900 கிலோ எடை, கவர்ச்சியான ஸ்டைல்... விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் கார் பக்கம் குவியும் கோடீஸ்வரர்கள்!

விற்பனைக்கான அறிமுகத்தைப் பெறுவதற்கு முன்னரே ஓர் சூப்பர் காரின் பக்கம் உலக கோடீஸ்வரர்கள் சாய தொடங்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கவர்ச்சியான ஸ்டைல், 900 கிலோ எடை... விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் கார் பக்கம் குவியும் கோடீஸ்வரர்கள்!

வரைபடத்தில் இருக்கும் ஓவியத்தைபோல் ஓர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் கவர்ச்சியான மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் அந்த சூப்பர் கார் இருப்பதனாலயே வாகனத்துறை ஆர்வலர்கள் இக்காரை காராக பார்க்கலாம் ஓவியமாக ரசிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கேற்ப இக்காருக்கு பிகாஸோ பிஎஸ் 01 என்ற பெயரை தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கின்றது.

கவர்ச்சியான ஸ்டைல், 900 கிலோ எடை... விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் கார் பக்கம் குவியும் கோடீஸ்வரர்கள்!

ஸ்விட்சர்லாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் பிகாஸோ ஆட்டோமோட்டிவ் நிறுவனமே இக்காரை தற்போது அறிமுகம் செய்த நிறுவனம் ஆகும். 10.5 அடி நீளத்தில் இக்கார் உருவாக்கப்பட்டு வருகின்றது. மேலும், 900 கிலோ எடையில் இதனைக் கட்டமைத்திருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறுகின்றது.

கவர்ச்சியான ஸ்டைல், 900 கிலோ எடை... விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் கார் பக்கம் குவியும் கோடீஸ்வரர்கள்!

இது பிற சூப்பர் கார்களையும் மிக மிக குறைந்த எடையாகும். ஆகையால் சாலையில் செல்லும் பறவைகளின் இறகை போல் அது காற்றில் பறக்கும் என கூறப்படுகின்றது. இக்காரில் இடம்பெற இருக்கும் எஞ்ஜின் மற்றும் பிற சிறப்பம்சங்கள் பற்றிய தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவலை அது வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கவர்ச்சியான ஸ்டைல், 900 கிலோ எடை... விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் கார் பக்கம் குவியும் கோடீஸ்வரர்கள்!

இருப்பினும், தற்போது வெளியாகியிருக்கும் தகவலே சூப்பர் கார் பிரியர்களின் ஆர்வத்தை பெரிதும் வகையில் அமைந்துள்ளது. விரைவில் இக்கார் விற்பனைக்கு வரவிருப்பதால் நாட்டின் சில முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் புக்கிங்கை வழங்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கவர்ச்சியான ஸ்டைல், 900 கிலோ எடை... விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் கார் பக்கம் குவியும் கோடீஸ்வரர்கள்!

இந்த தகவலை கார் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றது. இக்கார் மிக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இதனை எக்ஸ்க்ளூசிவ் தயாரிப்பாகவேஉலக வாகனச் சந்தைக் கவனிக்கத் தொடங்கியிருக்கின்றது.

கவர்ச்சியான ஸ்டைல், 900 கிலோ எடை... விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் கார் பக்கம் குவியும் கோடீஸ்வரர்கள்!

தற்போது வெளியாகி வரும் தகவலின்படி இக்கார் வி6, 8, 10 அல்லது 12 இவற்றில் ஏதேனும் ஓர் எஞ்ஜினே இடம்பெறும் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.

கவர்ச்சியான ஸ்டைல், 900 கிலோ எடை... விற்பனைக்கு வருவதற்கு முன்னரே சூப்பர் கார் பக்கம் குவியும் கோடீஸ்வரர்கள்!

அதேசமயம், உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இக்கார் மின்சார வெர்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான பதிலை எதிர்காலமே சொல்ல இருக்கின்றது.

Most Read Articles
English summary
Picasso Automotive Reveals PS-01 supercar Pics. Read In Tamil.
Story first published: Friday, January 8, 2021, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X