அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

நிஸான் மேக்னைட்டின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.33,000 வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

நிஸான் மேக்னைட், காம்பெக்ட் எஸ்யூவி காராக கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை அறிமுகத்தின்போது ரூ.5 லட்சத்திற்கும் குறைவாவே கொண்டுவரப்பட்டது.

அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

ஆனால் அப்போதே மேக்னைட்டின் ஆரம்ப விலை 2021ஆம் ஆண்டில் இருந்து சிறிது அதிகரிக்கப்படும் என்று நிஸான் நிறுவனம் தெரிவித்தது. அதன்படி 2021 ஜனவரி மாத துவக்கத்தில் மேக்னைட்டின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5 லட்சத்திற்கு அதிகமாக கொண்டுவரப்பட்டது.

அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

அதன்பின் கடந்த மூன்று மாதங்களில் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் விலைகளை மீண்டும் நிஸான் நிறுவனம் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது அறிமுகத்தில் இருந்து மூன்றாவது முறையாக மேக்னைட்டின் விலைகள் அதிகப்பட்சமாக ரூ.33,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

Variant Old Price New Price Difference
1.0-litre petrol XE ₹5.49 Lakh ₹5.59 Lakh +₹10,000
1.0-litre petrol XL ₹5.99 Lakh ₹6.32 Lakh +₹33,000
1.0-litre petrol XV ₹6.68 Lakh ₹6.99 Lakh +₹31,000
1.0-litre petrol XV DT ₹6.82 Lakh ₹7.15 Lakh +₹33,000
1.0-litre petrol XV Premium ₹7.55 Lakh ₹7.68 Lakh +₹13,000
1.0-litre petrol XV Premium DT ₹7.69 Lakh ₹7.84 Lakh +₹15,000
1.0-litre turbo-petrol XL ₹7.29 Lakh ₹7.49 Lakh +₹20,000
1.0-litre turbo-petrol XV ₹7.98 Lakh ₹8.09 Lakh +₹11,000
1.0-litre turbo-petrol XV DT ₹8.12 Lakh ₹8.25 Lakh +₹13,000
1.0-litre turbo-petrol XV Premium ₹8.75 Lakh ₹8.89 Lakh +₹14,000
1.0-litre turbo-petrol XV Premium DT ₹8.89 Lakh ₹9.05 Lakh +₹16,000
1.0-litre turbo-petrol XL CVT ₹8.19 Lakh ₹8.39 Lakh +₹20,000
1.0-litre turbo-petrol XV CVT ₹8.88 Lakh ₹8.99 Lakh +₹11,000
1.0-litre turbo-petrol XV CVT DT ₹9.02 Lakh ₹9.15 Lakh +₹13,000
1.0-litre turbo-petrol XV Premium CVT ₹9.65 Lakh ₹9.74 Lakh +₹9,000
1.0-litre turbo-petrol XV Premium CVT DT ₹9.79 Lakh ₹9.90 Lakh +₹11,000
அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

அதிகப்பட்ச விலை அதிகரிப்பை 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கப்படும் மேக்னைட்டின் எக்ஸ்எல் மற்றும் எக்ஸ்வி டிடி வேரியண்ட்கள் பெற்றுள்ளன. முன்பு முறையே ரூ.5.99 லட்சம் மற்றும் ரூ.6.82 லட்சமாக இருந்த இவற்றின் விலைகள் தற்போது ரூ.6.32 லட்சம் மற்றும் ரூ.7.15 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது.

அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

குறைந்தப்பட்சமாக 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் & சிவிடி கியர்பாக்ஸ் உடன் வாங்கப்படும் எக்ஸ்வி ப்ரீமியம் வேரியண்ட்டின் விலை ரூ.9,000 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை அதிகரிப்பினால் நிஸான் மேக்னைட்டின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.49 லட்சத்தில் இருந்து ரூ.5.59 லட்சமாக அதிகரித்துள்ளது.

அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் மேக்னைட்டின் ஆரம்ப விலை ரூ.7.29 லட்சத்தில் இருந்து ரூ.7.49 லட்சமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.20,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன.

அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

நிஸான் நிறுவனம் எக்ஸ்வி ப்ரீமியம் வரையிலான வேரியண்ட்களின் விலைகளை மட்டுமே தற்போதைக்கு உயர்த்தியுள்ளது. மற்றப்படி விலைமிக்க எக்ஸ்வி ப்ரீமியம் (ஒ) வேரியண்ட்களின் விலைகளில் கை வைக்கவில்லை.

அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கும் எக்ஸ்வி ப்ரீமியம் (ஒ) வேரியண்ட்களில் எக்ஸ்வி ப்ரீமியம் வேரியண்ட்களில் இருந்து கூடுதலாக நிஸானின் இணைப்பு கார் தொழிற்நுட்பம் வழங்கப்படுகிறது.

அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

இதன் மூலம் நிஸான் மேக்னைட் காரை 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம் என்பதை அறிந்திருப்பீர்கள். இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 72 பிஎஸ் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அறிவித்தப்படி மேக்னைட் கார்களின் விலைகளை உயர்த்தியது நிஸான்!! எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

அதுவே டர்போ பெட்ரோல் என்ஜின் 100 பிஎஸ் மற்றும் 160 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. இவற்றில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி (152 என்எம்) கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

Most Read Articles

மேலும்... #நிஸான் #nissan
English summary
Nissan Magnite Now Costlier By Up To Rs 33,000. Read Full Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X