அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.80,000 வரை சேமிப்பை பெறும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக நிஸான் கிக்ஸ் உள்ளது. ஆனால், நிஸான் நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை தரத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாக, இந்த எஸ்யூவிக்கு போதிய சந்தை இல்லாத நிலை இருந்து வருகிறது.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

இந்த நிலையில், நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் மதிப்பை கூட்டுவதற்கான முயற்சிகளில் நிஸான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சிறப்பு சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

இதன்படி, புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவியை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.80,000 வரை அதிகபட்சமாக சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவியின் விலையில் ரூ.10,000 வரை நேரடி தள்ளுபடியாக கொடுக்கப்படுகிறது. பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய கிக்ஸ் எஸ்யூவியை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரை கூடுதல் மதிப்பை பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

இதுதவிர்த்து, தொடர்ந்து நிஸான் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி போனஸாக ரூ.20,000 வரை பெறும் வாய்ப்பு இருக்கிறது. புத்தாண்டை முன்னிட்டு இந்த சிறப்புச் சேமிப்பு சலுகைகளை நிஸான் அறிவித்துள்ளது.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

கடந்த ஆண்டு மே மாதம் நிஸான் கிக்ஸ் எஸ்யூவி பிஎஸ்6 தர எஞ்சின் தேர்வுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.9.49 லட்சம் முதல் ரூ.14.14 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

நிஸான் கிக்ஸ் எஸ்யூவி 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இதன் சாதாரண 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

இதன் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் எஞ்சின் அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 254 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். இதன் ரகத்தில் மிகவும் சக்திவாய்ந்த தேர்வாக உள்ளது. இந்த எஸ்யூவி கார் 5 மேனுவல் மற்றும் 2 ஆட்டோமேட்டிக் என மொத்தம் 7 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

இந்த எஸ்யூவியின் டாப் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், கார்னரிங் லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட், 360 டிகிரி கேமரா, ஐட்லிங் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி, ஸ்மார்ட் வாட்ச் மூலமாக கட்டுப்படுத்தும் நிஸான் கனெக்ட் தொழில்நுட்ப வசதி, டியூவல் டோன் கேபின், ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

இந்த காரில் 4 ஏர்பேக்குகள், இபிடி, பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அட்ராசக்கை... நிஸான் கிக்ஸ் எஸ்யூவி மீது ரூ.80,000 வரை சேமிக்கும் வாய்ப்பு!

புதிய நிஸான் கிக்ஸ் எஸ்யூவி பிளேடு சில்வர், நைட் ஷேட், பிரான்ஸ் க்ரே, ஃபயர் ரெட், பியர்ல் ஒயிட், டீப் புளூ பியர்ல் ஆகிய ஒற்றை வண்ணத் தேர்வுகளிலும், பிரான்ஸ் க்ரே - ஆம்பர் ஆரஞ்ச், ஃபயர் ரெட் - ஓனிக்ஸ் பிளாக் மற்றும் பியர்ல் ஒயிட் -ஓனிக்ஸ் பிளாக் ஆகிய இரட்டை வண்ண தேர்வுகளில் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Japanese carmaker Nissan has announced new year offer for Kicks SUV in India.
Story first published: Thursday, January 7, 2021, 14:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X