விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் ஓர் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில் சில தள்ளுபடி சலுகை இந்த எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

டாடா நெக்ஸான் இவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் முழுவதுமாக நிறைவு பெற்றுவிட்டது. இதனை முன்னிட்டு ரூ.15,000 மதிப்பிலான எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடி சிறப்பு சலுகையாக டாடாவின் டீலர்ஷிப் மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

இது சிறப்பு சலுகையாகும். வழக்கமாக நெக்ஸான் இவி காரின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 வருட/ 1,60,000கிமீ உத்தரவாதத்தை ஆரம்பத்தில் இருந்தே டாடா நிறுவனம் வழங்கி வருகிறது. ரூ.13.99 லட்சத்தை ஆரம்ப விலையாக கொண்டுள்ள நெக்ஸான் இவி கார் 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த விற்பனை எலக்ட்ரிக் கார் என்ற விருதை பெற்றுள்ளது.

விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் கடந்த 2020ஆம் வருட விற்பனை எண்ணிக்கை 2,529 ஆகும். ஆனால் இதற்கு அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ள எம்ஜி இசட்எஸ் இவி மற்றும் ஹூண்டாய் கோனா இவி கார்களின் விற்பனை எண்ணிக்கை பெரிய வித்தியாசங்களுடன் 1,142 மற்றும் 223ஆக உள்ளது.

விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

வருகிற ஜனவரி 28ஆம் தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்யும் இந்த டாடா எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் காராக மட்டுமில்லாமல், மலிவான விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் காராகவும் விளங்குகிறது.

விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

இதுவே இதன் நிலையான விற்பனைக்கு காரணமாகும். எக்ஸ்எம், எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்+ லக்ஸ் என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த எலக்ட்ரிக் காரின் விலைகள் ரூ.13.99 லட்சத்தில் இருந்து ரூ.16.25 லட்சம் வரையில் உள்ளன.

விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

சிறப்பு சலுகையுடன் எளிய மாதத்தவணை திட்டத்தையும் நெக்ஸானை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த எளிய மாதத்தவணை திட்டத்தின்படி, 36 மாதங்களுக்கு ரூ.29,500 செலுத்தி நெக்ஸான் இவி காரை சொந்தமாக்கி கொள்ளலாம்.

விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

மொத்தம் 35 இணைப்பு வசதிகளுடன் வழங்கப்படும் டாடா நெக்ஸான் இவி காரில் 30.2 kWh பேட்டரி மற்றும் 3 பேஸ் நிரத்தர காந்த ஒத்திசைவு மோட்டார் இணைக்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் மோட்டாரின் மூலமாக அதிகப்பட்சமாக 127 எச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

விற்பனையில் ஓராண்டு நிறைவு!! டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

312கிமீ ரேஞ்சை சிங்கிள்-முழு சார்ஜில் வழங்கும் இந்த எலக்ட்ரிக் கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 9.9 வினாடிகளில் எட்டிவிடும். இதன் பேட்டரியை 15 ஆம்பியர் பவர் அவுட்புட் வழியாக 20-ல் இருந்து 100 சதவீதம் சார்ஜ் நிரப்ப 8 மணிநேரங்களும், விரைவு டிசி சார்ஜரில் 0-வில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் ஏற்ற வெறும் 1 மணிநேரங்களும் தேவைப்படும்.

Most Read Articles

English summary
Nexon electric going to celebrate 1st Anniversary Tata announced discount offer.
Story first published: Saturday, January 23, 2021, 8:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X