மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்.. ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

ரொம்ப ரொம்ப பழைய டாடா (Tata) லாரியை ரெசார்ட் நிர்வாகம் ஒன்று மிகவும் அழகிய விடுதியாக மாற்றியிருக்கின்றது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் வீடியோ மற்றும் சுவாரஷ்ய தகவலைக் கீழே பார்க்கலாம், வாங்க.

மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்... ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

இந்தியாவில் மோட்டார் ஹவுஸ் கலாச்சாரம் அண்மைக் காலங்களாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. அதிலும், கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பின்னர் மக்கள் பலர் கேரவன்கள், மோட்டார் வீடுகள் போன்றவற்றில் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கின்றனர். தங்களின் தனிப்பட்ட வாகனங்களையே சிலர் இவ்வாறு மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவல் பலவற்றை நாம் பார்த்திருக்கின்றோம்.

மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்... ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

இந்த நிலையில், ஓர் பழைய லாரியை இந்தியாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் மோட்டார் வீடாக மாற்றியமைத்திருக்கின்றார். இது வீடு அமைப்பைக் கொண்டிருக்கும் தங்கும் விடுதி ஆகும். படுக்கை அறை மற்றும் லிவிங் ரூம் என சகல வசதிகளும் இதில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்... ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

கோலாப்பூரைச் சேர்ந்த நிசர்க் ரெசார்ட் நிர்வாகமே இந்த மோட்டார் வாகன ஹோட்டலை உருவாக்கியிருக்கின்றது. வாடிக்கையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளைக் கவரும் பொருட்டு ரெசார்ட் நிர்வாகும் இதனைக் கட்டமைத்திருக்கின்றது. விண்டேஜ் லாரியில் ஓர் ஹோட்டல் அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்றுக் கூறலாம்.

மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்... ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

அதேநேரத்தில் தற்போது பயன்பாட்டில் இருப்பதைக் காட்டிலும் வித்தியாசமான மோட்டார் வாகன ஹோட்டலாகவும் இது காட்சியளிக்கின்றது. ஆகையால், கடந்த காலத்தில் நாம் பார்த்தவற்றைக் காட்டிலும் பல மடங்கு மாறுபட்டதாக இது இருக்கிறது. இரண்டு அடுக்கில் இவ்வாகனம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்... ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

இரண்டு அடுக்குகளும் முழுக்க முழுக்க மர கட்டைகளால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, இதன் மேற்கூரை பழங்கால வீடுகளைப் போல் ஓடுகளைக் கொண்டிருக்கின்றது. இவ்வீட்டின் நுழைவாயில் லாரியின் பின் பக்கம் இடம் பெற்றிருக்கின்றது. இது ஓர் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவன தயாரிப்பு லாரியாகும். 1970 ஆண்டு மாடல் லாரி இதுவாகும்.

இந்த லாரியைக் கொண்டே நிசர்க் ரெசார்ட் மோட்டார் வீட்டை உருவாக்கியிருக்கின்றது. இந்த மோட்டார் ஹோட்டாலில் பெட்ரூம் படிகட்டிற்கு கீழும், ஓர் பால்கனி வசியும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முழுக்க முழுக்க பழங்கால வீடுகளை போல் இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. மிகவும் நேர்த்தியாகவும், கச்சிதமாகவும் இதன் வடிவமைப்பு இருக்கின்றது.

மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்... ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

இதுவரை உருவாக்கப்பட்ட பெரும்பாலான மோட்டார் ஹோட்டல்கள் நகர்ந்து செல்லும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஹோட்டால் ஒரே இடத்தில் நிலை நிறுத்தி வைக்கும் வகையில் கட்டமைகப்பட்டிருக்கின்றது. மேலும், ஊண்று கம்பிகள் (ஸ்டாண்டுகள்) வாயிலாக இது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்... ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

இந்தியாவிலேயே இதுபோன்று ஓர் ஹோட்டல் உருவாக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏனெனில் இதுவரை மோட்டார் ஹோம்கள் கார்கள் மற்றும் ஆட்டோக்களில் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றது. மினி பேருந்து மற்றும் வேன்களில்கூட இதுமாதிரியான வீடுகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், லாரியில் இதுமாதிரியான ஹோட்டல் கட்டமைக்கப்படுவது இப்போதே முதல் முறையாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்... ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஜாஜ் நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் அடுக்குமாடி அமைப்பில், சூரிய குளியல் வசதி உடன் கூடிய மோட்டார் ஹோமை உருவாக்கியிருந்தார். தமிழகத்தை சேர்ந்த ஓர் இளைஞரை இந்த மோட்டார் ஹோமை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மிக பழைய டாடா லாரியை அழகிய வீடாக மாற்றிய ரெசார்ட் உரிமையாளர்... ரெண்டு அடுக்கு மாடியில் செம்ம கிளாசியா இருக்கு!

நாமக்கல் மாவட்டம் பரமதி-வேலூரைச் சேர்ந்த அருண் பிரபு என்ற 23 வயதுடைய இளைஞரை பஜாஜ் ஆட்டோவில் அடுக்குமாடி வீட்டை உருவாக்கியவர். ஆர்கிடெக்சராக பணியாற்றி வரும் இவர் தனது சொந்த முயற்சியில் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து மேற்கத்திய ஸ்டைலில் ஆட்டோ ஹோமோ உருவாக்கினார். இது பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையிலேயே சகல வசதிகள் கொண்ட லாரி வீடு கிளாசியான ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆட்டோ வீடு பற்றிய மேலும் விபரங்களை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

குறிப்பு: கடைசி நான்கு படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nisarg resort converts tata vintage truck to cottage
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X