Just In
- 34 min ago
விலை குறைவு, வசதிகள் ஏராளம்... என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஒரு ஸ்கூட்டரை உடனே புக் செய்வீங்க!
- 1 hr ago
புதிய இசுஸு வி க்ராஸ் பிஎஸ்-6 மாடல் அறிமுகம் குறித்து புதிய தகவல்
- 2 hrs ago
விற்பனையில் மஹிந்திராவை தூக்கி பிடிக்கும் 2020 தார்!! அதாள பாதாளத்தில் மராஸ்ஸோவின் விற்பனை!
- 3 hrs ago
கடந்த மாத விற்பனையில் நிஸான் மேக்னைட்டை முந்திய கிகர்!! ரெனால்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸா?
Don't Miss!
- News
சீக்கிரம்.. இந்த 3ம் ரொம்ப முக்கியம்.. ஒரே போடு போட்ட இபிஎஸ்.. இன்று அதிமுக நிகழ்த்த போகும் "மேஜிக்"
- Sports
2வது நாளில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி... ரோகித், புஜாரா நிதான ஆட்டம்
- Lifestyle
ஒரு நாளில் 5 முறை உணவு உட்கொண்டால் உடல் எடை குறையுமா? அதை எப்படி பின்பற்றுவது?
- Movies
650 கோடிக்கு மேல் முறைகேடு.. சிக்கலில் நடிகை டாப்சி, அனுராக் காஷ்யப்.. வருமான வரித்துறை அதிரடி!
- Finance
கரடியா? காளையா? வார இறுதி வர்த்தக நாளில் ஏற்ற இறக்கம்.. என்ன காரணம்?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியதில் இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் வேரியண்ட் வாரியாக வசதிகள்... எந்த வேரியண்ட் சிறந்தது?
மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் முக்கிய 7 சீட்டர் தேர்வாக புதிய டாடா சஃபாரி கார் வர இருக்கிறது. இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்க இருக்கும் நிலையில், முன்பதிவு செய்வோருக்கு ஏதுவாக எந்தெந்த வேரியண்ட்டில் என்னென்ன வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை இந்த செய்தியில் வழங்கி இருக்கிறோம்.

புதிய டாடா சஃபாரி எஸ்யூவி டீசல் எஞ்சின் தேர்வில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வர இருக்கிறது. இதில், மேனுவல் மாடலானது எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளிலும், ஆட்டோமேட்டிக் மாடலானது எக்ஸ்எம்ஏ, எக்ஸ்இசட்ஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ ஆகிய வேரியண்ட் தேர்வுகளிலும் வழங்கப்பட உள்ளது. டாடா சஃபாரி எஸ்யூவி 7 சீட்டர் மாடலில் கிடைக்கும். டாப் வேரியண்ட்டில் மட்டுமே 6 சீட்டர் மாடலானது வழங்கப்பட உள்ளது.

எக்ஸ்இ வேரியண்ட்
புதிய டாடா சஃபாரியின் விலை குறைவான இந்த வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், இரண்டாவது வரிசையில் 60:40 விகிதத்தில் மடக்கக்கூடிய இருக்கை அமைப்பும், மூன்றாவது வரிசையில் 50:50 என்ற விகிதத்தில் மடக்கக்கூடிய இருக்கை அமைப்பும் வழங்கப்படும். மூன்றாவது வரிசைக்கும் தனி ஏசி வென்ட்டுகள், அனைத்து ஜன்னல்களுக்கும் பவர் விண்டோஸ் வசதி இடம்பெறுகிறது.

இந்த வேரியண்ட்டில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரோல் ஓவர் மிட்டிகேஷன் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பிரேக் டிஸ்க் வைப்பிங், அனைத்து சக்கங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெறுகின்றன.

எக்ஸ்எம்/எக்ஸ்எம்ஏ வேரியண்ட்டுகள்
எக்ஸ்இ பேஸ் வேரியண்ட்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக சிட்டி, ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 2 ட்வீட்டர்கள் மற்றும் 4 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், ஃபாலோ மீ ஹெட்லைட் வசதி, பனி விளக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வைப்பர், வாஷர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள் இடம்பெற்றுள்ளன.

எக்ஸ்டி வேரியண்ட்
இந்த வேரியண்ட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும். இந்த வேரியண்ட்டில் கூடுதலாக சாஃப்ட் டச் எனப்படும் மென்மையான தொடுதல் அனுபவத்தை வழங்கும் உயர்வகை பிளாஸ்டிக் கொண்ட டேஷ்போர்டு, 4 ட்வீட்டர்கள், 4 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் வழங்கப்படுகின்றன.

மேலும், இந்த வேரியண்ட்டில் இருந்து லம்பார் சப்போர்ட் மற்றும் ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்வதற்கான வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட், மூட் லைட் சிஸ்டம், 18 அங்குல அலாய் வீல்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், உட்புறத்தில் ஆட்டோ டிம் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், ஐரா கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. எக்ஸ்டி ப்ளஸ் என்ற ஆப்ஷனல் வேரியண்ட்டில் சன்ரூஃப் வசதியும் இடம்பெற்றுள்ளது.

எக்ஸ்இசட் / எக்ஸ்இசட்ஏ
புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் இந்த வேரியண்ட்டில் கூடுதலாக ஸெனான் எச்ஐடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கார்னரிங் வசதியுடன் பனி விளக்குகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, வெள்ளை வண்ண இன்டீரியர் தீம், கியர் லிவர் மற்றும் ஸ்டீயரிங் வீலுக்கு லெதர் உறை, நிலபரப்புகளை பொறுத்து மாற்றிக் கொள்ளக்கூடிய வகையில், நார்மல், ரஃப் மற்றும் வெட் என மூன்று மோடுகளை கொண்ட டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.

தவிரவும், சற்றே பெரிய 8.8 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சப் ஊஃபர் உள்பட 9 ஸ்பீக்கர்களுடன் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஷார்க் ஃபின் என்ற சுறாத் துடுப்பு வடிவிலான ஆன்டென்னா, 6 ஏர்பேக்குகள், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதியுடன் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 18 அங்குல மெஷின் கட் அலாய் வீல்கள் உள்ளன.

எக்ஸ்இசட் ப்ளஸ்/ எக்ஸ்இசட்ஏ ப்ளஸ்
புதிய டாடா சஃபாரி எஸ்யூவியின் விலை உயர்ந்த இந்த டாப் வேரியண்ட்டில் கூடுதலாக 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் தேர்வுகளும், பனோரமிக் சன்ரூஃப் வசதியும் கொடுக்கப்படுகிறது.

எது வேரியண்ட் பெஸ்ட்?
பட்ஜெட் சற்றே குறைவாக வைத்துக் கொண்டு இந்த எஸ்யூவியை வாங்க திட்டமிடுவோருக்கு எக்ஸ்எம் வேரியண்ட் சிறப்பானதாக இருக்கும். பட்ஜெட் பிரச்னை இல்லாதவர்களுக்கு எக்ஸ்இசட் டாப் வேரியண்ட் சிறந்ததாக அமையும். 6 சீட்டர் மாடல் வேண்டுவோர் எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு செல்லலாம்.