அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை களமிறக்க ஓலா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ளது.

அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

வாடகை கார் சந்தையில் முன்னிலை வகிக்கும் ஓலா நிறுவனம் அடுத்து மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்கி உள்ளது. முதலாவதாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை களமிறக்க உள்ளது. மின்சார ஸ்கூட்டர் மார்க்கெட்டை அதிர வைக்கும் வகையில், இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் மற்றும் விலை இருக்கும் என்பதால், அதிக ஆவலை கிளறி உள்ளது.

அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

மேலும், தனது மின்சார ஸ்கூட்டர் தயாரிப்புக்காக ஓசூரில் புதிய ஆலையை அமைத்து வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுக்க 2 மில்லியன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்ய முடியும். உலகிலேயே மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆலையாகவும் இது இருக்கும்.

அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

இந்த நிலையில், மின்சார ஸ்கூட்டரை தொடர்நது பல்வேறு வகைகளிலும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் திட்டம் உள்ளது என்று ஓலா நிறுவனத்தின் ஸ்தாபகர் பவிஷ் அகர்வால் தெரிவித்து இருந்தார். இதன்படி, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன தயாரிப்பு திட்டமும் ஓலா வசம் உள்ளது தெரிய வந்தது.

அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது மின்சார கார் தயாரிக்கும் திட்டத்தை ஓலா கையில் எடுத்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

ஓலா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் எலெக்ட்ரிக் ஸ்கேட்போர்டு என்ற சேஸியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு இருக்கும். அதாவது, எலெக்ட்ரிக் கார்களுக்காக இந்த சேஸிதான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

எலெக்ட்ரிக் காரின் பேட்டரித் தொகுப்பு, மின் மோட்டார் உள்ளிட்ட அனைத்தும் இந்த சேஸியுடன் ஒருங்கிணைந்த வகையில் கட்டமைப்பு செய்யப்படும். இதனால், பிற வாகன சேஸீ வகைகளை விட இந்த ஸ்கேட்போர்டு சேஸியின் கீழ் புதிய காரை கட்டமைப்பது எளிதானதாகவும், முதலீடு குறைவானதாகவும் இருக்கும்.

அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

இந்த புதிய பேட்டரி காரை மிகவும் சவாலான விலையில் நகர்ப்புற பயன்பாட்டு அம்சங்களுடன் ஓலா உருவாக்கும் என்று தெரிகிறது. எதிர்காலத்தில் தனது வாடகை கார் வர்த்தகத்தில் இந்த எலெக்ட்ரிக் கார்களை அதிக அளவில் பயன்படுத்தவும் திட்டம் இருப்பதாக தெரிகிறது.

அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

மேலும், விலை மிக குறைவாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் இந்த எலெக்ட்ரிக் கார் சந்தையில் புதிய பாதையை வகுத்துக் கொடுக்கும் வாய்ப்பும் இருக்கிறது.

அப்படிபோடு... பெரும் திட்டத்துடன் காய் நகர்த்தும் ஓலா... அடுத்து எலெக்ட்ரிக் காரை களமிறக்குகிறது!

தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க் மூலமாக மிக விரைவாக சார்ஜ் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். அதிக இடங்களில் எலெக்ட்ரிக் சார்ஜர் நிலையங்களை அமைக்க ஓலா திட்டமிட்டு இருப்பதால், சார்ஜ் தீர்ந்து போகும் கவலை இல்லாமல் நகர்ப்புறத்தில் இந்த கார்களை எளிதாக இயக்க முடியும்.

Most Read Articles
--

மேலும்... #ஓலா #ola
English summary
According to report, Ola Electric is planning to launch compact electric car in India.
Story first published: Friday, April 30, 2021, 13:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X