டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்.. Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாள் காத்திருக்கணுமா?

ஓலா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிந் டெலிவரி பணியை இந்த மாத இறுதிக்குள்ளாகவே தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தநிலையில், தற்போது அப்பணிகள் தள்ளிப்போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் ஓலா எஸ்1 (Ola Electric S1) மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ (Ola Electric S1 Pro) ஆகிய மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அதன் பணிகளில் சற்றே கால தாமதம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. உலகளவில் நிலவி வரும் சிப் பற்றாக் குறையே இதற்கு முக்கிய காரணம் என நிறுவனம்.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

உலகளவில் செமி கன்டக்டர் (semiconductor chips) பற்றாக் குறையால் புதிய வாகனங்களின் உற்பத்தி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக உரிய நேரத்தில் வாகனங்களை டெலிவரி கொடுக்க முடியாமல் வாகன உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

இந்த மாதிரியான ஓர் சிக்கலிலேயே தற்போது ஓலா எலெக்ட்ரிக் மின் வாகன உற்பத்தி நிறுவனமும் சிக்கியிருக்கின்றது. இந்நிறுவனம், முன் பதிவின் வரிசையின் அடிப்படையில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி கொடுக்க இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த பணிகள் இந்த மாத இறுதிக்குள்ளாகவே தொடங்கிவிடும் என்று தெரிவித்திருந்தது.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையில் தற்போது செமிகன்டக்டர் சிப் பற்றாக்குறையினால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தள்ளிப்போடப்பட்டிருப்பது, மின் வாகனத்தை புக் செய்துவிட்டு டெலிவரிக்காக காத்திருப்போர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

டெலிவரி பணிகள் இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை தள்ளிபோயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனம், இந்த மாதம் தொடங்கி டிசம்பர், 2022 ஜனவரி மற்றும் பிப்ரவரி பகுதி பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி கொடுக்க இருப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

இந்த கால தாமதம் தவிர்க்க முடியாதது என்று நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தகவல் வெளியிட்டு வருகின்றது. தொடர்ந்து, இந்த அசௌகரியமான சூழ்நிலைக்கு தங்கள் நிறுவனம் மன்னிப்பு கோருவதாகவும் அந்த மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்திருக்கின்றது. இத்துடன், மிக விரைவில் மின்சார ஸ்கூட்டர்களை டெலிவரி கொடுப்பதற்கான பணியில் நிறுவனம் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

ஓலா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவரி பணிகள் மிக விரைவில் தொடங்க இருப்பதனால், அந்நிறுவனம் இறுதி கட்டணத்திற்கான நுழைவாயிலை அண்மையில் திறந்தது வைத்து. ரூ. 499 முன் தொகையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டன. இருசக்கர வாகனத்திற்கான மீத தொகையை வசூல் செய்யும் பணியில் நிறுவனம் களமிறங்கயிருக்கின்ற இந்த நேரத்திலேயே இத்தகைய அதிர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு புக்கிங்க தொடங்கிய முதல் 24 மணி நேரத்திலேயே லட்சத்திற்கும் அதிகமான புக்கிங்குகள் கிடைத்தன. தொடர்ந்து, 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான புக்கிங்கை நிறுவனம் இரண்டே நாட்களில் நாட்டில் பெற்றது. இவ்வாறு மிக தரமான புக்கிங் வரவேற்பை இந்த இருசக்கர வாகனம் இந்திய சந்தையில் பெற்று வருகின்றது.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

இத்தகைய சூழ்நிலையில் செமிகன்டக்டர் பற்றாக்குறையால் நிறுவனத்தின் டெலிவரி பணிகள் தள்ளி போயிருப்பது சற்றே மன வேதனை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஓலா எஸ்1 மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 99,999 என்ற விலையும், எஸ்1 ப்ரோ தேர்விற்கு ரூ. 1,29,999 என்ற விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

ஓலா எஸ்1 அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகம், 121 ரேஞ்ஜ் ஆகிய திறன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கும். இதைவிட அதிக திறன்கள் கொண்ட வாகனமாக எஸ்1 ப்ரோ இருக்கின்றது. இது மணிக்கு 115 கிமீ வேகம் மற்றும் 181 கிமீ ரேஞ்ஜ் ஆகிய திறன்களைக் கொண்டிருக்கின்றது.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

தற்போது, ஓலா எலெக்ட்ரிக் இ-ஸ்கூட்டர்களை டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து வருகின்றது. ஒவ்வொரு நகரமாக இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இப்பணிகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

டெலிவரி தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகுமாம்... Ola அறிவிப்பு! என்ன சொல்றீங்க இன்னும் இத்தன நாட்கள் ஆகுமா?

Source: Mint

இதனைத் தொடர்ந்து, சென்னை, மும்பை, ஹைதரபாத், கொச்சி மற்றும் புனே ஆகிய நகரங்களிலும் இப்பணிகள் தொடங்கப்படுவதாக நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளது. ஓலா நிறுவனத்தின் இந்த செயல்பாட்டிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதாகவும், ஆகையால், இப்பணிகளை 1000க்கும் அதிகமான நகரங்களில் தொடங்கப்பட இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஓலா #ola
English summary
Ola electric postponed deliveries of s1 and s1 pro electric scooters
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X