பாலில் ஊறிய பிஸ்கட் போல் இரு துண்டுகளான டொயோட்டா கேம்ரி... 5 நட்சத்திர தர காருக்கே இந்த நிலைமையா?

ஐந்து நட்சத்திர தர பாதுகாப்பு திறன் கொண்ட டொயோட்டா கேம்ரி கார் விபத்தில் சிக்கி இரு துண்டுகளாக பிளந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவலை கீழே காணலாம்.

பாலில் ஊறிய பிஸ்கட் போல் இரு துண்டுகளான டொயோட்டா கேம்ரி... 5 நட்சத்திர தர காருக்கே இந்த நிலைமையா?

உலகளவில் புகழ்பெற்ற செடான் ரக கார் மாடலாக டொயோட்டா நிறுவனத்தின் கேம்ரி இருக்கின்றது. இது ஓர் பிரீமியம் தர செடான் காராகும். எனவேதான் உலக நாடுகள் பலவற்றில் இக்காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆனால், இந்தியாவிலோ இக்கார் மிகக் குறைந்தளவிலேயே விற்பனையாகி வருகின்றது.

பாலில் ஊறிய பிஸ்கட் போல் இரு துண்டுகளான டொயோட்டா கேம்ரி... 5 நட்சத்திர தர காருக்கே இந்த நிலைமையா?

சொல்லப்போனால் உலக நாடுகள் பலவற்றில் டொயோட்டாவின் வெற்றி நாயகனாகவே இக்கார் இருந்து வருகின்றது. பிரீமியம் வசதிகள், ஹைபிரிட் தொழில்நுட்பம் மற்றும் 5 ஸ்டார் பாதுகாப்பு தரம் (ஏசியன் என்சிஏபி அமைப்பு வழங்கியது) உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை இக்கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பலரின் மனம் கவர்ந்த வாகனமாக டொயோட்டா கேம்ரி இருக்கின்றது.

பாலில் ஊறிய பிஸ்கட் போல் இரு துண்டுகளான டொயோட்டா கேம்ரி... 5 நட்சத்திர தர காருக்கே இந்த நிலைமையா?

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரே சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் இரண்டு துண்டுகளாக பிளந்து, அடையாளம் காண முடியாத வகையில் நொருங்கியிருக்கின்றது. இது ஓர் 5 ஸ்டார் தர பாதுகாப்பு திறன் கொண்ட கார் என ஏசியன் என்சிஏபி அமைப்பு அங்கீகாரம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையில், டொயோட்டா கேம்ரி இத்தகைய மிக மோசமான நிலைமையைச் சந்தித்திருப்பது அக்கார் பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலில் ஊறிய பிஸ்கட் போல் இரு துண்டுகளான டொயோட்டா கேம்ரி... 5 நட்சத்திர தர காருக்கே இந்த நிலைமையா?

சவுதி அரேபியாவிலேயே இந்த கோர விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இவ்விபத்திற்கு முழுக்க முழுக்க மிதமிஞ்சிய அதி-வேகம் மட்டுமே காரணம் என கூறப்படுகின்றது. எனவேதான் கார் உரு தெரியாத அளவு மிகக் கடுமையான சேதங்களைச் சந்தித்திருக்கின்றது.

பாலில் ஊறிய பிஸ்கட் போல் இரு துண்டுகளான டொயோட்டா கேம்ரி... 5 நட்சத்திர தர காருக்கே இந்த நிலைமையா?

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் காகிதம் போல் இரு துண்டுகளாக 5 நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட கேம்ரி பிளந்திருக்கின்றது. இத்தகைய மிகக் கோரமான நிலையை கேம்ரி சந்திக்க அதிகம் வேகம் முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், எப்படி விபத்து நேர்ந்தது என்பதற்கான துள்ளியமான காரணம் தெரியவில்லை.

அதேசமயம், இந்த விபத்து சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கின்றது. குறிப்பாக, 5 நட்சத்திர ரேட்டிங் பெற்ற கார் என கூறப்படும் கேம்ரி எப்படி இம்மாதிரியான உருக்குலைந்த சூழ்நிலையைச் சந்தித்திருக்கின்றது என்பதே பலரின் கேள்வியாக இருக்கின்றது.

பாலில் ஊறிய பிஸ்கட் போல் இரு துண்டுகளான டொயோட்டா கேம்ரி... 5 நட்சத்திர தர காருக்கே இந்த நிலைமையா?

பொதுவாக, எந்தவொரு க்ராஷ்ட் செய்து பார்க்கும் அமைப்பாக இருந்தாலும் குறிப்பிட்ட வேகத்திலேயே வாகனத்தை இயக்கும். அந்தவகையில், மணிக்கு 65கி.மீட்டர் எனும் வேகத்திலேயே மோதல் வினைக்கு கேம்ரி காரை உட்படுத்தியது, ஆசியன் என்சிஏபி. இந்த வேகத்தின்போது கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே கேம்ரி 5 நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்ற தகவல் வெளியிடப்பட்டது.

பாலில் ஊறிய பிஸ்கட் போல் இரு துண்டுகளான டொயோட்டா கேம்ரி... 5 நட்சத்திர தர காருக்கே இந்த நிலைமையா?

ஆனால், தற்போது அரங்கேறியிருக்கும் விபத்து சம்பவத்தில் டொயோட்டா கேம்ரி அதன் உச்சபட்ச வேகத்திலேயே மோதலைச் சந்தித்திருக்கின்றது. இதன் விளைவாகவே இரு துண்டுகளாக பிஸ்கட்டைப் போன்று அது பிளந்திருக்கின்றது. எத்தகைய பாதுகாப்பு திறன் கொண்ட காராக இருந்தாலும் அதில் குறைந்தபட்ச வேகத்தில் செல்லும்போது மட்டுமே அது பாதுகாப்பான பயணமாக அமையும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியிருக்கின்றது.

பாலில் ஊறிய பிஸ்கட் போல் இரு துண்டுகளான டொயோட்டா கேம்ரி... 5 நட்சத்திர தர காருக்கே இந்த நிலைமையா?

டொயோட்டா கேம்ரி இந்தியாவில் ரூ. 40.59 லட்சங்கள் என்றவிலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரும் விலை மட்டுமே ஆகும். 218 பிஎச்பி மற்றும் 221 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய 2.5 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்டு பெட்ரோல் எஞ்ஜினே இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
OverSpeeding Toyota Camry Split Into Two Pieces. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X