தீவிர சாலை சோதனையில் டாடாவின் மலிவான எலக்ட்ரிக் கார்!! அறிமுகம் விரைவில்

2021 டாடா டிகோர் எலக்ட்ரிக் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்றின் ஸ்பை வீடியோ அதன் சாலை சோதனை ஓட்டத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

தீவிர சாலை சோதனையில் டாடாவின் மலிவான எலக்ட்ரிக் கார்!! அறிமுகம் விரைவில்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மலிவான எலக்ட்ரிக் காரான டிகோர் இவி-ஐ அப்டேட் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த எலக்ட்ரிக் செடான் கார் கடந்த சில மாதங்களாக பொது சாலையில் அடிக்கடி சோதனையில் உட்படுத்தப்பட்டு வருவதை பார்த்து வருகிறோம்.

தீவிர சாலை சோதனையில் டாடாவின் மலிவான எலக்ட்ரிக் கார்!! அறிமுகம் விரைவில்

இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த எலக்ட்ரிக் கார் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. ஃபேட் பைக்கர் என்ற யுடியுப் சேனலின் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை வீடியோவில் சோதனை டிகோர் இவி காரின் சில பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

Image Courtesy: The Fat Biker

அதேநேரம் இதற்கு பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்றொரு கார் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. டாடா டிகோர் பெட்ரோல் காரின் அப்டேட் வெர்சன் கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இதன் தோற்றத்தில் தான் 2021 டிகோர் இவி செடான் காரும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தீவிர சாலை சோதனையில் டாடாவின் மலிவான எலக்ட்ரிக் கார்!! அறிமுகம் விரைவில்

இதன்படி ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால் புதிய டிகோர் இவி காரின் முன்பகுதி புதிய ஹெட்லைட் மற்றும் பளபளப்பான க்ரில் அமைப்புடன் கூடுதல் கூர்மையானதாக கொண்டுவரப்பட உள்ளது. அதேபோல் முன்பக்க பம்பரும் அகலமான காற்று ஏற்பான்களுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

தீவிர சாலை சோதனையில் டாடாவின் மலிவான எலக்ட்ரிக் கார்!! அறிமுகம் விரைவில்

இவை தவிர்த்து காரின் மற்ற பாகங்களில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்பட்டுள்ளது போல் தெரியவில்லை. டிகோர் இவி காரின் விலைமிக்க வேரியண்ட்களில் இரு-நிற அலாய் சக்கரங்களும், விலை குறைவான வேரியண்ட்களில் இரும்பு சக்கரங்களும் பொருத்தப்படுகின்றன.

தீவிர சாலை சோதனையில் டாடாவின் மலிவான எலக்ட்ரிக் கார்!! அறிமுகம் விரைவில்

பெட்ரோல் வேரியண்ட்களில் இருந்து வேறுப்படுவதற்காக முன்பக்க க்ரில் மற்றும் அலாய் சக்கரங்களில் நீல நிற தொடுதல்கள் வழங்கப்படுகின்றன. புதிய டிகோர் இவி ஃபேஸ்லிப்ட் காரின் உட்புறத்தில் புதிய பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதை இந்த ஸ்பை வீடியோவின் மூலம் அறிய முடிகிறது.

தீவிர சாலை சோதனையில் டாடாவின் மலிவான எலக்ட்ரிக் கார்!! அறிமுகம் விரைவில்

இவற்றுடன் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் ஓட்டுனர் இருக்கை, ஹர்மன் ஆடியோ சிஸ்டம், பவர் ஜன்னல் போன்றவற்றையும் இந்த அப்டேட் செய்யப்பட்ட எலக்ட்ரிக் காரில் எதிர்பார்க்கிறோம். மற்றப்படி 2021 டிகோர் இவி காரில் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

தீவிர சாலை சோதனையில் டாடாவின் மலிவான எலக்ட்ரிக் கார்!! அறிமுகம் விரைவில்

நெக்ஸான் இவி கார் பெறும் ஜிப்ட்ரான் தொழிற்நுட்பத்தை பெறாத டிகோர் எலக்ட்ரிக் செடான் காரில் 21.5 kWh பேட்டரி தொகுப்பு எலக்ட்ரிக் மோட்டாரில் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின் மூலம் அதிகப்பட்சமாக 40.2 பிஎச்பி மற்றும் 105 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

தீவிர சாலை சோதனையில் டாடாவின் மலிவான எலக்ட்ரிக் கார்!! அறிமுகம் விரைவில்

ஆரம்பத்தில் டாக்ஸி, அரசாங்க ஊழியர்களின் பயன்பாட்டிற்கு என மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த டாடா எலக்ட்ரிக் கார் தற்போது இந்தியாவில் முப்பது நகரங்களில் பொது வாடிக்கையாளர்களுக்கும் விற்பனைக்கு கிடைக்கிறது.

Most Read Articles

English summary
2021 Tata Tigor Electric Facelift Spied Almost Undisguised, Launch Soon.
Story first published: Tuesday, April 6, 2021, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X