Just In
- 1 hr ago
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- 1 hr ago
மெர்சிடிஸின் அடுத்த எலக்ட்ரிக் செடான்... இக்யுஎஸ்!! 700கிமீ ரேஞ்ச் உடன் தயாரிப்பு!
- 2 hrs ago
குட் நியூஸ்... சென்னையில் விற்பனைக்கு வருகிறது பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
- 3 hrs ago
செம்ம டிமேண்ட்! உற்பத்தியைவிட தேவை பல மடங்கு அதிகரிப்பு! க்ரெட்டா எஸ்யூவிக்கு தொடரும் பிரமாண்ட எதிர்பார்ப்பு!!
Don't Miss!
- News
சென்னை புதுவரவுக்கு கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் தரக் கூடாது- திமுகவில் இப்பவே அதிரிபுதிரி மோதல்
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies
விவேக் பெயரில் குழப்பிய மும்பை ஊடகங்கள்.. பதறியடித்து டிவிட்டிய பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெட்ரோல், டீசல் என எதுவும் தேவையில்லை.. விவசாயி உருவாக்கிய சோலார் வாகனம்... அவார்டே கொடுக்கலாம்போல!
பெட்ரோல் மற்றும் டீசல் என எதுவும் தேவைப்படாத ஓர் சோலார் வாகனத்தை விவசாயி ஒருவர் உருவாக்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலைக் கீழே காணலாம்.

கொரோனா வைரசும், இதனால் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு விதியும் பலரின் வாழ்க்கையை தலை கீழாக புரட்டிப் போட்டிருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் எந்திரிக்கவே முடியாத வகையில் அதளபாதாளத்தில் ஒரு சிலரை இந்த கொடூர வைரஸ் வீழ்த்தியிருக்கின்றது.

அதேசமயம், குறிப்பிட்ட சிலருக்கு இந்த வைரஸ் புதுவிதான அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. குடும்பங்களுடன் பெரியளவில் நேரம் செலவிடாதவர்களைக்கூட 24X7 குடும்பத்தினருடன் மட்டுமே இருக்கின்ற வகையில் மாற்றியமைத்தது. தொடர்ந்து, சிலரை புதுமையான தொழில் மற்றும் பணிகளில் ஈடுபடவும் நகர்த்தியிருக்கின்றது.

அந்தவகையில், கோவிட்-19 வைரசால் நீண்ட காலமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த விவசாயி ஒருவர் பெட்ரோல் மற்றும் டீசல் தேவைப்படாத ஓர் வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார். அதாவது, சூரிய ஒளியால் இயங்கக் கூடிய சோலார் பேனல் வசதிக் கொண்ட வாகனத்தையே விவசாயி உருவாக்கியிருக்கின்றார்.

இதனை சோலார் பேனல் மற்றும் சார்ஜிங் பாயிண்ட் வாயிலாகவும் இந்த வாகனத்தை சார்ஜ் செய்ய முடியும் என்பது விவசாயி கண்டுபிடித்த வாகனத்தின் தனி சிறப்பாகும். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த நேரத்தில் யுட்யூப் மற்றும் புத்தகங்கள் வாயிலாக அறிந்த கொண்ட தகவல்களின் அடிப்படையில் இந்த வாகனத்தை உருவாக்கியிருப்பதாக விவசாயி கூறியிருக்கின்றார்.

ஒடிசா மாநிலம் கரஞ்சியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷில் அகர்வால். இவரே சோலார் பேனல் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கியவர் ஆவார். இந்த வாகனத்தில் 850 வாட் மோட்டார் மற்றும் 100 Ah/ 54 V திறன் வசதிக் கொண்ட பேட்டரியையும் அவர் பயன்படுத்தியிருக்கின்றார்.

இப்பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 300 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் விவசாயி கூறியிருக்கின்றார். மேலும், ஏஎன்ஐ தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "தனக்கு சொந்தமாக ஓர் ஒர்க்ஷாப் இருக்கின்றது. இதில் வைத்தே சோலார் வாகனத்தை உருவாக்கினேன். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 8.30 மணி நேரங்கள் ஆகும்" என கூறினார்.

தான் பயன்படுத்தியிருப்பது மிக பொருமையாக சார்ஜாகும் பேட்டரி என்றும், அது 10 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் என்றும் அவர் கூறியிருக்கின்றார். விவசாயி உருவாக்கியிருப்பது நான்கு சக்கர வாகனமாகும். இந்த வாகனத்திற்கு தேவையான சட்டங்கள் மற்றும் பிற கூறுகளை அவரே வடிவமைத்து பயன்படுத்தியிருக்கின்றார் என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

இதுதவிர, மோட்டார் ஒயின்டிங், எலெக்ட்ரிக்கல் ஃபிட்டிங் மற்றும் பிற முக்கிய பணிகள் அனைத்தையுமே தானாகவே செய்திருக்கின்றார் அந்த விவசாயி. இந்த வாகனத்தை உருவாக்கியதால் தான் ஓர் சிறந்த விவசாயி மட்டுமல்ல சிறந்த கண்டுபிடிப்பாளர் என்பதையும் அவர் நிரூபித்திருக்கின்றார்.

விவசாயியின் இந்த கண்டுபிடிப்பைக் கண்டு ஆர்டிஏ அலுவலரே வியந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுச் சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத இந்த மாதிரியான வாகனங்களே பயன்பாட்டிற்கு தேவை என்றும் ஆர்டிஓ அலுவலர் மயூர்பஞ்ச் கோபால் கிருஷ்ணா கூறியிருக்கின்றார். ஆனால், இந்த வாகனத்திற்கு ஆர்டிஓ சான்று வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.