இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

இந்திய மின் வாகன சந்தையில் பிரபல நிறுவனம் தனது காலடியை எடுத்து வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

காற்று மாசுபாட்டைக் கருத்தில் உலகமே மின் வாகன பயன்பாட்டை நோக்கி நகர தொடங்கியிருக்கின்றது. இதன் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கவனத்தை மின் வாகன உற்பத்தியின் பக்கம் திருப்பியிருக்கின்றன. இதன் விளைவாக, உலகின் ஏதேனும் ஓர் மூலையில் குறைந்த பட்சம் ஒரு புதுமுக மின் வாகனம் பற்றிய தகவலாவது வெளி வந்த வண்ணம் இருக்கின்றது.

இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

இந்த நிலையில், உலக புகழ்பெற்ற பியாஜியோ நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் காலடி எடுத்து வைத்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், தனது முதல் இரு மின்சார வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை, மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்.

இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

அபே பிராண்டின்கீழே இந்த வாகனங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இ-எக்ஸ்ட்ரா எஃப்எக்ஸ் எனும் பெயரில் மின் வாகனம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இந்த வாகனத்திற்கு அறிமுக விலையாக ரூ. 3.12 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஓர் கார்கோ ரக வாகனமாகும். இதனை லோடு மற்றும் சரக்கு வாகனமாக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

இதைத்தொடர்ந்து, பயணிகளுக்கான ஆட்டோ வெர்ஷனிலும் ஓர் மின்சார மூன்று வாகனத்தை பியாஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. அபே இ-சிட்டி எனும் பெயரிலேயே இந்த வாகனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ. 2.83 லட்சம் ஆகும். மேற்கூறிய இரண்டுமே எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

அபே இ-எக்ஸ்ட்ரா எஃப்எக்ஸ் சுமார் ஆறு அடி நீளம் கொண்ட கார்கோ வாகனம். இதில், 9.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ஜ் பற்றிய விபரம் வெளியிடப்படவில்லை. இந்த வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்து வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

அதாவது, லோடு வாகனம், குப்பைகளை அகற்றும் வாகனம் அல்லது டெலிவரி வாகனம் என வர்த்தக ரீதியாக பயன்படும் வகையில் எந்த மாதிரியான உருவத்தில் வேண்டுமானாலும் மாடிஃபை செய்து வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

இவ்விரு புதுமுக மின்சார வாகனத்திலும் நீல நிறத்திலான ஹெட்லேம்ப், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், பன்முக தகவல்களை வழங்கக் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பூஸ்ட் மோட், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என பல்வேறு சிறப்பு வசதிகளை நிறுவனம் நிலை நிறுத்தியிருக்கின்றது.

இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

இந்த வாகனங்களைப் பராமரிப்பது மற்றும் பயன்படுத்துவது எரிபொருள் எஞ்ஜின் கொண்ட வாகனங்களைக் காட்டிலும் மிக சுலபம் என தெரிவித்திருக்கின்றது தயாரிப்பு நிறுவனம். இவ்வாகனத்தை மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிமீ வாரண்டியுடன் இந்த விற்பனைக்கு வழங்க இருக்கின்றது பியாஜியோ.

இந்திய மின்வாகன சந்தையில் நுழைகிறது பிரபல நிறுவனம்... என்ன மாதிரியான வாகனத்தை களமிறக்கியிருக்கு தெரியுமா?..

இதுதவிர, மூன்று வரு இலவச பராமரிப்பு பேக்கேஜை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு அறிமுக சலுகையாக வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், நிச்சயம் இந்த வாகனம் அதன் பயன்பாட்டாளர்களுக்கு அதிக பலனை அளிக்கும் என யூகிக்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 23, 2021, 18:25 [IST]
English summary
Piaggio Launches Electric 3-Wheeler For Cargo And Passenger Segment. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+