சலுகை விலையில் ராணுவ கேன்டீன்களில் விற்பனைக்கு வந்தது நிஸான் மேக்னைட் கார்!
ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை ஊழியர்களுக்கான பல்பொருள் விற்பனை மையங்களில் நிஸான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேக்னைட் மட்டுமின்றி, நிஸான் நிறுவனத்தின் கிக்ஸ் மற்றும் டட்சன் கார்களும் ராணுவ கேன்டீனில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்களுக்காக மிலிட்டரி கேண்டீன் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் பல்பொருள் விற்பனை மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் அனைத்து பொருட்களும் வெளி சந்தையை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த வகையில், ராணுவ கேன்டீன்களில் கார் உள்ளிட்ட வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், நிஸான் நிறுவனம் தனது அனைத்து கார் மாடல்களையும் ராணுவ கேன்டீன்கள் மூலமாக விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. மேலும், அனைத்து கார்களுக்கான விலை விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

நிஸான் நிறுவனத்தின் மேக்னைட், கிக்ஸ், டட்சன் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் ஆகிய கார் மாடல்கள் ராணுவ கேன்டீன்களில் விற்பனைக்கு கிடைக்கும். ராணுவ கேன்டீன்களில் இந்த கார்களுக்கான விலையை வேரியண்ட் வாரியாக தொடர்ந்து பார்க்கலாம்.

நிஸான் மேக்னைட் விலை விபரம்
நிஸான் மேக்னைட் கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். சாதாரண பெட்ரோல் எஞ்சின் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்விலும், டர்போ பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் கிடைக்கும். வெளிசந்தையைவிட ரூ.1.54 லட்சம் குறைவான விலையில் ராணுவ கேன்டீனில் மேக்னைட் கார் வந்துள்ளது.

நிஸான் மேக்னைட் காரின் ராணுவ கேன்டீன் விலை விபரத்தை அட்டவணையில் பார்க்கலாம்.
| Nissan Magnite | Price For CSD Customer |
| MT XE BS VI | ₹4,82,306 |
| MT XL BS VI | ₹5,27,074 |
| MT XV BS VI | ₹5,88,853 |
| MT XV PREMIUM BS VI | ₹6,66,748 |
| MT XL TURBO BS VI | ₹6,13,144 |
| MT XV TURBO BS VI | ₹6,74,923 |
| MT XV PREMIUM TURBO BS VI | ₹7,43,864 |
| TURBO CVT XL BS VI | ₹6,90,260 |
| TURBO CVT XV BS VI | ₹7,52,040 |
| TURBO CVT XV PREMIUM BS VI | ₹8,20,981 |

நிஸான் கிக்ஸ் விலை விபரம்
நிஸான் கிக்ஸ் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதில், 1.5 லிட்டர் எஞ்சின் மாடல் குறைவான விலை தேர்வாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஒரேயொரு வேரியண்ட்டில் ராணுவ கேன்டீனில் கிடைக்கும். மற்றொரு டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில்கிடைக்கும்.
| Nissan Kicks
| Price For CSD Customer |
| KICKS XV Premium 1.3 Turbo CVT | ₹12,83,287 |
| KICKS XV 1.3 TURBO | ₹10,58,257 |
| KICKS XV Premium 1.3 Turbo | ₹11,39,150 |
| KICKS XV Premium (O) Dualtone 1.3 TURBO | ₹12,42,516 |
| KICKS XV 1.5 | ₹8,80,587 |

டட்சன் கார்கள் விலை விபரம்
ராணுவ கேன்டீன்களில் டட்சன் நிறுவனத்தின் ரெடிகோ, கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் விற்பனைக்கு கிடைக்கும். ரெடிகோ கார் மேனுவல் மற்றும் ஏஎம்டி வேரியண்ட்டுகளிலும், கோ மற்றும் கோ ப்ளஸ் கார்கள் மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
| Datsun
| Price For CSD Customer |
| GO T CVT | ₹5,33,080 |
| GO Plus T | ₹5,05,433 |
| redi GO A | ₹3,28,005 |
| redi-GO T | ₹3,52,963 |
| redi-GO T(O) | ₹3,82,628 |
| redi-GO T (O) 1.0L | ₹3,99,050 |
| redi-GO T (O) 1.0L AMT | ₹4,18,324 |
| GO T | ₹4,83,341 |
| GO Plus T CVT | ₹5,76,582 |


Click it and Unblock the Notifications








