இந்த மாநிலத்தில்தான் பழைய வாகனங்கள் ரொம்ப அதிகமாக இருக்கு... ஷாக் தகவல் வெளியிட்ட மத்திய அமைச்சகம்...

பழைய வாகனங்கள் அதிகம் பயன்பாட்டில் இருக்கும் பட்டியலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. ஆனால், எல்லாவற்றைக் காட்டிலும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றால் இயங்கும் வாகனங்களினாலயே அதிகம் சுற்றுச்சூழல் மாசடைவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதிலும், குறிப்பாக அதிக வயது கொண்ட வாகனங்களின் இயக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

எனவேதான் பழைய வாகனங்களை முழுமையாக நாட்டின் சாலைகளில் இருந்து அப்புறத்த வேண்டும் என்பதில் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அதி-தீவீரம் காட்டி வருகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் 2021 பட்ஜெட்டின்போது பழைய வாகனங்களை அழிப்பதற்கான திட்டம் பற்றிய தகவலை வெளியிட்டது.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

இதைனைத் தொடர்ந்து மிக சமீபத்தில் இத்திட்டத்தின் கொள்கை பற்றிய தகவலை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகன கணக்கெடுப்பு பணியையும் அரசு மேற்கொண்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பணியில் ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் நான்கு கோடிக்கும் அதிகமான 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

மத்திய அரசு அனைத்து மாநிலங்களின் வாகனங்கள் பற்றிய தகவலையும் டிஜிட்டல் மயமாக்கியிருக்கின்றது. இதில், ஆந்திரா, மபி, தெலங்கானா மற்றும் லட்சத்தீவுகள் மட்டும் அடங்காது. டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே நாடு முழுவதும் நான்கு கோடி 15 ஆண்டுகள் பழைய வாகனங்கள் தற்போதும் பயன்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

இதில், இரண்டும் கோடிக்கும் அதிகமான வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும் அதிகமான பழைய வாகனங்கள் என கூறப்படுகின்றது. அதிகபட்சமாக பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

இதில், கர்நாடகா மாநிலமே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 70 லட்சத்திற்கும் அதிகமான பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், நாட்டின் அதிகம் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் கொண்டிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகாவே முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

இதற்கு அடுத்த இடத்தை உத்தர பிரதேச மாநிலம் பிடித்திருக்கின்றது. அதாவது, 56.54 லட்சம் பழைய வாகனங்கள் இருப்பைக் கொண்டு இரண்டாம் இடத்தை உபி பிடித்துள்ளது. இங்கு, 20 ஆண்டுகள் பழைய வாகனங்கள் 24.55 லட்சத்திற்கு அதிகமாக பயன்பாட்டில் இருக்கின்றன.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

இதையடுத்து, 49.33 லட்சம் வாகனங்களைக் கொண்டு மூன்றாம் இடத்தை தலைநகர் டெல்லி பிடித்திருக்கின்றது. இங்கு அதிகபட்சமாக 35.11 லட்சம், 20 ஆண்டுகள் பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. தொடர்ந்து, 34.64 லட்சம் பழைய வாகனங்களுடன் நான்காவது இடத்தை கேரளாவும், 33.43 லட்சம் பழைய வாகனங்களை இருப்பில் கொண்டு நான்காவது இடத்தில் தமிழ்நாடும் இருக்கின்றன.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

மேலும், 25.38 லட்சம் பழைய வாகனங்களுடன் அடுத்த இடத்தை பஞ்சாப் மாநிலமும், 22.69 லட்சம் பழைய வாகனங்களுடன் மேற்வங்கம் அடுத்த இடத்தையும் பிடித்திருக்கின்றது. மஹாராஷ்டிரா, ஒடிசா, குஜராஜ், ராஜஸ்தான் மற்றும் ஹர்யானா ஆகிய மாநிலங்களில் 12.29 லட்சம் தொடங்கி 17.58 லட்சம் வரையிலான பழைய வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

மிக மிக குறைந்த எண்ணிக்கையில் பழைய வாகனங்களைக் கொண்டிருக்கும் மாநிலங்களாக ஜார்காண்ட், உத்தர்காண்ட், சத்திஷ்கர், ஹிமாச்சல், புதுச்சேரி, அசாம், பிஹார், கோவா, திரிபுரா மற்றும் பிற யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. இந்த மாநிலங்களில் 1 லட்சம் தொடங்கி 5.44 லட்சம் வரையிலான பழைய வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றன.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

இந்த வாகனங்களையே பயன்பாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. பழைய வாகன பயன்பாட்டாளர்களே அவற்றை வெறுத்து கைவிட வைக்கும் வகையில் பல்வேறு அதிரடி திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில், அண்மையில் பசுமை வரி எனும் புதிய வரியை அறிமுகப்படுத்தியது.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

இதுமட்டுமின்றி, மறு பதிவு கட்டணம் உயர்வு, ஆர்சி சான்று கட்டணம் உயர்வு, வரி உயர்வு என பல்வேறு உயர்வுகளை அரசு அறிமுகப்படுத்தியது. இதனால், பழைய வாகன பயன்பாட்டாளர்கள் பெருத்த அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். முன்பிருந்ததைக் காட்டிலும் 10 முதல் 25 மடங்கு வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

முதல் இடத்தில் கர்நாடகா... அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட சாலைபோக்குவரத்து அமைச்சகம்... தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

அதேசமயம், தாமாக முன்வந்து பயன்பாட்டில் இருக்கும் பழைய வாகனங்களை அழித்தால், புதிய வாகனங்களை வாங்கும்போது 5 சதவீத தள்ளுபடி, பதிவு கட்டணத்தில் சலுகை மற்றும் பல சலுகைகளை வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Over 4 Crore Vehicles Older Than 15 Years Are Plying On Roads Pan-India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X