2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

எஸ்யூவி கார்களுக்கான சந்தை கடந்த சில வருடங்களில் இந்தியாவில் பெரிய அளவில் விரிவடைந்து வருவதாக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். இந்த ட்ரெண்ட் எலக்ட்ரிக் வாகனங்களிலும் தொடர்ந்து வருகிறது என்றாலும், செயல்திறன்மிக்க லக்சரி கார்களை வாங்குவோர் எஸ்யூவி கார்களை தான் பெரிதும் விரும்புகின்றனர் என கூறிவிட முடியாது.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

ஏனெனில் லக்சரி கார்களை எஸ்யூவி உடலமைப்பில் பெற விரும்புபவர்கள் இருப்பதுபோல், செடான் & கூபே உடலமைப்பில் லக்சரி கார்களை வாங்க விரும்புபவர்களும் இருக்கதான் செய்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில், இந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய 5 சொகுசு கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஏ45 எஸ்

இந்தியாவின் மிக வேகமான ஹேட்ச்பேக் கார் என்கிற அடையாளத்துடன் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி பிராண்ட்டில் இருந்து இந்த 2021ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கார் ஏ45 எஸ் ஆகும். பார்ப்போரின் கண்ணை கவரும் நிறத்தேர்வுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மெர்சிடிஸ் ஏஎம்ஜி காரில் அதிகப்பட்சமாக 421 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய ஏஎம்ஜி ஏ45 எஸ் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 270கிமீ ஆகும். பாக்கெட் ராக்கெட் என செல்லமாக அழைக்கப்படும் இந்த ஏஎம்ஜி மாடலின் இந்திய எக்ஸ்ஷோரூம் விலை ரூ79.50 லட்சங்களாக தற்சமயம் உள்ளது. இந்த மெர்சிடிஸ் காரினை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பு இதன் அறிமுக சமயத்தில் நமக்கு கிடைத்திருந்தது. அதன்மூலமாக நாங்கள் அறிந்து கொண்ட விஷயங்களை முழு விபரமாக நமது செய்திதளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

ஃபெராரி ரோமா

இந்தியாவில் ஃபெராரி கார்கள் வரிசையில் இந்த 2021ஆம் ஆண்டில் புதியதாக இணைக்கப்பட்ட மாடல் தான் ரோமா ஆகும். புத்துணர்ச்சியான தோற்றத்தில், மாடர்ன் ஃபெராரி காராக உருவாக்கப்பட்டுள்ள இது இந்திய ஷோரூம்களை இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் வந்தடைய துவங்கியது.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

ஃபெராரி ரோமாவில் 3.9 லிட்டர் வி8 என்ஜினை தயாரிப்பு நிறுவனம் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 612 பிஎச்பி மற்றும் 760 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு இரட்டை-க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இந்த ஃபெராரி லக்சரி காரின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3.76 கோடியாக உள்ளது.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

பிஎம்டபிள்யூ எம்340ஐ

இந்த ஆண்டில் ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்திய எஸ்5 ஸ்போர்ட்பேக் காருக்கு போட்டியாக பிஎம்டபிள்யூ நிறுவனம் கொண்டுவந்த மாடல் தான் எம்340ஐ ஆகும். வழக்கமான பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 4-கதவு செடான் காரில் இருந்து வேறுப்படும் விதமாக வெளிப்புற & உட்புற தோற்றத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றங்களை 'எம் சிகிச்சை' என்கிற பெயரில் எம்340ஐ பெற்று வந்துள்ளது.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

இதில் பொருத்தப்படுகின்ற 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 382 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் ஆற்றல்களை கண்ட்ரோல் செய்ய 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறும் பிஎம்டபிள்யூ எம்340ஐ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.61.90 லட்சங்களாக உள்ளது.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

மஸராட்டி எம்சி20

கிப்லி, குவாட்ரோபோர்டே மற்றும் லெவெண்டே கார்களை தொடர்ந்து மஸராட்டி நிறுவனம் அதன் இரு-கதவு ஸ்போர்ட்ஸ் காரான எம்சி20-ஐயும் 2021ஆம் ஆண்டிற்காக அப்டேட் செய்திருந்தது. ரூ.3.65 கோடி என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த மஸராட்டி ஸ்போர்ட்ஸ் காரில் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

அதிகப்பட்சமாக 621 பிஎச்பி மற்றும் 730 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் ஆற்றலை காரின் பின் சக்கரங்களுக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. மஸராட்டி எம்சி20 காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 2.9 வினாடிகளில் எட்டிவிடலாம்.

2021இல் அறிமுகப்படுத்த டாப்-5 சொகுசு லக்சரி கார்கள்!! உங்களது தேர்வு எதுவாக இருக்கும்?

ஆடி எஸ்5 & ஆர்எஸ்5

ஆடி நிறுவனம் இந்த ஆண்டில் இரு புதிய செயல்திறன்மிக்க கார்களாக எஸ்5 ஸ்போர்ட்பேக் மற்றும் ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடல்களை அறிமுகப்படுத்தியது. அன்றாட அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கு ஏற்றவைகளாக மட்டுமின்றி இந்த ஆடி ஸ்போர்ட்பேக் கார்கள் சாலையில் பீய்த்து கொண்டும் செல்லக்கூடியவை. அதிகப்பட்சமாக மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ஆடி எஸ்5 கார்களில் 3.0 லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்படுகிறது.

Most Read Articles
English summary
Performance cars that made it to india in 2021
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X