கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

புதுமண தம்பதிகளான கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் ஜோடிகள் மிகப் பெரிய சொகுசு கார் விரும்பிகள் ஆவர். இவர்களிடத்தில் என்ன மாதிரியான விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் இருக்கின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே ஆச்சரியப்படும் வகையில் பாலிவுட் திரையுலக பிரபலங்களான கத்ரீனா கைஃப்-நடிகர் விக்கி கௌஷல் திருமணம் நடைபெற்றிருக்கின்றது. இவர்கள் இருவரும் மிகப்பெரிய கார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கும். இவர்கள் இடத்தில் என்ன விலையுயர்ந்த சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

நடிகை கத்ரீன கைஃப், நடிகர் கௌஷல் திருமண விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய (டிசம்பர்9) தினம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. ஒன்பது வெள்ளை நிற குதிரைகளின் அணிவகுப்பில் மாப்பிள்ளை கௌஷல் வர, அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர காரில் மணப்பெண் கத்ரீனா கைஃப் கல்யாணத்திற்கு வந்திறங்கியதாகக் கூறப்படுகின்றது.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

இவர்களின் திருமணத்திற்கு பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க திருமணத்திற்கு வந்தவர்களுக்கு கூட செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க அனுமதிக்கப்படவில்லையாம். அனைவரின் செல்போன்களும் அவர்களுக்காக வழங்கப்பட்ட அரையிலேயே வைத்து விட்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், திருமணத்தில் முழுக்க தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

குறிப்பாக, க்யூஆர் கோட் அடங்கிய திருமண அழைப்பிதழ் கொண்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு அதிக பாதுகாப்புடன் இவர்களின் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே இவர்கள் வைத்திருக்கும் கார்கள் பற்றிய சுவாரஷ்ய தகவல்கள் தற்போது வெளி வந்திருக்கின்றன. நடிப்பின் மீது பல மடங்கு ஆர்வம் கொண்டிருக்கும் கத்ரீனாவிற்கு சொகுசு கார்கள் மீதும் அதிக ஈர்ப்பு இருக்கின்றது.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரிடத்தில் பல கார்கள் இருக்கின்றன. அந்தவகையில், ரேஞ்ஜ் ரோவர் வோக் எல்டபிள்யூ சொகுசு கார் அவர் பயன்படுத்தும் மிக விலையுயர்ந்த மற்றும் அதிக சொகுசு வசதிகள் அடங்கிய காராக இருக்கின்றது. இக்காரின் விலை சுமார் 2.5 கோடி ரூபாய் ஆகும். இதுமட்டுமின்றி, கத்ரீனாவிடம் இன்னும் சில சொகுசு கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் 350, ஆடி க்யூ7 உள்ளிட்ட ஆடம்பர கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார். இதில் பென்ஸ் எம்எல் 350 காரையே அவர் படப்பிடிப்பு உள்ளிட்ட வழக்கமான நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் அவர் சென்றபோது பல முறை கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றார். இதன் விலை ரூ. 50 லட்சம் ஆகும்.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

இதேபோல் ஆடி க்யூ7 சொகுசு காரும் அதிக விலைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இக்காரிலும் அவர் அவ்வப்போது காட்சியளிப்பதுண்டு இந்த கார் ரூ. 67 லட்சம் தொடங்கி ரூ. 80 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதில், கத்ரீனா பயன்படுத்தும் ஆடி க்யூ7 காரின் விலை பற்றிய துள்ளியமான விபரம் தெரியவில்லை.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

கத்ரீனா கைஃப் போலவே அவரின் கணவர் விக்கி கௌசலும் மிகப் பெரிய கார் பிரியர் ஆவார். இவர் மிக மிக சமீபத்திலேயே ரேஞ்ஜ் ரோவர் ஆடம்பர எஸ்யூவி கார் மாடலான லேண்ட் ரோவர் எஸ்யூவி காரை வாங்கினார். இந்த கார் குறித்த படங்களை அவர் அவரது சமூக வலைதள பக்கம் வாயிலாக வெளியிட்டிருந்தார். இந்த கார் இந்தியாவில் ரூ. 2.40 கோடிகளுக்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

இத்துடன், அவர் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி சொகுசு காரையும் பயன்படுத்தி வருகின்றார். இந்த காரின் விலை ரூ. 63 லட்சம் ஆகும். இது உயர்நிலை வேரியண்டின் விலை ஆகும். இதன் ஆரம்பநிலை வேரியண்ட் ரூ. 58 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

கணவன், மனைவி இருவருமே மிக பெரிய சொகுசு கார் லவ்வரா இருக்காங்களே... ரெண்டு பேரிடமும் 2 கோடி ரூபா கார் இருக்கு!

மேலும், தனது கார் சேகரிப்பில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்5 சொகுசு காரையும் வைத்திருக்கின்றார். இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 76 லட்சம் தொடங்கி ரூ. 88 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவையே விக்கி கௌசல் பயன்படுத்தும் விலையுயர்ந்த கார்களிலேயே மிகவும் முக்கியமான ஆடம்பர வாகனங்கள் ஆகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Newly wed couple katrina kaif and vicky kaushal luxury car collection
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X