பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் எஞ்ஜின் கொண்ட வாகனங்களை மின் மோட்டாரால் இயங்கும் வாகனமாக மாற்றுவதற்கான கருவியை ஓர் தனியார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

இந்தியாவில் மின் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்து வருவதை அடுத்து மக்கள் பலர் மின் வாகனங்களை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

அதாவது, நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வரும் எரிபொருள் விலை உயர்வில் இருந்த தங்களது பர்சை தற்காத்துக் கொள்ள மக்கள் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்து வருகின்றனர். இது தங்களின் பணத்தை மிச்சப்படுத்த உதவும் என அவர்கள் நம்புகின்றனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

இதுமட்டுமின்றி, சுற்றுச் சூழலுக்கும் மின் வாகனங்கள் நண்பனாக செயல்படும். மிக குறிப்பாக அவை சுற்று சூழலுக்காக பாதுகாப்பானவையாக இருக்கும். மின் வாகனங்கள், பெட்ரோல்-டீசல் வாகனங்களைப் போல் மாசை வெளிப்படுத்தாது. இந்த காரணத்திற்காகதான் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மின் வாகனங்களை ஊக்குவிக்கும் பணியில் மிக தீவிரமா ஈடுபட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

இந்த மாதிரியான சூழ்நிலையில் வழக்கமான பெட்ரோல், டீசல் எஞ்ஜின்களால் இயங்கும் வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றும் வாய்ப்பினை ஓர் தனியார் நிறுவனம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் Northway Motorsport (நார்த்வே மோட்டோர்ஸ்போர்ட்).

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

இந்நிறுவனமே பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் kit (கருவியை) இனை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. தற்போது Maruti Suzuki நிறுவனத்தின் Dzire மற்றுவம் Tata-வின் Ace ஆகிய இரு வாகனங்களுக்கு மட்டுமே நிறுவனம் மின் வாகனமாக மாற்றியமைக்கும் கருவியை அறிமுகம் செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

குட்டி யானை என்று அழைக்கப்படும் நாட்டின் மிகவும் பிரபலமான வர்த்தக வாகனம் Tata Ace-க்கு இந்த மின் வாகன மாற்று கருவி அறிவிக்கப்பட்டிருப்பது சரக்கு வாகன பயனர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கருவிகளை Northway Motorsport ரூ. 4.5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

Maruti Suzuki Dzire காருக்கான மின்வாகன கிட்:

நாட்டின் மிகவும் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றாக Maruti Suzuki Dzire இருக்கின்றது. இக்காருக்கான மின் வாகன கருவியை இருவிதமான தேர்வுகளில் Northway Motorsport வழங்குகின்றது. Drive EZ மற்றும் Travel EZ ஆகிய இரு தேர்வுகளிலேயே அது வழங்குகின்றது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

Drive EZ எனும் பெயரில் கிடைக்கும் கருவியை பொருத்தினால் ஓர் முழுமையான சார்ஜில் 120 கிமீ தூரம் வரையிலும், Travel EZ எனும் பெயரில் கிடைக்கும் மின் வாகன கருவியை பயன்படுத்தினால் ஓர் முழுமையான சார்ஜில் 250 கிமீ தூரம் வரையிலும் பயணிக்க முடியும். இவற்றை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

இதன் மின் மோட்டார்கள் மணிக்கு 80 கிமீ முதல் 140 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவைகளாக இருக்கின்றன. தற்போது முன்பதிவின் அடிப்படையிலேயே Dzire காருக்கான மின்வாகன கருவியினை வழங்க Northway Motorsport திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்தொகையாக ரூ. 25 ஆயிரம் வரை நிறுவனம் வசூல் செய்கின்றது. ஒட்டுமொத்த கருவியின் விலை ரூ. 5 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையாகும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

Tata Ace வர்த்தக வாகனத்திற்கான மின் வாகன கருவி:

நாட்டின் மிக பிரபலமான வர்த்தக வாகனங்களில் Tata Ace-ம் ஒன்று. Northway Motorsport இந்த வாகனத்திற்கும் தனது மின் வாகன கருவியை அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கும் இரு விதமான தேர்வுகளில் கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Ace ஷாந்தர் மற்றும் டாம்தார் ஆகிய பெயர்களில் அத்தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

இதில், ஷாந்தர் கருவியானது ஓர் முழுமையான சார்ஜில் 80 கிமீ முதல் 100 கிமீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டவை ஆகும். உள்ளூர் பயணங்களைக் கருத்தில் கொண்டு இந்த கிட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைவிட சற்று அதிக ரேஞ்ஜை வழங்கும் கருவியாக டாம்தார் இருக்கின்றது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 160 கிமீ தொடங்கி 190 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த கருவிகளுக்கும் ரூ. 25 ஆயிரம் முன் தொகையில் புக்கிங்குகள் நடை பெற்று வருகின்றது. இதன் விலை ரூ. 4.5 லட்சம் முதல் ரூ. 5.0 லட்சம் ஆகும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

சர்வீஸ்

Northway Motorsport நிறுவனம் தனது மின்வாகனமாக மாற்றியமைக்கும் கருவிகளுக்கு சர்வீஸ் வழங்குவதற்காக Bhartiya EV எனும் நிறுவனம் கூட்டணியைத் தொடங்கியிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் வாயிலாக தனது மின் வாகன கிட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்க இருக்கின்றது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை மின் வாகனமாக மாற்றும் கருவி... இதோட விலை எவ்ளோ தெரிஞ்சா ரொம்ப ஆச்சரியப்படுவீங்க!

தற்போது இச்சேவை புனேவில் தொடங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொடங்கப்படும் என Northway Motorsport நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, விற்பனையாளர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களை திறக்கும் பணியிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. தொடர்ந்து, மேலும் பல வாகனங்களுக்கான மின் வாகன கருவிகளை விரைவில் அறிமுகம் செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Northway motorsport launched electric kit for maruti dzire here is full details
Story first published: Friday, August 20, 2021, 14:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X