Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 9 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா கார் விற்பனை தூள் கிளப்ப இதுதான் காரணம்... பெரும் விபத்தில் தெய்வம் போல் காப்பாற்றிய டியாகோ!!
டாடா டியாகோ கார் மிகப்பெரிய விபத்தைச் சந்தித்த போதிலும் அதில் இருந்த பயணிகளுக்கு அதீத பாதுகாப்பை வழங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு நிறைந்த கார் மாடல்களில் டியாகோவும் ஒன்று. குளோபல் என்சிஏபி நடத்திய பாதுகாப்பு தர பரிசோதனையில் இந்த கார் ஐந்திற்கு 4 நட்சத்திர ரேட்டிங்கை பெற்றது. இதனையடுத்தே இக்கார் அதீத பாதுகாப்பு திறன் கொண்ட கார் என்ற சான்று வழங்கப்பட்டது.

இதனை உறுதிப்படுத்தும் பல்வேறு விபத்து சம்பங்களில் இந்த கார் மாடல் தான் ஓர் உறுதியான தயாரிப்பு என்பதை நிரூபனம் செய்திருக்கின்றது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஓர் சமீபத்திய விபத்து நிகழ்வில் தனக்குள் பயணித்தவர்களை எந்தவித ஆபத்தும் இன்றி பாதுகாத்துள்ளது டாடா டியாகோ கார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சத்ய பிரகாஷ் ரெட்டி. இவர் தற்போது கோவா மாநிலத்தில் வசித்து வருகின்றார். அண்மையில் சொந்த ஊரான ஹைதராபாத்திற்கு ஓர் விசிட்டைக் கொடுத்த இவர் தனது நண்பர்களுடன் அஹமதாபாத்திற்கு, ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டிருக்கின்றார்.

இந்த பயணத்தின்போது தனது புத்தம் புதிய டாடா டியாகோ காரை பயன்படுத்தியிருக்கின்றார் சத்யா. இந்த காரில் சுமார் 100 கிமீ எனும் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோதே விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. விபத்தின்போது, ஓட்டுநர் உட்பட பயணிகள் யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை. குறிப்பாக, சிறு சிறு காயங்களுடன் அனைவரும் தப்பியிருக்கின்றனர்.

இந்த விபத்திற்கு சாலை நடுவே இருந்தே மிகப்பெரிய பள்ளமே காரணம் என கூறப்படுகின்றது. இந்த பள்ளத்தில் இருந்து விளகிச் செல்லும் நோக்கிலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. "பள்ளம் இருந்ததை நாங்கள் சரியாக கவனிக்கவில்லை என்றும், அப்போது மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் வந்ததன் காரணத்தினாலயே இந்த விபத்து அரங்கேறியது" எனவும் சத்யா கூறினார்.

கட்டுப்பாட்டை இழந்த டாடா டியாகோ கார் சாலையோரத்தில் இருந்து சீமை கருவேலம் மரத்தின் மீது மோதி, சாலையோரத்தில் புரண்டு சென்று விழுந்தது. இத்தகைய கோர விபத்தைச் சந்தித்த வேலையிலும் டாடா டியாகோ கார் அதன் பயணிகள் அனைவரையும் பாதுகாத்திருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் டாடாவின் தயாரிப்புகளின் மீதிருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. டாடா டியாகோ காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக இரு ஏர் பேக், இபிடி உடன் ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் கேமிரா, மிக உறுதியான உடல் கட்டமைப்பு, வேகத்தைக் கொண்டு தானாகவே கதவுகளை லாக் செய்யும் சிஸ்டம், பின் பக்க கண்ணாடி கழுவும் வைப்பர் வசதி என எக்கசக்க கருவிகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இத்தகைய அம்சங்களின் காரணத்தினாலேயே டாடா கார் மிகவும் பாதுகாப்பான வாகனம் என்ற பட்டத்தைப் பெற்றிருக்கின்றது. மேலும், நிஜத்திலும் தான் ஓர் உறுதியான வாகனம் என்பதை நிரூபித்து வருகின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 4,85,500 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதன் அதிகபட்ச விலை ரூ. 6,84,500 ஆகும். தொடர்ந்து, வாடிக்கையாளர்களை எளிதில் கவரும் நோக்கில் மிக குறைந்த இஎம்ஐ தொகையான ரூ. 3,555 என்ற கட்டணத்திலும் இக்காரை டாடா வழங்கி வருகின்றது.