புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

Tata Motors நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் காரான Tigor EV-க்கான முன்பதிவுகளை ஏற்க துவங்கியுள்ளது. இதுகுறித்தும், இந்த புதிய Tata எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

Nexon EV என்ற எலக்ட்ரிக் காரை விற்பனை செய்துவரும் Tata நிறுவனம் சமீபத்தில் தான் அதன் இரண்டாவது எலக்ட்ரிக் காராக Tigor EV-ஐ வெளியீடு செய்தது. விரைவில் இந்த ஆகஸ்ட் மாதம் முடிவதற்கு உள்ளாக இந்த எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

மேலும் அப்போது தான் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளையும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த எலக்ட்ரிக் காம்பெக்ட் செடான் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இதனை Tata Motors நிறுவனமே அதன் சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளது.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

மற்றப்படி புக்கிங்கிற்கான டோக்கன் எவ்வளவு என்பதை எல்லாம் Tata நிறுவனம் தனது பதிவுகளில் தெரிவிக்கவில்லை. Nexon எலக்ட்ரிக் காரை போல் Tigor EV-யும் ஜிப்ட்ரான் தொழிற்நுட்பத்தை பெற்றுள்ளது. இருப்பினும் அதனை காட்டிலும் இந்த புதிய Tata எலக்ட்ரிக் கார் மலிவான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

இதனால் இந்த காரினை மக்கள் பலர் வாங்குவர் என இப்போதே கணித்துவிட்டனர். எனவே தான் Tigor EV-யின் வருகை, பசுமை போக்குவரத்திற்கான மிக பெரிய படியாக, இந்திய ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. எலக்ட்ரிக் மோட்டாரை பெற்றுவரும் அதேசமயம் Tata Tigor செடான் காரின் தோற்றமும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

இதனால் அப்டேட் செய்யப்பட்ட Tiago ஹேட்ச்பேக் மற்றும் Altroz பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களை போன்று Tigor மாடலும் புத்துணர்ச்சியான தோற்றத்தை பெற்றுள்ளது. காரின் முன்பக்க க்ரில் மற்றும் பம்பர் ஆகியவை எலக்ட்ரிக் வெர்சனுக்கு ஏற்ப சற்று திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

அதேபோல் இந்த புதிய EV ப்ரோஜெக்டர் யூனிட்களுடன் ஹெட்லேம்ப்களையும் பெற்று வந்துள்ளது. பேட்டரி வாகனம் என்பதை குறிக்கும் வகையில் காரை சுற்றிலும் நீல நிற highlights வழங்கப்பட்டுள்ளன. இந்த நீல நிற தொடுதல்களை காரின் சக்கரங்களில் கூட பார்க்க முடிகிறது.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

இந்த சப்-காம்பெக்ட் எலக்ட்ரிக் செடான் காரில் IP67 26kWh லித்தியம்-இரும்பு பேட்டரி உடன் எலக்ட்ரிக் மோட்டாரை Tata Motors நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், இதன் மூலமாக 73.75எச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை பெற முடியும் எனவும் Tata நிறுவனம் தெரிவித்துள்ளது.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

இவற்றின் உதவியுடன் 0-வில் இருந்து 60kmph வேகத்தை குறைந்தப்பட்சமாக 5.7 வினாடிகளிலேயே எட்டிவிட முடியுமாம். இயக்கத்தின்போது எரிபொருள் Tigor-இல் இருந்து Tigor EV-ஐ வேறுப்படுத்தும் வகையில் சிறந்த செயல்படுதிறன் கிடைக்க ஜிப்ட்ரான் தொழிற்நுட்பம் உதவிகரமானதாக இருக்கும் என்கிறது Tata.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

இதன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ட்ரைவ் & ஸ்போர்ட்ஸ் என்ற இரு விதமான மோட்களுடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் சக்கரத்தின் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்தாத டயர்களையும் இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கவுள்ளதாக கூறும் Tata நிறுவனம், இதனால் 10% சுழற்சி தடை குறையும் என்றும், கூடுதல் மென்மையான இயக்கம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

இந்த EV-இன் பேட்டரியை சார்ஜ் செய்ய விரைவு சார்ஜர் வழங்கப்பட உள்ளதாக கூறும் தயாரிப்பு நிறுவனம், அதேநேரம் 15 ஆம்பியர் வீட்டு சார்ஜிங் வசதியும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. விரைவு சார்ஜர் மூலமாக இதன் பேட்டரியை ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் நிரப்பிவிடலாம்.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

அதுவே வீட்டு மின்சாரத்தின் மூலமாக இந்த சார்ஜ் அளவை அடைய 8 மணிநேரங்கள் தேவைப்படுமாம். Tigor EV உட்புறத்தில் 7 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இதனை ஹார்மன் ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்து வழங்கவுள்ளனர்.

புக்கிங் செய்ய தயாராகுங்கள்!! Tigor எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவை துவங்கியது Tata Motors!

மேலும், இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் 30 விதமான வசதிகளை இந்த எலக்ட்ரிக் காம்பெக்ட் செடான் காரில் பெறலாம் என்கிறது Tata Motors. இதில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், அமைதியான கேபின் மற்றும் காரை ஸ்டார்ட் செய்வதற்கு அழுத்து பொத்தான் உள்ளிட்டவை அடங்குகின்றன.

Most Read Articles

English summary
Tata Motors opens booking for upcoming Tigor EV ahead of launch this month
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X