அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இந்தியாவில் ஓலா எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஓலா எஸ்1 என்ற பெயரில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படப்டுள்ளது.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

எஸ்1 ப்ரோ என்ற வேரியண்ட்டிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும். தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த தொழிற்சாலையில் இருந்து முதல் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிவந்தது.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இந்திய சந்தையில் ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உடன் ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிடும். அத்துடன் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும், ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும். ஓலா எஸ்1 அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த சிறிது நேரத்தில் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன புரட்சி தொடங்கி விட்டதை இவை நமக்கு எடுத்து காட்டுகின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதாலும், பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாலும், எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதற்கு மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் நமது எதிர்காலமாக இருக்க போகின்றன. ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வாலும் இதையேதான் கூறுகிறார். பாவிஷ் அகர்வால் சமூக வலை தளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். ஓலா எஸ்1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய பல்வேறு தகவல்களை சமூக வலை தளங்கள் வாயிலாகதான் பாவிஷ் அகர்வால் வெளியிட்டார்.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இந்த சூழலில் பாவிஷ் அகர்வால் நேற்று (ஆகஸ்ட் 16) சமூக வலை தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ''பெட்ரோலை நிராகரிப்போம். எலெக்ட்ரிக்தான் எதிர்காலம்'' என கூறியிருந்தார். இதற்கு சமூக வலை தள பயனர் ஒருவர் ''உங்களது சொந்த கார் பெட்ரோலா? டீசலா? அல்லது எலெக்ட்ரிக்கா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இதற்கு பாவிஷ் அகர்வால் இன்று (ஆகஸ்ட் 17) பதில் அளித்துள்ளார். இந்த பதில் தற்போது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. ஆம், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக எலெக்ட்ரிக் காரையும் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. பாவிஷ் அகர்வால் தனது பதிலில் இதனை உறுதி செய்துள்ளார்.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

''2 மாதங்களுக்கு முன்பு வரை என்னிடம் சொந்தமாக கார் இல்லை. தற்போது ஹைப்ரிட் கார் வைத்துள்ளேன். அடுத்த கார் 2023ம் ஆண்டு எலெக்ட்ரிக் காராக இருக்கும். அது ஓலாவின் எலெக்ட்ரிக் கார்'' என பாவிஷ் அகர்வால் பதில் அளித்துள்ளார். பாவிஷ் அகர்வாலின் இந்த பதில் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அடுத்தபடியாக இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களையும் தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக சமீப காலமாகவே தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. பாவிஷ் அகர்வாலின் பதில் தற்போது அதனை உறுதி செய்வது போல் அமைந்துள்ளது.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

அத்துடன் எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மத்தியில் இந்த பதில் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ள பதிலின் அடிப்படையில் பார்த்தால், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் வரும் 2023ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

நடப்பு 2021ம் ஆண்டில் பாதியை நாம் கடந்து விட்ட நிலையில், 2023ம் ஆண்டு வெகு தொலைவில் எல்லாம் இல்லை. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போதே ஆவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று தற்போது நிறைய எலெக்ட்ரிக் கார்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மிகவும் முக்கியமானது. இதுதான் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதுதவிர எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய எலெக்ட்ரிக் கார்களும் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன.

அப்படிப்போடு... இந்தியாவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வருவது உறுதி... எப்போனு தெரியுமா?

இதுதவிர டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார்களை போல், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 17, 2021, 12:40 [IST]
English summary
Ola electric car confirmed for india check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+