுமையாக வெளியிடவில்லை என்றாலும், இந்த மைக்ரோ-எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வசதிகளையும், டியாகோ என்ஆர்ஜி காரின் டாப் வேரியண்ட்டையும் ஒப்பிட்டு பார்த்தோமேயானால், இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவே உள்ளன.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

இன்னும் சொல்லப்போனால், டியாகோ என்ஆர்ஜி-யின் டாப் வேரியண்ட்டில் வழங்கப்படும் தொழிற்நுட்ப வசதிகளை காட்டிலும் பஞ்ச் மாடலில் அதிகமாக வழங்கப்பட உள்ளன. அதாவது பகுதி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், சாவி இல்லா நுழைவு & வெளியேற்றம் மற்றும் தானியங்கி என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் உள்ளிட்ட வசதிகள் பஞ்ச்சில் வழங்கப்படலாம். ஆனால் இவை டியாகோ என்ஆர்ஜி காரில் வழங்கப்படுவதில்லை.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

பின் இருக்கை பயணிகளுக்கும் ஏசி மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான கொக்கி இந்த இரு டாடா காரிலும் வழங்கப்படவில்லை. இருப்பினும் டியாகோ என்ஆர்ஜி மாடல் உலகளாவிய NCAP மோதல் சோதனையில் ஐந்திற்கு நான்கு மதிப்பெண்களை பெற்றுள்ளதால், இதே அளவிலான நட்சத்திரங்களை பஞ்ச் காரிலும் எதிர்பார்க்கிறோம்.

ரெண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சளைச்சது இல்ல!! டாடா பஞ்ச் Vs டாடா டியாகோ என்ஆர்ஜி

விலை

இவ்வாறு சில கூடுதல் தொழிற்நுட்பங்களை பெற்ற போதிலும், பஞ்ச் மைக்ரோ எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.5 லட்சத்தில் ரூ.7.5 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. மறுப்பக்கம் டியாகோ என்ஆர்ஜி காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.6 லட்சமாக உள்ளது.

Most Read Articles

English summary
New Tata Punch Micro-SUV vs Tiago NRG Hatchback - What’s Different?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X