வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

ஒன்றிய அமைச்சர் புதிதாக போடப்பட்ட (பொதுமக்களின் பயன்பாட்டிற்கே வராத) ஓர் சாலையில் மிக அதிக வேகத்தில் பயணிப்பது போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த மேலும் முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

கியா (Kia) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் கார்னிவல் (Carnival) மாடலும் ஒன்று. இது ஓர் சொகுசு தர எம்பிவி ரக காராகும். இந்த காரிலேயே ஒன்றிய அமைச்சர் ஒருவர் புதிதாக போடப்பட்ட சாலை ஒன்றில் மிக அதிக வேகத்தில் பயணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

தலைநகர் டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை இணைக்கும் வகையில் புதிதாக எக்ஸ்பிரஸ்வே (Delhi-Mumbai expressway) உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் மிக விரைவில் அதிவேக நெடுஞ்சாலை பொது பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

இதனை முன்னிட்டு பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையிலேயே ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இப்புதிய பாதையில் அதிக வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்றிருக்கின்றது. ஆம், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பாதையை ரிவியூ (சோதனை) செய்யும் நோக்கிலேயே மிக மிக அதிக வேகத்தில் சென்றிருக்கின்றார்.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

அதிகபட்சமாக மணிக்கு 170 கிலோ மீட்டருக்கும் எனும் அதிகபட்ச வேகத்தில் அவர் பயணித்திருக்கின்றார். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி ஓர் யுட்யூப் சேனல் ஒன்றை இயக்கி வருவதாகவும், அதில் அவர் சமையல் குறித்த வீடியோ மற்றும் சிறப்புரைகள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

இந்த செயலுக்காக அவருக்கு மாதம் ரூ. 4 லட்சத்தை யுட்யூப் நிர்வாகம் வழங்கி வருகின்றது. தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றிய அமைச்சரின் யுட்யூப் சேனலுக்காக உருவாக்கப்பட்டது. மேலும், அதன் வாயிலாக அவர் பதிவேற்றமும் செய்யவில்லை.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

சாலை சோதனையோட்டத்தின்போது, கியா கார்னிவல் எம்பிவி சொகுசு காரின் கோ-டிரைவர் இருக்கையில் அமைச்சர் அமர்ந்து பயணித்திருக்கின்றார். இதற்கிடையில் அதிகாரிகளிடம் புதிய சாலைகுறித்த பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட்டிருக்கின்றார். இதையடுத்து, புதிதாக உருவாக்கப்பட்ட சாலை ஓர் விமானத்தை தரையிறக்க போதுமான இட வசதிக் கொண்ட பாதை என அவர் உறுதிப்படுத்தினார்.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

இதன் பின்னரே அவரது கார் யு-டர்ன் எடுத்து சென்று மிக அதிக வேகமான பயணத்தை மேற்கொண்டது. மிக விரைவில் இந்த சாலையை பயன்பாட்டிற்கு வர இருப்பதைத் தொடர்ந்து அவ்வப்போது வாகனங்களின் கான்வாய் சாலையை பரிசோதிக்கும் விதமாக இயக்கப்பட்டு வருகின்றது.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

இந்த பாதையில் உச்சபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ வேகம் ஆகும். இருப்பினும், எதிர்கால போக்குவரத்தைக் கருத்தில் கொண்டு நிதின் கட்கரியின் கார் மணிக்கு 170 கிமீ வேகத்தில் இயக்கி பார்க்கப்பட்டிருக்கின்றது.

இந்தியாவின் மிக நீளமான எக்ஸ்பிரஸ் வே:

டெல்லி - மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையானது இந்தியாவின் மிக நீளமான அதிவேக நெடுஞ்சாலையாகும். 1,380 கிமீ தூரத்திற்கு இது போடப்பட்டுள்ளது. ரூ. 98 ஆயிரம் கோடி செலவில் இந்த சாலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. நெடுஞ்சாலையின் ஒட்டுமொத்த நீலம் 1,200 கிமீ ஆகும். இது இரு பெரு நகரங்களில் இடையேயான அதிக நீண்ட நேர பயண இடைவெளியைக் குறைக்கும் வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

ஆம், இந்த பாதை பல மணி நேரங்களைக் குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. சுமார் 12 மணி நேரம் வரை பயண நேரத்தை குறைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், முன்பைக் காட்டிலும் பல மடங்கு அதிக வேகத்தில் இரு நகரங்களையும் அடைய முடியும் என யூகிக்கப்படுகின்றது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் சாலையில் பயணிக்கையில் 20 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

கியா கார்னிவல் எம்பிவி:

கியா கார்னிவல் எம்பிவி ஓர் சொகுசு வசதிகள் கொண்ட வாகனம் ஆகும். அண்மையில் இக்காரை பிரபல பாடகர் ஷங்கர் மஹாதேவன் வாங்கியிருந்தார். இந்த கார் இந்தியாவில் ரூ. 24.95 லட்சம் தொடங்கி ரூ. 33.95 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இவர் வேற லெவல் அமைச்சரா இருக்காரே! புதுசா போடப்பட்ட சாலையில் 170 கிமீ வேகத்தில் சீறி பாய்ந்த ஒன்றிய அமைச்சரின் கார்!

பிரீமியம், பிரெஸ்டிஜ் மற்றும் லிமோசைன் என மூன்று விதமான ட்ரிம்களில் கியா கார்னிவல் எம்பிவி விற்பனைக்குக் கிடைக்கிறது. கியா கார்னிவல் இந்தியாவில் இன்னோவா க்ரிஸ்டா, டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Nitin gadkari kia carnival touches 170 km speed per hour in mumbai delhi expressway
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X