டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்களுக்கென தனித் தனியாக நான்கு ஹாரியர் எஸ்யூவி காரை வாங்கியிருக்கின்றனர். இதற்கான காரணத்தை நான்காவது நபராக ஹாரியர் காரை வாங்கிய இளைஞர் வெளியிட்டுள்ளார். வாருங்கள் இதுகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!!

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஹாரியர் மாடலும் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இக்காரையே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்களுக்கென தனி தனியாக வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை டாடா கார் ஃபேமிலியாக மாறியிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் வெளியிட்டிருக்கின்றார்.

டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!!

பொதுவாக, டாடா கார்களுக்கென இந்தியாவில் தனித்துமான சந்தை நிலவி வருகின்றது. நிறுவனத்தின் மீதிருக்கும் நம்பக தன்மையே இதற்கு காரணம். இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் டாடா ஹாரியர் காரை தனி தனியாக வாங்கியிருக்கின்றனர்.

டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!!

நான்காவது ஆளாக டாடா ஹாரியர் காரை தேர்வு செய்த நபர், தான் ஏன் ஹாரியர் எஸ்யூவி-யைத் தேர்வு செய்தேன் என்பதற்கான காரணத்தை கூறியிருக்கின்றார். இதனை வீடியோ வாயிலாக அவர் வெளியிட்டிருக்கின்றார். அவ்வீடியோவினை தனது ஃப்யூவல் இன்ஜெக்டட் யுட்யூப் சேனல் வாயிலாக அவர் வெளியிட்டுள்ளார்.

டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!!

ஏன் நான்காவது நபராக டாடா ஹாரியர் வாங்கப்பட்டது?

இளைஞர் முதலில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி காரையே புக் செய்திருக்கின்றார். ஆனால், அக்காரின் உட்புறம் வெள்ளை நிற கூறுகளை அதிகம் கொண்டிருந்ததால், முன்பதிவை உடனடியாக அவர் ரத்து செய்தார். பராமரிப்பு செலவு அதிகரிக்கும் என்கிற காரணத்தினால் முடிவை மாற்றியிருக்கின்றார்.

டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!!

மேலும், ஹாரியர் காருடன் ஒப்பிடுகையில் க்ரெட்டா சற்று குறைவான குவாலிட்டியில் இருப்பதாக அவர் உணர்ந்திருக்கின்றார். இதுபோன்ற காரணங்களினாலயே ஹூண்டாய் க்ரெட்டா காரை தவிர்த்துவிட்டு ஹாரியர் காரின் பக்கம் அவர் தாவியிருக்கின்றார்.

டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!!

அதேசயம், டாடா ஹாரியர் பட்ஜெட் விலைக் கொண்ட காராகவும் இருக்கின்றது. இதுவும் இளைஞரின் தாவலுக்கு ஓர் காரணமாக அமைந்துள்ளது. டாடாவின் முழு கருப்பு நிறத்திலான எஸ்யூவி காரையே இளைஞர் வாங்கியிருக்கின்றார். 'டார்க் எடிசன்' எனும் பெயரில் இக்கார் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!!

அதேசமயம், டாடா ஹாரியர் காரை வாங்கியிருக்கும் நான்கு பேர்களில் ஒருவர்கூட ஹாரியர் எஸ்யூவி காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கவில்லையாம். டெஸ்ட் டிரைவ் செய்யாமலே அக்காரை அவர்கள் வாங்கியிருக்கின்றனர். இது கூடுதல் சுவாரஷ்ய தகவலாக அமைந்துள்ளது.

டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!!

அதிகம் விரும்புகின்ற காரணத்தினால் அனைத்து பயணங்களுக்கும் டாடா ஹாரியரை காரையே இளைஞர் அதிகம் பயன்படுத்துவதாக கூறியுள்ளார். வாங்கிய மிகக் குறைந்த காலத்திலேயே 4,200 கிமீ தூரம் வரை அவர் பயணித்திருக்கின்றார்.

டாடா ஹாரியர் காரை வாங்கி குவிக்கும் ஒற்றை குடும்பம்... ஏற்கனவே 3 இருந்த நிலையில் 4ஆவதாக ஒன்று சேர்க்கப்பட்டது!!

டாடா ஹாரியர் எஸ்யூவி டார்க் எடிசன் 22.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. நெடுஞ்சாலை மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற காராக இது இருக்கின்றது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரில் கைரோடெக் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Image Courtesy: Fuel Injected

2.0 லிட்டர் அளவிலான இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இக்காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ரூ. 13.99 லட்சம் தொடங்கி ரூ. 20.45 லட்சம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
One Family Buys 4 Tata Harrier SUV Car In India: Fourth Owner Explains Why?.. Read In Tamil.
Story first published: Saturday, April 24, 2021, 13:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X