பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

பிரபல கால் டாக்சி நிறுவனம் ஒன்று பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

இந்தியாவில் கால் டாக்சி துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களில் ஓலா-வும் ஒன்று. இந்நிறுவனம் கால் டாக்சி சேவையில் மட்டுமின்றி மிக விரைவில் மின் வாகன விற்பனையில் ஈடுபட இருக்கின்றது. இதற்கான அனைத்து பணிகளையும் மிக தீவிரமாக நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

மின்வாகனத்தை விரைவில் விற்பனைக்குக் களமிறக்குவதற்காக உலகின் மிக பிரமாண்டமான மற்றும் அதி நவீன தொழில்நுட்பத்திலான ஓர் மின் வாகன உற்பத்தி ஆலையை ஓலா தமிழகத்தில் உருவாக்கி வருகின்றது. இங்கிருந்தே உலக நாடுகளுக்கு தற்போது உருவாகி வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றன.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

இந்த நிலையில், ஓலா நிறுவனம் மின் வாகனத்தைத் தொடர்ந்து இன்னும் ஓர் புதிய தொழிலிலும் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிறுவனம், புதிதாக செகண்டு ஹேண்டு (பயன்படுத்திய) கார் விற்பனையில் களமிறங்க இருப்பதாக தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த பின்னர் அனைவரின் மத்தியிலும் வைரஸ் அச்சம் மிக அதிகளவில் காணப்படுகின்றது. இதன் விளைவாக அனைவரும் தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர்.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

ஆகையால், கடந்த சில மாதங்களாக பயன்படுத்திய மற்றும் புது வாகனங்களின் விற்பனை முழு ஊரடங்கிற்கு மத்தியிலும் அமோகமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக பலர் தங்களது தனிப்பட்ட பயணங்களுக்காக செகண்ட் ஹேண்ட் வாகனங்களையே வாங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

இந்த நிலையைக் கருத்தில் கொண்டே பயன்படுத்திய வாகன விற்பனை வர்த்தகத்தில் ஓலா களமிறங்க திட்டமிட்டிருக்கின்றது. இப்புதிய தொழிலுக்கு 'ஓலா கார்ஸ்' எனும் பெயரை வைக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. இதற்காக ஓர் பிரத்யேக தளம் அல்லது செயலியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

தனது புதிய தொழில்குறித்து ஓலா அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருக்கின்றது. "அதிக மதிப்பு, குறைவான தொந்தரவு - உங்கள் காரை விற்பது எளிது" என ஓலா கூறியிருக்கின்றது. இந்த பதிவை ஜூலை மாதம் 21ம் அன்றே அது பதிவிட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

ஓர் கார் உரிமையாளர் தன்னுடைய வாகனத்தை திட்டமிட்டால், அதுகுறித்த தகவலை தங்களது தளத்தில் பதிவிட்டு தங்களது பிளாட்பாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஓலா கூறியுள்ளது. அவ்வாறு, பதிவு செய்யப்படும் வாகனங்களின் தரத்தை ஓலா ஓர் குழு அமைத்து ஆய்வு செய்து மதிப்பிடும்.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

இதன் பின்னரே மற்றொருவரின் பயன்பாட்டிற்கு அது விற்பனைக்கு வழங்கப்படும். இந்த புதிய தொழிலை தொடங்குவதற்கான வேலையில் மிக தீவிரமாக ஓலா களமிறங்கியிருக்கின்றது. ஆகையால், இதற்கான ஓர் புதிய செல்போன் செயலி அல்லது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் ஓலாவின் செயலியில் இதற்கான புதிய ஆப்ஷன் நிறுவப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

மேலும், இத்திட்டத்தை (தொழிலை) முன்னோட்டமாக பெங்களூருவில் தொடங்க ஓலா திட்டமிட்டுள்ளது. ஆகையால், பெங்களூரு வாசிகளே முதன் முதலில் ஓலாவின் இச்சேவையை பயன்படுத்த இருக்கின்றனர். இந்தியாவில் புதிய கார்களுக்கு இணையாக பயன்படுத்திய கார்கள் விற்பனை மிக அமோகமாக நடைபெற்று வருகின்றது.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

ஆகையால், இந்த துறையில் பல முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றன. அந்தவகையில், மஹிந்திரா, மாருதி சுசுகி உட்பட பல முன்னணி கார் உற்பத்தியாளர்கள்கூட பயன்படுத்தி கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

பயன்படுத்திய கார்களின் விலையும் குறைவு, பராமரிப்பதும் எளிதும் என்ற காரணத்தினால் மக்கள் அதிகளவில் செகண்டு ஹேண்டு வாகன சந்தையில் தங்களுக்கான கார்களை தேர்வு செய்கின்றனர். எனவேதான், புதிய கார்களுக்கு இணையாக நமது நாட்டில் யூஸ்டு கார்கள் மிக அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

பயன்படுத்திய கார் விற்பனையில் களமிறங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனம்... இதையும் விட்டு வைக்கலையா!

அதிலும், கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மக்கள் மத்தியில் நுழைந்ததில் இருந்து பயன்படுத்திய வாகனங்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஓலா இந்த பிரிவில் தனது கால் தடத்தை பதிக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ola planning to sell used cars via online
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X