மீண்டும் இந்திய சாலை ஒன்றில் உலாவந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார்!! தீபாவளிக்கு அறிமுகமாகிறது...

ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் ஒன்று மீண்டும் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் இந்திய சாலை ஒன்றில் உலாவந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார்!! தீபாவளிக்கு அறிமுகமாகிறது...

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் என்ற பெயரில் இந்திய சந்தைக்கான புதிய எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகளில் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது. கூட்டணி நிறுவனமான ஸ்கோடாவின் குஷாக் எஸ்யூவி காரின் அதே ப்ளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டைகுன் முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் இந்திய சாலை ஒன்றில் உலாவந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார்!! தீபாவளிக்கு அறிமுகமாகிறது...

அப்போது கொண்டிருந்த தோற்றத்தில் தான் தற்போது மறைப்புகளுடன் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள டைகுன் மாதிரியும் இருப்பது போல் தெரிகிறது. இதனை தி ஃபேட் பைக்கர் என்ற யுடியுப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான வீடியோவின் மூலம் அறியலாம்.

மேலும் இந்த ஸ்பை வீடியோவின் மூலம் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஒரு கச்சிதமான எஸ்யூவி கார் என்பதையும், இது ஃபோக்ஸ்வேகன் டிகுவானின் சிறிய ரக வெர்சன் என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது. பெட்டகம் வடிவிலான தோற்றம் கொண்ட டைகுனின் முன்பக்கத்தில் இரட்டை-பேட் எல்இடி ஹெட்லைட்கள், 3-க்ரோம் ஸ்லாட் க்ரில் உள்ளிட்டவை அனைத்தும் செவ்வக வடிவில் வழங்கப்பட்டுள்ளதை மறைப்பை தாண்டியும் நம்மால் காண முடிகிறது.

மீண்டும் இந்திய சாலை ஒன்றில் உலாவந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார்!! தீபாவளிக்கு அறிமுகமாகிறது...

க்ரில் மையத்தில் புதிய ஃபோக்ஸ்வேகன் முத்திரையை பெற்றுவரவுள்ள இந்த எஸ்யூவி காரில் ஏர் டேம் முன்பக்கத்தின் கீழ்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு கீழே ஃபாக்ஸ் சறுக்கு-பாதுகாப்பான் தட்டை எதிர்பார்க்கலாம். எஸ்யூவி கார் தோற்றத்திற்காக டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள், சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா மற்றும் பொருட்களை கட்டி வைப்பதற்கு மேற்கூரையில் தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றையும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுனில் வழங்கவுள்ளது.

மீண்டும் இந்திய சாலை ஒன்றில் உலாவந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார்!! தீபாவளிக்கு அறிமுகமாகிறது...

அதேபோல் காரின் பக்கவாட்டில் பிளாஸ்டிக் க்ளாடிங்-களையும் எதிர்பார்க்கலாம். பின்பக்கத்தில் ஸ்ட்ரிப் மூலமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்கள், ஃபாக்ஸ் சறுக்கு-பாதுகாப்பு தட்டு போன்றவற்றை டைகுன் பெற்றுவர வாய்ப்புள்ளது.

மீண்டும் இந்திய சாலை ஒன்றில் உலாவந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார்!! தீபாவளிக்கு அறிமுகமாகிறது...

இந்த ஸ்பை வீடியோவில் காரின் உட்புறத்தை பார்க்க முடியவில்லை. நமக்கு தெரிந்தவரையில் இதன் உட்புறத்தில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்புடன் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான், ஆட்டோமேட்டிக் ஏசி, எலக்ட்ரிக் சன்ரூஃப், இணைப்பு கார் தொழிற்நுட்பம், க்ருஸ் கண்ட்ரோல், ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படும்.

மீண்டும் இந்திய சாலை ஒன்றில் உலாவந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார்!! தீபாவளிக்கு அறிமுகமாகிறது...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஃபோக்ஸ்வேகன் டைகுனில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ற இரு என்ஜின் தேர்வுகள் கொடுக்கப்படவுள்ளன. இதில் முதல் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கொடுக்கப்படவுள்ளது.

மீண்டும் இந்திய சாலை ஒன்றில் உலாவந்த புதிய ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார்!! தீபாவளிக்கு அறிமுகமாகிறது...

அதுவே, இரண்டாவது பெட்ரோல் என்ஜின் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்படலாம். இதே என்ஜின் தேர்வுகள் தான் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ஸ்கோடா குஷாக்கிலும் கொடுக்கப்படவுள்ளன. ஃபோக்ஸ்வேகன் டைகுனின் அறிமுகம் தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாக இருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 13, 2021, 9:30 [IST]
English summary
Volkswagen Taigun Spied Testing In India Once Again. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+