இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

காரில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் மெக்கானிக்குகளிடம் சென்றால் மட்டுமே தீர்வு காண முடியும் என நினைக்க வேண்டாம். நாமாகவே சில விஷயங்களை செய்து கொள்ள முடியும். என்ன மாதிரியான விஷயங்களை நாமே மெக்கானிக்கின் உதவி இன்றி செய்து கொள்ளலாம் என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

கார் பழுதின்போது மெக்கானிக்குகளின் தேவை மிக அவசியம். இருப்பினும், அவர்கள் இல்லாமலும் சில பிரச்னைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும். அந்தவகையில், நம்மால் மிகவும் சுலபலமாகச் செய்யக் கூடிய சிலவற்றையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதுகுறித்த தகவலை வாசகர்களுக்கு பயனளிக்கும் விதமாக இங்கு தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

காற்று வடிகட்டி மாற்றுதல் (Air Filter Replacement):

காரின் எஞ்ஜினுக்கு தேவையான காற்றை வடிக்கட்டி அனுப்புவதே காற்று வடிகட்டியின் முக்கிய பணியாகும். நுண்ணிய அளவுள்ள தூசிகள் மற்றும் அழுக்குகளை எஞ்ஜினுக்குள் நுழையாமல் இது தடுக்கின்றது. ஆகையால், இது காரில் மிகவும் அவசியமான கருவிகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. எனவே, இதனை சீராக பராமரிப்பதும் அவசியமானதாக ஒன்றாக இருக்கின்றது.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

மிக துள்ளியமாக கூற வேண்டுமானால் இந்த பாகத்தை (ஏர் ஃபில்டரை) உங்கள் காரில் மாற்ற பத்து நிமிடங்களுக்கும் குறைவான நிமிடங்களே போதுமானது ஆகும். சரியான கருவிகளுடன் கையாண்டால் மிக விரைவில் இதனை மாற்றி விடலாம். இதோ ஏர் ஃபில்டரை மாற்றுவதற்கான எளிய வழி முறைகள்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

உங்கள் காரின் பானெட்டை திறந்து முதலில் ஏர் ஃபில்டர் இருக்கும் இடத்தைக் கண்டறிய வேண்டும்.

ஏர் ஃபில்டர் பொருத்தப்பட்டிருக்கும் இடத்தைக் கண்டறிந்த பின்னர் பாதுகாப்பான முறையில் அதை கழட்ட வேண்டும்.

தொடர்ந்து, முதலில் ஏர் ஃபில்டர் எவ்வளவு பழையதாக மாறி இருக்கின்றது என ஆய்வு செய்ய வேண்டும். ஒரு வேலை அது சற்று புதியதுபோல் தென்பட்டால் அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

அதுவே, அது மிகவும் பழையதாகத் தென்பட்டால் அப்பாகத்தை மாற்றுவது அவசியம். இதைக் கழட்டுவது மிகவும் சுலபமானது. மேலும், அதை மீண்டும் பொருத்துவதும் மிக சுலபமானது. இதை மாட்டிய பின்னர் ஸ்குரூக்களை திரும்ப பொருத்த தவறி விடாதீர்கள். இதுவும் மிகவும் முக்கியமானது ஆகும்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

விண்ட்ஷீல்டு வைப்பர் (Windshield Wipers):

நாம் சுலபமாக நம்முடைய காரில் மாற்றக் கூடிய மற்றும் ஓர் கருவியாக விண்ட்ஷீல்டு வைப்பர்கள் இருக்கின்றன. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் காரின் வைப்பர் பிளேட்களை மாற்றுவது சிறந்தது. உங்கள் வாகனம் தரமான பாதுகாப்பு வழிமுறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது என்றால் கூடுதல் சில காலங்கள் எடுத்துக் கொண்டு இதை மாற்றிக் கொள்ளலாம்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

ஆனால், மழை மற்றும் வெயில் என இரண்டிலும் பாடாய் படும் வாகனங்களில் இவை வெகு விரைவிலேயே பாதிப்பைச் சந்திக்கின்றன. அவ்வாறு பாதிப்பைச் சந்திக்கும் வைப்பர்களை மாற்றுவது என்பது மிகவும் சுலபமான ஒன்று. இதோ எப்படி மாற்றுவது என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

முதலில் வைப்பர் பிளேட்டுகளை மேல் நோக்கி நிற்க வைக்க வேண்டும். இதன் பின்னர் பழைய பழுதான பிளேடை வெளியேற்ற வேண்டும். இதை செய்யும் முன் கைகளை பாதுகாப்பாக கையாள வேண்டும். பழைய துரு பிடித்த பிளேடாக இருப்பின் அது உங்களது கைகளை பதம் பார்த்துவிடும். ஆகையால், முறையான கையுறை அல்லது கருவியைக் கொண்டு நீக்கிவிட்டு, அதன் பின்னரே புதிய பிளேடை அங்கு பொருத்த வேண்டும். இது மழை மற்றும் கடும் தூசிகளில் இருந்து விண்ட்ஷீல்டை பாதுகாக்கும்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

ஸ்பார்க் பிளக் மாற்றுதல் (Spark Plugs Replacement):

வாகனத்தை ஸ்டார்ட் செய்ய இது மிக முக்கியமானது. இது பழுதாகினால் காரை ஸ்டார்ட் செய்யவே முடியாது. 30 மைல்கள்களுக்கு ஒரு முறை இது மாற்ற வேண்டும் என்பது கட்டாயம். இதனை மாற்ற மெக்கானிக்கு கட்டாயம் தேவையில்லை. சில ஸ்பேனர்கள் மற்றும் ஸ்பார்க் இருக்கும் இடம் தெரிந்தாலே போதும். வேறு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கீழே கொடுத்திருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

ஸ்பார்க் பிளக் இருக்கும் இடம் கண்டறியப்பட்ட பின்னர் அதை பத்திரமாக வெளியே எடுக்க வேண்டும். காரின் எஞ்ஜினில் உள்ள சிலிண்டர்களைப் பொருத்து ஸ்பார்க் பிளக்குகள் நான்கு, ஆறு அல்லது எட்டு ஆகிய எண்ணிக்கையில் இருக்கும். இதில், எது அதிகம் பழுதடைந்திருக்கின்றது என்பதைக் கண்டறிய வேண்டும்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

அதை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு புதியதை அந்த இடத்தில் நிலை நிறுத்த வேண்டும். அதிக கருப்பானதாக இல்லாமல் இருந்தால், லேசாக படிந்திருக்கும் புகை கருப்புகளை உப்பு காகிதம் அல்லது அதை நீக்கக் கூடிய பிறவற்றைக் கொண்டு படிந்திருக்கும் புகை படிமத்தை அகற்ற வேண்டும். இதன் பின்னர் ஸ்டார்ட் செய்தால் நிச்சயம் கார் ஸ்டார்ட் ஆகும்.

இதுக்காக எல்லாம் உங்க காரை மெக்கானிக் கிட்ட எடுத்து போக தேவையில்ல... நீங்களே மாத்திரலாம்!

மேலே கூறப்பட்ட பராமரிப்பு பணிகளை நீங்களே மேற்கொள்வதன் வாயிலாக கணிசமான பராமரிப்பு செலவைக் குறைக்க முடியும். அதேவேலையில் உங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே இந்த யுக்தியை கையாளுங்கள். இல்லை எனில் சிக்கனத்தைப் பார்க்காமல் மெக்கானிக்கை நாடிவிடுங்கள். அது தேவையற்ற சிக்களை தவிர்க்க உதவும். அதேவேலையில், மெக்கானிக்கின் செய்முறை நன்கு கவனித்து அதன் பின்னர் நீங்கள் ஒரு முறை அவற்றை மாற்ற முயற்சிக்கலா

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
No need mechanic you can do it yourself simple car maintenance tasks
Story first published: Tuesday, December 28, 2021, 19:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X