Just In
- 3 hrs ago
20 வருடங்களுக்கு பிறகும் விற்பனையில் கெத்து காட்டும் மஹிந்திரா பொலிரோ... சேல்ஸ் எங்கயோ போயிருச்சு...
- 4 hrs ago
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- 6 hrs ago
தல அஜீத்துக்கே சவால் விடுவாங்க போல... ராயல் என்பீல்டு பைக்கில் கெத்து காட்டிய பிரபல நடிகை... யார்னு தெரியுதா?
- 7 hrs ago
கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனையான கார் இதுதானாம்!! எப்போதும்போல் மாருதி சுஸுகி டாப்!
Don't Miss!
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்பப்பா... புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் அந்த 3வது எஞ்சின் ஆப்ஷன் இருக்கே?... நம்ம ரோடு தாங்குமா?
புதிய தலைமுறை அம்சங்களுடன் ஸ்கோடா ஃபேபியா கார் முற்றிலும் புதிய தளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் புரோட்டோடைப் மாடலின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும் இந்த புதிய தலைமுறை ஃபேபியா காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் படங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் எம்க்யூபி ஏ0 என்ற கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4,107 மிமீ நீளமும், 1,780 மிமீ அகலமும், 1,460 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. மேலும், இந்த காரின் வீல்பேஸ் நீளம் 2,564 மிமீ ஆக உள்ளது. பூட்ரூம் கொள்திறன் 380 லிட்டர்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் முன்புற வடிவமைப்பு பாரம்பரிய அம்சங்களுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மெல்லிய எல்இடி ஹெட்லைட்டுகள், V வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், அழகிய டெயில் லைட்டுகள் காரின் வசீகரத்திற்கு உறுதுணையாக உள்ளன.

இந்த கார் டிராக் கோ எஃபிசியன்ட் திறன் 0.28 சிடி என்ற அளவில் இருக்கும் வகையில் மிகச் சிறந்த ஏரோடைனமிக்ஸ் தத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா ஃபேபியா காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப், மடக்கு வசதியுடன் பின் இருக்கைகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

உலக அளவில் இந்த காரில் மூன்று விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் மற்றும் 5 விதமான பவரை வெளிப்படுத்தும் திறனில் வழங்கப்பட உள்ளன. இதில், முதலாவது தேர்வான சாதாரண வகை 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 64 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதே எஞ்சின் 70 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மற்றொரு தேர்விலும் கிடைக்கும். இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் வழங்கப்படும்.

இரண்டாவதாக 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதே எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மற்றொரு தேர்விலும் கிடைக்கும். முதல் தேர்வில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும், இரண்டாவது ஆப்ஷனில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படும்.

இந்த காரில் மூன்றாவதாக வழங்கப்பட உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுதான் எல்லோரின் புருவத்தை உயர்த்தும் வகையில் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட உள்ளது. இந்த எஞ்சின் புதிய ஸ்கோடா ஃபேபியா காரின் மதிப்பை வெகுவாக உயர்த்தும் விஷயமாக இருக்கிறது.