நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

இந்திய சந்தையில் நிஸான் நிறுவனம் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

நிஸான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது இரண்டு கார் பிராண்டுகளான நிஸான் மற்றும் டட்சனின், கடந்த ஆகஸ்ட் மாத அதிகாரப்பூர் விற்பனை எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி மொத்தம் 3,209 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 810 ஆக மட்டுமே இருந்தது.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

இதன் மூலம் விற்பனையில் 296.17 சதவீத வளர்ச்சியை நிஸான் இந்தியா நிறுவனம் பதிவு செய்துள்ளது. ஆனால் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிட்டால் நிஸான் இந்தியா கார்களின் விற்பனை 24.65 சதவீதம் குறைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஜூலை மாதம் நிஸான் இந்தியா நிறுவனம் 4,259 கார்களை விற்பனை செய்திருந்தது.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

எனினும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் நிஸான் இந்தியா கார்களின் விற்பனை சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பது உண்மையிலேயே சிறப்பான விஷயம். இதற்கான பெருமை எல்லாம் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காருக்குதான் செல்ல வேண்டும்.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

நிஸான் மேக்னைட் கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. குறைவான விலை மற்றும் சிறப்பான இன்ஜின் ஆகியவை காரணமாக நிஸான் மேக்னைட் கார் இந்திய சந்தையில் உடனடியாக பிரபலமானது. நிஸான் மேக்னைட் காருக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

தற்போதைய நிலையில் தேர்வு செய்யப்படும் வேரியண்ட்டை பொறுத்து நிஸான் மேக்னைட் காருக்கு 8 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பு காரணமாக, மேக்னைட் காரின் உற்பத்தியை நிஸான் நிறுவனம் அதிகரித்தது.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

ஆனால் செமி-கண்டக்டர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த பிரச்னையில் இருந்து நிஸான் நிறுவனமும் தப்பவில்லை. நிஸான் மட்டுமல்லாது மஹிந்திரா, மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களும் செமி-கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

இதன் காரணமாக வாகன உற்பத்தி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக வாகனங்களின் காத்திருப்பு காலம் மேலும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் இந்த பிரச்னை ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

இனி வரும் மாதங்களிலும் செமி-கண்டக்டர் பற்றாக்குறை பிரச்னை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கூடுமான வரை வாடிக்கையாளர்களுக்கு மேக்னைட் கார்களை விரைவாக டெலிவரி செய்வதற்கு நிஸான் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் டீலர்ஷிப்களின் எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சிகளிலும் நிஸான் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

நிஸான் மேக்னைட் காரில் மொத்தம் இரண்டு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.0 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், இன்லைன்-3 பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. மற்றொன்று 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 பெட்ரோல் இன்ஜின் ஆகும்.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் வழங்கும் (சிவிடி வேரியண்ட்களில் 152 என்எம்). 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதேசமயம் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் சிவிடி தேர்வு கிடைக்கிறது. அத்துடன் நிஸான் மேக்னைட் காரில் ஏராளமான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

நிஸான் நிறுவனத்தை வேற லெவலுக்கு தூக்கி சென்ற மேக்னைட் கார்... விற்பனையில் பிரம்மாண்ட வளர்ச்சி!

இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டொயோட்டா அர்பன் க்ரூஸர், ரெனால்ட் கைகர் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன், நிஸான் மேக்னைட் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார் போட்டியிட்டு வருகிறது. வரும் காலங்களில் இந்த செக்மெண்ட்டில் இன்னும் நிறைய கார்கள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan india registered sales growth in august 2021 here are all the details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X