எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்! இததான் நம்ம பிரதமர் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காரு!

பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்கு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ் 650 குவார்ட் (Mercedes-Maybach S 650 Guard) களமிறக்கப்பட்டிருக்கின்றது. இந்த காரின் விலை மற்றும் சிறப்பு வசதிகள் பற்றிய தகவலைக் கீழே காணலாம், வாங்க.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ் 650 குவார்ட் (Mercedes-Maybach S 650 Guard) சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக பயன்படுத்தி வந்த ரேஞ்ஜ் ரோவர் மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஆகிய கார்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த எஸ் 650 குவார்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

இந்த காரே அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி பயன்படுத்தினார். டெல்லியில் அமையில் ஹைதராபாத் இல்லத்தில் அண்மையில் இவர்களின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, விஆர்10-லெவல் பாதுகாப்புடன் மேபேக் எஸ் 650 காரில் வந்தார்.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ் 650 குவார்ட் மிக மிக அதிக பாதுகாப்பு திறனைக் கொண்ட வாகனமாகும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் 15 கிலோ டிஎன்டி வெடி பொருள் இரண்டு மீட்டர் இடைவெளிக்குள் வெடித்தாலும் கூட இக்கார் பெரியளவில் சேதத்தைச் சந்திக்காது. அதேநேரேத்தில், காருக்குள் இருப்பவர்களுக்கு பன் மடங்கு பாதுகாப்பை வழங்கும்.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் சிறு கீரல்கூட காரின் உட்புறத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படாது. இத்தகைய வசதியைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ் 650 குவார்ட் காரை பிரதமர் மோடியின் பயன்பாட்டிற்காகக் களமிறக்கப்பட்டிருக்கின்றது.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

இந்த வாகனம் வெடி பொருளின் தாக்கத்தை மட்டுமில்லைங்க துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் ஏகே47 தாக்குதல்களைக் கூட மிக அசால்டாக தாங்கிக் கொள்ளும். இதன் தாக்கங்களைக் தாங்கிக் கொள்ளும் வகையில் மிக உறுதியான உடற்கூடு மற்றும் கண்ணாடிகளே மேபேக் எஸ் 650 குவார்ட் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

வெடிகுண்டு, துப்பாக்கி இதுல இருந்து மட்டுமில்லைங்க விஷ வாயு தாக்குதலில் இருந்தும் இந்த கார் அதன் பயணிகளைக் காப்பாற்றும். காருக்குள் தனிப்பட்ட சுவாச காற்று வழங்கும் வசதி கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது ஆபத்து காலங்களில் தானாக செயல்பட்டு தேவையான தூய காற்றோட்டத்தை காருக்குள் இருப்பவர்களுக்கு வழங்கும்.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

இதுமாதிரியான பன்மடங்கு அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இக்காரின் விலை பல மடங்கு அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 12 கோடிகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரில் மிக சிறந்த திறன் வெளிப்பாட்டிற்காக 6.0 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

இந்த 516 பிஎச்பி மற்றும் 900 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதன் உச்ச வேகம் மணிக்கு 160 கிமீ ஆகும். இந்த காரில் அதி சிறப்பு வாய்ந்த டயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த டயர்கள் நெருப்பின் தாக்கத்தை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

பற்றி எரியும் காட்டு தீயில் நுழைந்தால்கூட இதன் டயர்கள் பெரியளவில் பாதிப்பைச் சந்திக்காது என கூறப்படுகின்றது. இதேபோல் இது அவ்வளவு எளிதில் பஞ்சரையும் சந்திக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி எண்ணற்ற சொகுசு வசதிகளையும் இந்த மெர்சிடிஸ் பென்ஸ் தயாரிப்பு வழங்குகின்றது.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

மசாஜ் செய்யும் வசதி கொண்ட இருக்கைகள், அதிக லேக்ரூம் வசதி என பல்வேறு சொகுசு அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், அதிக பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகள் நிறைந்த காராக இது காட்சியளிக்கின்றது. இத்தகைய வாகனத்தையே பிரதமரின் பயன்பாட்டிற்கு புதிதாக களமிறக்கப்பட்டிருக்கின்றது.

எப்பா இந்த காரோட விலை 12 கோடி ரூபாயாம்... இததான் நம்ம பிரதமர் பயன்படுத்துறாரு... அப்படி என்னங்க இருக்கு இந்த பென்ஸ் காருல?

பிரதமர் நரேதந்திர மோடி புல்லட் ப்ரூஃப் வசதிக் கொண்ட மஹிந்திரா ஸ்கார்பியோவை குஜராஜ் மாநில முதல்வராக இருந்தபோது பயன்படுத்தினார். இதன் பின்னர் உயர் பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் வோக் மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் இவற்றைத் தொடர்ந்து தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் எஸ் 650 குவார்ட் காரின் பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pm narendra modi s newest car is a mercedes maybach s 650 guard
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X