அதற்குள் ஷோரூம்களை வந்தடைந்த புதிய டாடா சஃபாரி!! அப்போ, டெஸ்ட் ட்ரைவ் எடுக்கலாம் போல...

புதிய டாடா சஃபாரி கார்கள் சில டீலர்ஷிப் ஷோரூம்களில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோவினை இந்த செய்தியில் பார்ப்போம்.

அதற்குள் ஷோரூம்களை வந்தடைந்த புதிய டாடா சஃபாரி!! அப்போ, டெஸ்ட் ட்ரைவ் எடுக்கலாம் போல...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய சஃபாரி காரை பற்றிய அனைத்து விபரங்களையும் படங்களுடன் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. எக்ஸ்ஷோரூம் விலைகள் மட்டும்தான் வெளியிடப்படவில்லை, அது இந்த பிப்ரவரி மாத இறுதியில் வெளியிடப்படலாம்.

அதற்குள் ஷோரூம்களை வந்தடைந்த புதிய டாடா சஃபாரி!! அப்போ, டெஸ்ட் ட்ரைவ் எடுக்கலாம் போல...

முன்பதிவுகள் வரும் 4ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்படவுள்ளன. இந்த நிலையில் புதிய சஃபாரியை விளம்பரப்படுத்தும் வகையில் சில டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு இந்த கார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வீடியோ ஆட்டோ ட்ரெண்ட் டிவி என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற கார்களை போல் அல்லாமல் சஃபாரியின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட்களில் கூட டாடா நிறுவனம் சிறப்பம்சங்களை அள்ளி வழங்கியுள்ளது.

அதற்குள் ஷோரூம்களை வந்தடைந்த புதிய டாடா சஃபாரி!! அப்போ, டெஸ்ட் ட்ரைவ் எடுக்கலாம் போல...

இதன்படி சைடு டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படக்கூடிய புதிய இரட்டை-செயல்பாடு எல்இடி டிஆர்எல்களுடன் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் சஃபாரியின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்பட்டுள்ளன. 5-இருக்கை ஹெரியரின் 7-இருக்கை வெர்சன்தான் புதிய சஃபாரி ஆகும்.

அதற்குள் ஷோரூம்களை வந்தடைந்த புதிய டாடா சஃபாரி!! அப்போ, டெஸ்ட் ட்ரைவ் எடுக்கலாம் போல...

ஆனால் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள் ஹெரியரின் விலை அதிகமான வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் ஹெரியரில் இந்த அம்சத்தை விலை குறைவான வேரியண்ட்களில் இருந்தும் பெறலாம்.

அதற்குள் ஷோரூம்களை வந்தடைந்த புதிய டாடா சஃபாரி!! அப்போ, டெஸ்ட் ட்ரைவ் எடுக்கலாம் போல...

அதேபோல் சஃபாரியின் அனைத்து வேரியண்ட்டிலும் ஸ்டேரிங் சக்கரத்தை உரிமையாளர் தனக்கு ஏற்ற வகையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் இரண்டாவது இருக்கை வரிசை கூடுதல் சவுகரியத்திற்காக சற்று சாய்வாக வழங்கப்பட்டுள்ளது.

அதற்குள் ஷோரூம்களை வந்தடைந்த புதிய டாடா சஃபாரி!! அப்போ, டெஸ்ட் ட்ரைவ் எடுக்கலாம் போல...

சஃபாரியில் பாஸ் மோட் (Boss Mode) என்ற ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தினால் முன் இருக்கைகள் சற்று முன்னோக்கி சென்று பின் இருக்கையில் அமருபவருக்கு கால்களை நன்கு நீட்டி அமர சற்று கூடுதலான இடம் கிடைக்கும். மேற்கூரை தண்டவாளங்களை சஃபாரியின் எந்தவொரு வேரியண்ட்டிலும் பெறலாம்.

அதற்குள் ஷோரூம்களை வந்தடைந்த புதிய டாடா சஃபாரி!! அப்போ, டெஸ்ட் ட்ரைவ் எடுக்கலாம் போல...

ஸ்மார்ட் சார்ஜிங் மற்றும் ஏசி-க்கான துளைகள் இரண்டாவது மட்டுமின்றி மூன்றாவது வரிசை பயணிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவை போதாதென்று வாடிக்கையாளர்களை கவர கவர்ச்சிகரமான பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்களையும் புதிய சஃபாரி எஸ்யூவி காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

Most Read Articles
English summary
New Tata Safari Now On Display Inside Dealer Showroom
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X