Just In
- 15 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 16 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 53 min ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
வளைச்சு வளைச்சு மீட்டிங்.. கடந்த ஆண்டே எச்சரிக்கை.. ஆக்சிஜனை 'கோட்டை' விட்டது யார்?
- Movies
மாரி செல்வாராஜூடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாடும் ரசிகாஸ்!
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Sports
‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?
- Education
கோவையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் ICAR நிறுவனம்!
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விளையாட்டு மைதானம் போதாது! மாருதி கார் விற்பனையாளரிடத்தில் இவ்ளோ சொகுசு கார்களா?.. வாயை பிளந்த யுடியூபர்!!
மாருதி சுசுகி கார்களை விற்பனைச் செய்து வரும் டீலர் ஒருவர் உலகின் மிக திறன் வாய்ந்த மற்றும் அதிக சொகுசு வசதிக் கொண்ட கார்களைப் பயன்டுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கார் ஆர்வலர்களை வியக்க வைக்கும் வகையில் பல்வேறு சொகுசு மற்றும் சூப்பர் கார்களை மாருதி சுசுகி கார் விற்பனையாளர் ஒருவர் பயன்படுத்தி வருகின்றார். ஒட்டுமொத்தமாக 45 சூப்பர் கார்களை அவர் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர 9 சூப்பர் பைக்குகளையும் அவர் சொந்தமாக வைத்திருக்கின்றார் என்கிற தகவல் கூடுதல் ஆச்சரியத்தைக் ஏற்படுத்தக் கூடிய தகவலாக அமைந்துள்ளது. ஒடிசா மாநிலத்தை் சேர்ந்தவர் தேவ்ஜோதி பட்னாய்க். தேவ்ஜோதி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான இவரே எண்ணற்ற சொகுசு கார்களுக்கு சொந்தக்காரர் ஆவார்.

இவரை அண்மையில் புலு பட்னாய்க் எனும் நபர் அவரது யுட்யூப் சேனலுக்காக பேட்டியெடுத்திருந்தார். இந்த பேட்டியின் வாயிலாகவே தேவ்ஜோதி பட்னாய்க் எக்கசக்க சொகுசு கார்கள் பயன்படுத்தி வருவது வந்திருக்கின்றது. இவரிடத்தில் டிவிஎஸ் மற்றும் சுசுகி தொடங்கி ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான இருசக்கர வாகனங்கள் வரை பயன்பாட்டில் இருக்கின்றன.

இதேபோன்று, மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்பு முதல் ஆடி நிறுவனத்தின் சொகுசு கார்கள் வரை பல்வேறு நிறுவனங்களின் சொகுசு கார்களையும் தேவ்ஜோதி பயன்படுத்தி வருகின்றார். இவரிடத்தில் என்னென்ன கார்கள் இருக்கின்றன என்பதையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

மாருதி 800:
பல்வேறு சொகுசு கார்களைப் பயன்படுத்தி வரும் தேவ்ஜோதி பட்னாய்க் இடம் மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் தயாரிப்பான மாருதி 800 காரும் இருக்கின்றது. இக்காரை அவர் 1998ம் ஆண்டில் வாங்கியதாகக் கூறப்படுகின்றது. இக்காரை டெலிவரி எடுப்பதற்காக கேரளாவில் ஒரு நாள் முழுவதும் காத்திருந்து எடுத்து வந்திருக்கின்றார்.

ஆகையால், சென்டிமென்ட் காரணமாக தற்போதும் இவரின் கராஜில் இக்கார் பயன்படுத்தும் வசதியுடன் இருக்கின்றது. சில நேரங்களில் இக்காரிலும் அவர் பயணிப்பதாக தேவ்ஜோதியின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். இதனையே தற்போது யுட்யூப் சேனலின் நேர்காணலிலும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

லம்போர்கினி அவென்டேடார் எஸ்வி
லம்போர்கினி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் அவென்டேடார் சொகுசு காரும் ஒன்று. இந்த காரை உலகின் ஒரு சில கோடீஸ்வரர்கள் மட்டுமே பயன்படுத்திவருகின்றனர். இக்காரில் 6.5 லிட்டர் வி12 எ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 740 பிஎச்பி மற்றும் 690 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

லம்போர்கினி உருஸ்
லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் காரையும் தேவ்ஜோதி பயன்படுத்தி வருகின்றார். இது அதி திறன் வாய்ந்த கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, மணிக்கு 305 கிமீ எனும் வேகத்தில் சீறி பாய்ந்து செல்லும் திறன் கொண்டது. இத்தகைய சூப்பர் திறன் வாய்ந்த காரையே மாருதி கார் விற்பனையாளரான தேவ்ஜோதி பயன்படுத்தி வருகின்றார்.

மினிகூப்பர்
மினி நிறுவனத்தின் பிரீமியம் தர கார் மாடல்களில் ஒன்று கூப்பர். அதிக பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகளுக்கு பெயர்போன வாகனமாக இது இருக்கின்ற காரணத்தினால் உலக சொகுசு கார் விரும்பிகள் மத்தியில் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அந்தவகையில், தேவ்ஜோதியின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றாக மினி கூப்பர் மாடல் இருக்கின்றது.

பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர்
பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர் ஓர் அதிக சொகுசு வசதிகள் அடங்கிய செடான் ரக காராகும். இக்கார் இந்தியாவில் ரூ. 1.7 கோடி எனும் உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. உலகில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக பிரீமியம் மற்றும் பவர்ஃபுல்லான செடான் கார்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆடி ஏ8
ஆடி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த செடான் கார் மாடல்களில் ஏ8-ம் ஒன்று. தேவ்ஜோதிக்கு மிகவும் பிடித்தமான கார் இது என கூறப்படுகின்றது. இந்த காரில் அதிக இட வசதி உள்ளது. எனவே பயணிகள் சொகுசான பயண அனுபவத்தை அனுபவிக்க முடியும். இக்கார் அதிக நீளமான வீல்பேஸைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இதில் மிக அதிக இட வசதி கிடைக்கின்றது.

ஆடி க்யூ8
இதுவும் ஆடி நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாகும். இந்த எஸ்யூவி கார் அதிக கவர்ச்சி வசதிகளை மட்டுமின்றி உருவத்தையும் கொண்டிருக்கின்றது. இக்காரை சிபியூ வாயிலாக நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது. ஆகையால், சற்று கூடுதல் விலைக் கொண்ட மாடலாக இது இருக்கின்றது.

99 லட்ச ரூபாய் தொடங்கி 1.35 கோடிக்கும் அதிகமான விலையில் இக்கார் விற்கப்பட்டு வருகின்றது. இதுதவிர தேவ்ஜோதி இடத்தில் ஆடி ஏ7 காரும் பயன்பாட்டில் இருக்கின்றது. இந்த காரும் இவரிடத்தில் இருக்கக் கூடிய சூப்பர் திறன் வாகனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஃபோர்டு மஸ்டாங்
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் அதிக சூப்பர் திறன் கொண்ட காராக மஸ்டாங் இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 74.6 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் 5.0 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 396 எச்பி மற்றும் 515 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

மஹிந்திரா தார்
மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக தயாரிப்புகளில் ஒன்றான தார் எஸ்யூவி காரையும் தேவ்ஜோதி பயன்படுத்தி வருகின்றார். இது ஓர் சிறந்த ஆஃப்-ரோடு பயண வாகனம் ஆகும். இந்த வசதியை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் சுசுகி கார் விற்பனையாளர் தார் காரை வாங்கியிருக்கின்றார்.

ஜீப் ரேங்லர்
ரேங்லர் கார் உற்பத்தியை உள்ளூர் மயமாக்கி இருக்கின்றது ஜீப் நிறுவனம். ஆகையால் இதன் விலை பல மடங்கு குறைந்து காணப்படுகின்றது. இந்த நடவடிக்கைக்கு முன்னரே ரேங்லர் காரை வாங்கியிருக்கின்றார் தேவ்ஜோதி. இது அனைத்து சாலைகளையும் சமாளித்தும் திறன் கொண்ட வாகனம். குறிப்பாக, ஆஃப்-ரோடுகளை மிக சுலபமாக சமாளிக்கும்.

ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்ஆர்டி
உலகளவில் புகழ்வாய்ந்த கார் மாடலாக ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி எஸ்ஆர்டி இருக்கின்றது. இதில், 6.4 லிட்டர் ஹெமி வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 462 பிஎச்பி மற்றும் 624 என்எம் டார்க்கை வெளியேற்றும். இந்த காரை தற்போது வரை சிபியூ வாயிலாக நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது.

விரைவில் இதன் தயாரிப்பையும் ரேங்லர் காரை போன்று உள்ளூர் மயமாக்க ஜீப் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. இதன்மூலம் பல மடங்கு இதன் விலையும் குறையும் வாய்ப்பு உருவாகும்.

ஆஸ்டன் மார்டின் டிபி11
ஆஸ்டன் மார்டின் மிக அதிக சொகுசு வசதிகள் கொண்ட ஸ்போர்ட் காராகும். ஜேம்ஸ் பாண்ட் போன்ற படங்களில் இடம் பெற்று பலரின் கவனத்தை ஈர்த்த கார் மாடல் இதுவாகும். இந்த காரையே இந்தியாவில் தேவ்ஜோதி பயன்படுத்தி வருகின்றார்.

ஆஸ்டன் மார்டின் வின்டேஜ்
ஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான வின்டேஜ் காரையும் தேவ்ஜோதி பயன்படுத்தி வருகின்றார். இக்காரில் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி கார்களில் இடம்பெற்றிருக்கக் கூடிய அதி திறன் வாய்ந்த எஞ்ஜினே இடம்பெற்றுள்ளது. ஆகையால், திறன் மற்றும் சொகுசு வசதிகளுக்கு சற்றும் குறைச்சல் இல்லாத காராக இருக்கின்றது.
Image Courtesy: Bulu Patnaik
மேலே நாம் பார்த்த இந்த கார்கள் மட்டுமின்றி இன்னும் பல கார்களை தேவ்ஜோதி பயன்படுத்தி வருகின்றார். இவர் 35 வருடங்களுக்கும் அதிகமாக வாகனத்துறை சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது ஒடிசா மாநிலத்தில் மட்டும இவருக்கு சொந்தமாக 14 வாகன விற்பனை மையங்கள் இருக்கின்றன. இவற்றின் மூலம் மாதம் ஒன்றிற்கு 1,500க்கும் அதிகமான வாகனங்களை அவர் விற்பனைச் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.