விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!

நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, இந்தியா முழுவதும் 720க்கும் மேற்பட்ட மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கார்களை டெலிவரி செய்துள்ளதாக நிஸான் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி கடந்த டிசம்பர் 2ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!

மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் டெலிவரி பணிகளை வேகப்படுத்தியுள்ள அதே நேரத்தில், கூடுதலாக 12வது எடிசன் 'ஹேப்பி வித் நிஸான்' என்ற விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் முகாமையும் நிஸான் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. நிஸான் நிறுவனத்தின் இந்த சிறப்பு சர்வீஸ் முகாம், ஒரு மாத காலத்திற்கு நடைபெறும்.

விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!

இந்த சர்வீஸ் முகாமில், இலவச 60-பாயிண்ட் கார் செக்-அப், இலவச கார் வாஷ் உள்ளிட்ட பலன்களை நிஸான் வாடிக்கையாளர்கள் பெற முடியும். கொரோனா வைரஸ் பிரச்னைகளால் இந்த சேவைகளை பெற முடியாத வாடிக்கையாளர்களும் தற்போது இந்த சர்வீஸ் முகாமை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சர்வீஸ் முகாம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு இன்னும் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!

இதன்படி குறிப்பிட்ட பாகங்கள் மற்றும் ஆக்ஸஸெரீஸ்களுக்கு நிஸான் நிறுவனம் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. அதே சமயம் லேபர் சார்ஜில், 20 சதவீதம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. சரி, இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வரும் நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு இனி வருவோம்.

விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!

XE, XL, XV மற்றும் XV பிரீமியம் என மொத்தம் 4 வேரியண்ட்களில் இந்த காம்பேக்ட் எஸ்யூவியை நிஸான் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் விலையை நிஸான் நிறுவனம் சமீபத்தில் உயர்த்தியது. தற்போது 5.49 லட்ச ரூபாய் முதல் 9.35 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் நிஸான் மேக்னைட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!

இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். விலை உயர்த்தப்பட்டுள்ள சூழலிலும் கூட, நிஸான் மேக்னைட்தான் இன்னமும் இந்தியாவில் கிடைக்கும் மிகவும் மலிவான காம்பேக்ட் எஸ்யூவி காராக உள்ளது. இந்த மலிவான விலைதான், நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதற்கு முக்கியமான காரணமாக உள்ளது.

விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன. இதனை நிஸான் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாக இருப்பதால், நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவியை இந்திய வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்ப தொடங்கியுள்ளனர்.

விலை மிகவும் குறைவு என்பதால் வாடிக்கையாளர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... நிஸான் மேக்னைட் டெலிவரி பணிகள் தீவிரம்!

மிகவும் சவால் நிறைந்த காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ உள்ளிட்ட கார்களுடன் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது. நடப்பாண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் ரெனால்ட் கிகர் காருக்கும் இது சவால் அளிக்கும்.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Deliveries Cross Over 720 Units Across India - Here Are All The Details. Read in Tamil
Story first published: Monday, January 25, 2021, 21:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X