Just In
- 1 hr ago
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- 1 hr ago
இமயமலை பகுதியில் சோதனையில் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! அட... அறிமுகம் எப்போ தாங்க?
- 3 hrs ago
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- 3 hrs ago
விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Movies
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பக்காவா ப்ளான் போட்டு சஃபாரியை மீண்டும் கொண்டுவரும் டாடா!! புதிய டீசர் படம் வெளியீடு..
2021 சஃபாரியின் புதிய டீசர் படத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்மூலம் தயாரிப்பு நிறுவனம் கூறவந்துள்ள விஷயத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்புதான் இந்திய சந்தைக்கான சஃபாரி பெயரை உறுதிப்படுத்தி இருந்தது. இந்த ஜனவரி மாதத்தில் ஷோரூம்களை வந்தடையவுள்ள இந்த டாடா எஸ்யூவி கார் தற்சமயம் விற்பனையில் உள்ள ஹெரியரின் 7-இருக்கை வெர்சனாகும்.

ஆனால் ஆட்டோ எக்ஸ்போவில் இதன் கான்செப்ட் மாடல் கிராவிட்டாஸ் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள 2021 சஃபாரியின் டீசர் படத்தில் வாகனத்தின் முன்பக்க க்ரில் அமைப்பே பிரதானமாக காட்டப்பட்டுள்ளது.

கருப்பு நிறத்தில் வித்தியாசமான வடிவத்தில், 5-இருக்கை டாடா ஹெரியரில் இருந்து சஃபாரியை வேறுபடுத்தி காட்டும் இந்த க்ரில் அமைப்பு, தயாரிப்பு பணிகள் அனைத்தையும் நிறைவு செய்த நிலையில் காட்சியளிக்கிறது.

அதுமட்டுமில்லாமல் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கிராவிட்டாஸின் க்ரில்-ஐ காட்டிலும் சிறப்பானதாகவும், ப்ரீமியம் தரத்திலும் சஃபாரியின் க்ரில் உள்ளது. இந்த டீசர் படத்தை உற்று பார்த்தோமேயானால், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் க்ரில்லில் வழங்கப்படும் இரு-குறி அம்பு இந்த சஃபாரி க்ரில்லிலும் வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

க்ரில் மட்டுமின்றி வேறு சில பாகங்களையும் ஹெரியரை காட்டிலும் ப்ரீமியமானதாகவும், வித்தியாசமானதாகவும் அதன் 7-இருக்கை வெர்சனான சஃபாரி பெற்றுவரலாம். இந்த டீசர் படத்தில்கூட வித்தியாசமான டார்க் நீல நிறத்தில் சஃபாரி பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இதே நிறத்தில் காட்சியளிக்கும் சஃபாரியின் இணையத்தில் கசிந்து மற்றொரு படத்தையும் இதற்கு முன் பார்த்திருந்தோம். இதனால் இந்த நிறத்தேர்வு இந்த 7-இருக்கை எஸ்யூவி காருக்கு வழங்க அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் பெரும்பான்மையான பாகங்களில் ஹெரியர், சஃபாரி ஒரே மாதிரியாகவே இருக்கும்.

டாடாவின் ஒமேகார்க் ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சஃபாரி ஹெரியரின் அதே வீல்பேஸ் மற்றும் ட்ராக் அளவுகளைதான் பெற்றுவரவுள்ளது. ஆனால் மூன்றாவது இருக்கை வரிசையின் காரணமாக கார்களின் நீளம் நிச்சயம் வேறுபடும்.

மேலும் ஹெரியரில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர் டீசல் என்ஜின்தான் 2021 சஃபாரிலும் வழங்கப்படவுள்ளது. அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.