ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் உள்ள தேதி விபரம் வெளியாகி இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியாவுக்காக முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,000 யூனிட்டுகளுக்கும் புக்கிங் ஒரு சில மாதங்களில் முடிந்து போனது. இதனால், இந்த எஸ்யூவியை வாங்க முண்டியடித்த பலருக்கு புக்கிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த நிலையில், இந்தியாவில் டிராக் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த ஃபோக்ஸ்வேகன் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்தது. இதனை அதிகாரப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தியது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

இந்த சூழலில், வரும் ஏப்ரல் 1ந் தேதி புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இரண்டாவது லாட்டிலும் 1,000 யூனிட்டுகள் வரை விற்பனை செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

இரண்டாவது லாட்டிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இறக்குமதி செய்யப்பட்டாலும், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கான வாய்ப்பு குறித்தும் ஃபோக்ஸ்வேகன் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

கடந்த ஆண்டு ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாவது லாட்டில் வரும் யூனிட்டுகளுக்கு ரூ.21.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அனைத்து வசதிகளும் கொண்ட ஒரே ஒரு வேரியண்ட்டில் கொண்டு வரப்படுகிறது. இந்த எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹீட்டடு வசதியுடன் முன் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

புதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது!

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும். ஜீப் காம்பஸ், ஹூண்டாய் டூஸான், விரைவில் வரும் சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியானதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 25, 2021, 17:18 [IST]
English summary
Volkswagen is all set to launch new T Roc SUV in India by April 1, 2021.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+