2021ம் ஆண்டில் புதிய கார் எதையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை... கியா அதிரடி முடிவு!

2021ம் ஆண்டில் இந்திய சந்தையில் புதிய கார் எதையும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை என கியா நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2021ம் ஆண்டில் புதிய கார் எதையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை... கியா அதிரடி முடிவு!

கியா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட் மற்றும் கார்னிவல் உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த மூன்று கார்களும் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. எனவே 2021ம் ஆண்டில் கியா நிறுவனம் ஏதாவது புத்தம் புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

2021ம் ஆண்டில் புதிய கார் எதையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை... கியா அதிரடி முடிவு!

இதற்கு எதுவும் இல்லை என்பதுதான் பதில். ஆம், கியா நிறுவனம் நடப்பு 2021ம் ஆண்டில் எந்தவொரு புத்தம் புதிய தயாரிப்பையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை. கியா நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும் தற்போது உள்ள கார்களின் ஸ்பெஷல்/லிமிடெட் எடிசன் மாடல்களை கியா நிறுவனம் நடப்பாண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

2021ம் ஆண்டில் புதிய கார் எதையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை... கியா அதிரடி முடிவு!

இதன்படி கியா இந்தியா நிறுவனம் செல்டோஸ் காரின் கிராவிட்டி எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வித்தியாசமான ஸ்டைல் மற்றும் தனித்துவமான வசதிகளுடன் (பெரிய 18 இன்ச் வீல்கள், பனரோமிக் சன்ரூஃப்) கியா செல்டோஸ் கிராவிட்டி எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது.

2021ம் ஆண்டில் புதிய கார் எதையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை... கியா அதிரடி முடிவு!

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்திய சந்தையில் வரும் மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக இந்தியாவில் செல்டோஸ் எஸ்யூவியின் இரண்டாவது பிறந்த தினத்தில், கிராவிட்டி எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

2021ம் ஆண்டில் புதிய கார் எதையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை... கியா அதிரடி முடிவு!

இதுதவிர மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் மற்றும் சொனெட் கார்களை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளிலும் கியா நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. கியா நிறுவனத்தின் புதிய லோகோ உடன் இந்த இரண்டு எஸ்யூவிகளும் விற்பனைக்கு வரவுள்ளன. இதுதவிர கூடுதலாக சில வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

2021ம் ஆண்டில் புதிய கார் எதையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை... கியா அதிரடி முடிவு!

இந்திய சந்தையில் கியா நிறுவனத்திடம் இருந்து ஒரு புத்தம் புதிய மாடலை பார்க்க வேண்டுமென்றால், 2022ம் ஆண்டின் தொடக்கம் வரை நாம் காத்திருக்க வேண்டும். அனேகமாக இந்த புதிய மாடல், ஹூண்டாய் அல்கஸார் காரின் போட்டியாளரான செல்டோஸ் 7 சீட்டர் மாடலாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021ம் ஆண்டில் புதிய கார் எதையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை... கியா அதிரடி முடிவு!

ஆம், செல்டோஸ் 7 சீட்டர் 2022ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 5 சீட்டர் எஸ்யூவிக்களின் 7 சீட்டர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் கார் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவது நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், புதிய டாடா சஃபாரி ஆகிய கார்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.

2021ம் ஆண்டில் புதிய கார் எதையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்போவதில்லை... கியா அதிரடி முடிவு!

இந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனம் க்ரெட்டா எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலை அல்கஸார் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு போட்டியாக கியா நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி காரின் 7 சீட்டர் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. எனவே இந்த செக்மெண்ட்டில் வரும் காலங்களில் போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
No Brand New Car Launches In 2021: Kia India. Read in Tamil
Story first published: Friday, April 30, 2021, 9:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X