மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு!

நிஸான் நிறுவனம் அதிகம் விற்பனையாகும் கார் மாடலான மேக்னைட்-இன் விலையை உயர்த்தியிருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் நிஸான் (Nissan) நிறுவனத்தின் மேக்னைட் (Magnite)-ம் ஒன்று. இது ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காராகும். இந்த காரை நிஸான் நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் வெளியீடு செய்தது. அப்போதில் இருந்து தற்போது வரை இக்காருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் நம் நாட்டில் நிலவி வருகின்றது.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

பட்ஜெட் வாகன பிரியர்களின் மனம் கவர்ந்த கார் மாடலாக இது மாறியிருக்கின்றது. இதன் புக்கிங் தொடங்கப்பட்ட தினத்தில் இருந்து தற்போது வரை 65 ஆயிரத்திற்கும் அதிகமான புக்கிங்கை இக்கார் பெற்றிருக்கின்றது. குறைந்த விலை, கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக சிறப்பம்சங்கள் ஆகியவற்றை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைத் தொடர்ச்சியாகப் பெற்று வருகின்றது.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

இந்த மாதிரியான சூழ்நிலையில் நிஸான் நிறுவனம் தற்போது மேக்னைட் காரின் விலையை ஏற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்காரின் விலையை நிறுவனம் ஏற்றுவது இது முதல் முறை அல்ல. மேக்னைட் காருக்கு அறிவிக்கப்பட்ட சலுகை விலை முடிவுக்கு வந்ததை அடுத்து குறிப்பிட்ட சில வேரியண்டுகளின் விலையை நிறுவனம் நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் முதல் முறையாக உயர்த்தியது.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

இதைத்தொடர்ந்து, மார்ச் மாதத்திலும், ஜூலை மாதத்திலும் மேக்னைட் கார் மாடலின் விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது இந்த மாதமும் மேக்னைட்டின் விலைகளை நிஸான் உயர்த்தியிருக்கின்றது. இம்முறை ரூ. 6 ஆயிரம் தொடங்கி ரூ. 17 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

வேரியண்டிற்கு ஏற்ப இந்த விலையேற்றம் பொருந்தும். நிஸான் மேக்னைட் எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி ஆகிய நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், எக்ஸ்வி ட்ரிம்மானது ஓர் பிரீமியம் தர தேர்வாகும். இதன் விலையிலேயே ரூ. 17 ஆயிரம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

ஆம், உச்சபட்ச விலையுயர்வாக கருதப்படும் ரூ. 17 ஆயிரம் விலை உயர்வானது உயர்நிலை வேரியண்டிற்கே செய்யப்பட்டுள்ளது. எக்ஸ்வி ட்ரிம் இரு வித நிற தேர்வு மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களைத் தாங்கிய தேர்வாக காட்சியளிக்கின்றது. எனவேதான் இதன் விலை மட்டும் சற்று அதிகமாக காட்சியளிக்கின்றது.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

புதிய நிஸான் மேக்னைட் வழக்கமான 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் என இருவிதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், வழக்கமான பெட்ரோல் எஞ்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும் - 96 என்எம் டார்க்கையும், டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 99 பிஎச்பி பவரையும் - 160 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளும் இதில் வழங்கப்படுகிறது.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜினானது நான்கு ட்ரிம்களில் மட்டுமே கிடைக்கும். எக்ஸ்இ, எக்ஸ்எல், எக்ஸ்வி மற்றும் எக்ஸ் பிரீமியம் ஆகியவை அவை ஆகும். 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினானது மூன்று ட்ரிம்களில் மட்டுமே கிடைக்கும். எக்ஸ்எல் டர்போ, எக்ஸ்வி டர்போ மற்றும் எக்ஸ்வி பிரீமியம் டர்போ ஆகியவை அவை ஆகும்.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

நிஸான் மேக்னைட் வருகை நிறுவனத்திற்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது. இந்த காரின் விற்பனையில் நிறுவனம் தற்போது இந்திய வாகன சந்தையில் ஆழமாக கால் தடம் பதித்திருக்கின்றது. கடந்த மாதம் மேக்னைட் எனும் ஒற்றை கார் மாடல் மட்டும் 2,816 யூனிட் வரை விற்பனையாகி இருக்கின்றது. இது நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல விற்பனை வளர்ச்சியாகும். இதேபோல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

மறுபடியம் விலையை உயர்த்திட்டாங்க! மக்கள் அதிகம் வாங்கும் கார் மாடலின் விலை மீண்டும் உயர்வு! இப்படியே போனா இந்த காரை வாங்கவே முடியாது போலிருக்கே!

நிஸான் மேக்னைட் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர மின் விளக்குகள், 8 அங்குல தொடுதிரை வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, கார் இணைப்பு தொழில்நுட்பம், ஏர் பியூரிஃபயர், ஜேபிஎல் ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம், ஆம்பிசிசயன்ட் மின் விளக்கு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் பாதுகாப்பு பயணத்திற்காக இரட்டை ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் லான்ச் கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Nissan magnite prices hiked in india upto rs 17000
Story first published: Friday, October 8, 2021, 17:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X