இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!

நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!

இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதாக நிஸான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய சந்தையில் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளதை புரிந்து கொள்ளலாம்.

இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!

இந்திய சந்தையில் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 4.99 லட்ச ரூபாய் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் (அறிமுக சலுகை விலை, எக்ஸ் ஷோரூம்) நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!

இதன் மூலம் இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் கிடைக்கும் காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை நிஸான் மேக்னைட் பெற்றது. ஆனால் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியின் விலையை நிஸான் நிறுவனம் சமீபத்தில் 50 ஆயிரம் ரூபாய் உயர்த்தியது. எனினும் ஆரம்ப நிலை XE வேரியண்ட்டின் விலை மட்டுமே உயர்த்தப்பட்டது.

இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!

இதன் விளைவாக தற்போது 5.49 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம்) நிஸான் மேக்னைட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் விலை உயர்ந்துள்ள நிலையிலும் கூட, இன்னமும் இந்தியாவின் மிகவும் மலிவான காம்பேக்ட் எஸ்யூவி என்ற பெருமையை நிஸான் மேக்னைட்தான் தன் கைவசம் வைத்துள்ளது.

இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!

XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என மொத்தம் 4 வேரியண்ட்களில் நிஸான் மேக்னைட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், டாப் வேரியண்ட்டான XV பிரீமியம் வேரியண்ட் 9.35 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு கிடைத்துள்ள வரவேற்பிற்கு இந்த சவாலான விலை நிர்ணயம் முக்கியமான காரணம்.

இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!

1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என நிஸான் மேக்னைட் காரில் மொத்தம் 2 பெட்ரோல் இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும் மற்றும் 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!

மறுபக்கம் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் இந்த இன்ஜின் வழங்கப்படுகிறது. விலை குறைவு என்றாலும், பல்வேறு வசதிகளையும் நிஸான் நிறுவனம் மேக்னைட் காரில் வழங்கியுள்ளது.

இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்களுக்கு சவால் அளித்து வரும் நிஸான் மேக்னைட், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் கிகர் காருடனும் போட்டியிடவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 23, 2021, 20:36 [IST]
English summary
Nissan Magnite Compact-SUV Bookings Cross 35,000 Units Mark - Here Are All The Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+