கனவுலகூட வாங்க முடியாது போலிருக்கே... மிக மிக அதிக விலையில் விற்பனைக்கு வந்த மின்சார கார்! இவ்ளோ அதிகமா?
பிரபல சொகுசு உற்பத்தி நிறுவனம் மிக மிக அதிக விலையில் ஓர் எலெக்ட்ரிக் காரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான போர்ஷே (Porsche), அதன் முழு மின்சாரத்தால் இயங்கும் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. போர்ஷே டேகான் (Taycan EV) எலெக்ட்ரிக் காரே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இக்காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 1.5 கோடி என்ற உச்சபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகபட்ச விலையால் நாட்டின் மிகவும் விலையுயர்ந்த எலெக்ட்ரிக் காராக போர்ஷே டேகான் மாறியிருக்கின்றது. இந்த காருக்கான புக்கிங் பணிகள் தற்போது நாட்டில் தொடங்கியுள்ளன.

இப்போது இதனை புக் செய்தால் 2022ம் ஆண்டிலேயே பெற்றுக் கொள்ள முடியும். ஆம், போர்ஷே டேகான் எலெக்ட்ரிக் காரை பெற வேண்டுமானால் அடுத்த ஆண்டு முதல் காலாண்டு வரை காத்திருக்க வேண்டுமாம். போர்ஷே டேகான் இவி மின்சார கார் உற்பத்திக்காக நிறுவனம் 50 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

போர்ஷே நிறுவனம் இந்தியாவில் மின்சாரத்தால் டேகான் இவி எலெக்ட்ரிக் காரை மட்டுமே இன்று விற்பனைக்குக் களமிறக்கவில்லை. நிறுவனம், மற்றுமொரு, புதுப்பிக்கப்பட்ட மசான் ஆடம்பர எஸ்யூவி காரையும் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சொகுசு வாகனம் வரும் 2022 ஜனவரியில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும்.

புதிய டேகான் இவி மின்சார காரில் அதிகபட்ச ரேஞ்ஜை வழங்குவதற்காக 560 kwh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும். இதன் மின் மோட்டாரில் விஐடி (ViT) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மின்சார கார் நான்கு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டேகான், டேகான் 4எஸ், டர்போ மற்றும் டர்போ எஸ் ஆகிய தேர்வுகளிலேயே டேகான் மின்சார கார் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், டர்போ எஸ் தேர்வானது மிக அதிக திறன் கொண்டதாக காட்சியளிக்கின்றது.

டர்போ எஸ் தேர்வில் 560 கிலோவாட் திறன் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 761 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும், இந்த வெர்ஷன் வெறும் 2.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய திறன் வெளிப்பாட்டால் நாட்டின் மிக அதிக திறன் கொண்ட எலெக்ட்ரிக் காராக போர்ஷே டேகான் இவி காட்சியளிக்கின்றது. இந்த கார்களின் அறிமுகத்தைத் தொடர்ந்து தற்போது நிறுவனம் பனமேரா கார் மாடலின் பிளாட்டினம் எடிசனை (Porsche Panamera Platinum Edition) வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் சிறப்பு பதிப்பு வெர்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications








